Monday, August 17, 2009

Fwd: என்று தணியும் இந்த அடிமையின் மோகம்

இது எங்க சுதந்திர தினம்!

-----------------------------------

இது
முதலாளிகள் மாற்றத்தை
அடிமைகள் கொண்டாடும்
திருநாள்!

குண்டு துளைக்காத
கண்ணாடி கூண்டுக்குள்
வீராவேசமாக பிரதமர்!
வேடிக்கை பார்க்கும்
வெளிநாட்டுத் தலைவர்கள்!
பதட்டத்துடன்
பட்டொளிவீசிப் பறக்கும்
தேசியக்கொடி!

உணர்வு கொப்பளிக்க
கொடியட்டையை
சட்டையில் குத்துமுன்பே
காவி மேல் வருமா?
பச்சை மேல் வருமா?
என்ற குழப்பம்
மனதை "சுருக்"கென்று குத்தும்!
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே
தொங்கவிடும்
அடையாள அட்டையல்லவா?!

இலவசமாக
வம்பளந்த குறுஞ்செய்தி…
இன்று மட்டும்
தேச பக்தர்கள்
அம்பானி, டாட்டா,
ஏழ்மையை விரட்ட
இருபத்தைந்து பைசா
பிடுங்கப்படும்!

பள்ளிகளில்
சாலையோரங்களில்
கொடியேற்றுமிடமெல்லாம்
இனிப்பு மிட்டாய்க்காக
கத்திருக்கும் குழந்தைகள்!
காந்தி நோட்டுக்களால்
கோட்டை பிடித்தவர்கள்
கொடியேற்றி
காந்தியின் பெருமை பேசி
கையாட்டி விட்டு
காரிலேறிச் சென்றபடி...
அடுத்த ஊரில் பெருமை பேச!

விடுமுறையை முன்னிட்டு
தாமதமாக எழுமுன்னே
தேசபக்திப் பாடல்களை
முடித்துவிட்டு
நமீதாவுடன் ஒருநாளைச்
செலவிடத் தொடங்கும்
உலகத் தொலைக்காட்சிகள்!
குடும்பமே
தொலைக்காட்சி முன்னே
தவமிருக்க...
தலைவி மட்டும்
சுதந்திரமின்றி
அடுக்களைக்கும் இங்குமாய்
அலைபாய்ந்தபடி!


இணையத்தளத்தில் நான் ரசித்த கவிதை....
சுதந்திர தின
நிகழ்வுகளை மிக
அருமையாக சொல்லிய
கவிதை....

--
இப்படிக்கு,
நா. சிவப்பிரகாசம்

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Thursday, July 2, 2009

மதங்கள் எனது பார்வையில்.

மனிதனை நெறிப்படுத்தவென தோன்றியவை மதங்கள். ஆதி மனிதன் தன்னைத் தான் ஒழுங்குபடுத்திக்கொள்ள தோற்றுவிக்கப்பட்டவை மதங்கள். ஆதிமனிதன் சிறு சிறு குழுவாகவும், பல குழு அடங்கிய ஒரு இனமாகவும் வாழ்ந்த போது அந்த இனத்துக்குள் ஒற்றுமை ஓங்கவும், அச்சம் நீங்கவும், தனிமனித வளர்ச்சியடையவும் மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஆதி காலகட்டங்களில் மதம் ஒரு வளர்ச்சியடையாத, ஒரு இனத்தின் நலன்களை பாதுகாக்கக் கூடிய அல்லது குறுகிய நோக்கத்தை கொண்ட நம்பிக்கைகளின் கலவையாக இருந்தது. இயற்கையின் பிரம்மாண்டத்தின் மீது இருந்த பயம், பிணி, நோய், மூப்பு, இறப்பு போன்றவை மனிதனை நிலை குலையச் செய்த போது, அவனுக்கு நம்பிக்கை தருவதாகவும் இருந்தது மதம் . அது அந்த இனம் வாழ்ந்த நிலம், இயற்கை சூழல், முதன்மைத் தொழில், உணவு ஆகியவற்றை சார்ந்த வடிவம் கொண்டதாக இருந்தது. இந்த மதம் அல்லது சமயம், ஒரு மனித இனத்தின் கலை, இலக்கியம், நாகரீகம், மருத்துவம், மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.

மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய அடைய, அவன் நிலங்களை கடக்க விரும்பினான். அவன் தன்னோடு தன் மத நம்பிக்கைகளையும் எடுத்துச் சென்றான். காலப்போக்கில் பூகோல ரீதியாக இணைப்பின்றி இருந்த இனங்கள், அல்லது தங்களுக்கென்று ஒரு தனி 'மத' 'சமய' கோட்பாட்டை கொண்ட மக்கள், இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் வேறொரு இனம் வாழ்த்த பகுதிக்கு, அவர்கள் நிலங்களுக்குள் செல்ல, நம்பிக்கைகள் ஒன்றை ஒன்று தழுவியும் எதிர்த்தும் நின்றன. தனது மரபு வழியாகவும், ஆழ்ந்த நம்பிக்கை மூலமாகவும் தனக்குள் பதிந்த மத வழிமுறைகள் பிற இனத்தாலும்; மதத்தாலும் நிராகரிக்கப் பட்டமை இடம்பெயர்ந்த அல்லது பிற இன மக்களை உள்வாங்கிய இனத்தின் உணர்வை குத்த நேரிட்டது. அன்று தொடங்கி இன்று வரை மனிதனின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட மதம் வெவ்வேறு காலங்களில் இடங்களில் மனிதனுக்கு எதிராக மாறத்தொடங்கியது.

தொன்று தொட்டே இவ்வாறு பிற மத, சமய, இன, மொழி, அடிப்படையில் மனிதனை மனிதன் வேறுபடுத்திப் பார்த்துக்கொண்டான். அதனால், தான் சார்ந்து நிற்கும் மதமே உயர்ந்தது என்று எண்ணிய மனிதன் பிற மதம் சார்ந்த மனிதர்களை எதிர்த்தான். தான் வாழ்ந்த நிலம் மற்றும் இயற்க்கை ஆதாரம் தனக்கும், தன் மதம் சார்ந்த இனத்திற்குமே சொந்தம் என்று நம்பினான், பின் அதுவே, இந்த மொத்த பூமியும் தான் நம்பும் இறைவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையை தோற்றுவித்தது. இந்த எண்ணம் நிலங்களை அபகரிக்கும் போராக மாறியது. தான் அபகரித்த நிலங்களில் இருந்த சிறிய இனங்களின் மீதும், தங்களுக்கென்று ஒரு மத நம்பிகையுடன் வாழ்ந்த மக்களின் மீதும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் மத நம்பிக்கைகளை திணித்தனர்.

கலாச்சார ரீதியிலும், அறிவியல் ரீதியிலும் தாழ்ந்த வளர்ச்சி அடைந்திருந்த மதம் அல்லது இனம் அல்லது இனங்கள் வீழ்ந்தது. போரில் தோற்கடிக்கப்பட்ட மக்கள் அல்லது போர் புரிய தெரியாத மக்கள், தங்களை ஆட்கொண்டவர்களை கண்டு பயந்தனர், வியந்தனர். காலப்போக்கில் பெரிய மதங்கள் சிறிய மதங்களை விழுங்கி பெருத்தன. இவ்வாறு இன்று கணக்கில் வராமல் அழிந்த மதங்கள் பல ஆயிரம் கூட இருக்கலாம். இந்த மத, சமய, இன, மொழி, நிற அடிப்படையிலான மக்களையும், அவர் தம் நிலங்களையும் வளங்களையும் ஆக்கிரமிக்கும் வழக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் தீராத போராக, தீவிரவாதமாக இன்று நம்மிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த தீயில் கருகிய மனிதனின் ஆற்றல் அளவிட முடியாதது. ஆம், ஒவ்வொரு இனத்தை சேர்ந்த மனிதனாலும் கண்டறியப்பட்ட; உருவாக்கப்பட்ட எத்தனையோ அறிவியல், இலக்கிய படைப்புகள் இந்த தீயில் கருகின. மனிதனின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்ய முடிந்த அறிவியல் வளர்ச்சி இந்த பேதங்களை கலைந்திருக்க வேண்டும்.

ஆனால், மனிதனின் எல்லையற்ற ஆசைகள் அதற்க்கு இன்றும் தடையாக இருக்கிறது. ஆம், நாம் எதை அறிவியலால் விளக்க இயலாதோ, எதை புரிந்து கொள்ள முடிய வில்லையோ, அல்லது எது இல்லையோ அதை தெரிந்து கொள்ள நம் பேராசையால் முனைகிறோம். அது தான் "இறப்பும் அதற்குப் பின்னும்". வாழும் போது பிறரை அழித்து, துன்புறுத்தி, ஆக்கிரமித்து வாழ நினைக்கும் மனிதன், தான் இறந்த பிறகு நிம்மதியாக சொர்கத்தில் வாழ்வோமென நம்புகிறான்; விரும்புகிறான்.

இந்த மாயயை அவனுக்குள் தோற்றுவித்தது எது? பூமியில் அமைதி திரும்ப முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவனை உணர முடியாமல் போனதற்கு காரணம் என்ன? மதம்.

நாம் அனைவரும் ஒன்றில் இருந்து தான் வந்தோம். அந்த ஒன்று உன்னுடையதும் அல்ல என்னுடையதும் அல்ல. நீ நான் என்ற பேதம் ஒழியும் போது; அல்லது இந்த பேதம் என்னும் தீ அனைவரையும் அழித்து முடிக்கும் போது அது எது என்பது புரிய வரும்.

அனைப்போமா பேதம் என்ற தீயை. மதம் என்ற மாயயை?

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Tuesday, May 19, 2009

இங்கிலாந்தில் பயங்கரவாதி இந்தியாவில் தியாகி......


உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் இ படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

துவள வில்லை உதம் சிங்இ அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-ஆயச-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-துரடல-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர்இ ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....

ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

"ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது"
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?

நல்ல நியாம்டா சாமி.............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ழூழூ தின்னும் மனிதர்களுக்குஇ இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......

ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன்இ யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன்இ விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோஇ 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால்இ நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''


ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................

மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினிஇ பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறதுஇ தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........

அட நாய்களே.....

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை

மனிதனாக இருந்தால் போதும்.....


இப்படிக்கு
மனிதர்
தமிழர்
இந்தியர்

நன்றி : தூவானம்
--
SIVA PRAKASAM
Software Engineer,
Mob: +91(0)9944005554
http://tamilarnesan.blogspot.com/

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Monday, May 18, 2009

கொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்படுகின்றனர்.வன்னியில் மக்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது பீரங்கிகளை ஏற்றி இலங்கை இராணுவம் பெற்றுவரும் வெற்றியை கொண்டாடிவரும் சிங்கள காடையர்கள், கொழும்புவில் இருக்கும் தமிழர்களை இராணுவத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தி அவர்கள் அடையாள அட்டையை பரிசோதித்து தமிழன் என்று உறுதிப்படுத்திக்கொண்டு பின் அவர்களை தனிமைப்படுத்தி அவமானப்படுத்துவதாகவும், தமிழர்கள், வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வீடுகளுக்குள் பட்டசுகளை வெடித்து அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன..

இன்று அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தன் மாலை செய்தியில் கொழும்புவில் இருந்து பேசிய ஒரு தமிழரின் செவ்வியை ஒளிபரப்பியது. அதில் அவர் இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

மேலும், சிங்களக்காடையர்கள், இங்கிலாந்து தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து, சாளரங்களின் கண்ணாடிகளை உடைத்ததாகவும், டேவிட் மில்லிபாந்து (இங்கிலாந்து வெளிவிவகார) அமைச்சர் உருவ பொம்மையை எரித்ததாகவும் கூறுகிறார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தும் வாழ்விழந்தும் இருக்கும் நிலையில், தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இத்தகைய கொண்டாட்டங்கள் ஆபத்தின் அறிகுறிகளாகவே பார்க்கப்படுகிறது..


இறந்தவன் பிணத்தின் மீது கொண்டாட்டங்கள் நடத்தும் இவர்களின் மத்தியில் தமிழர்கள் எப்படி தலை நிமிர்ந்து வாழ முடியும் என்ற கேள்வி நம் மனதில் அழுத்தமாக எழுகிறது??!

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Tuesday, May 12, 2009

மென்பொருள் இளைஞர்களும் இந்திய தேர்தல்களும் : பங்களிப்பு என்ன?இன்று காலை எழுந்ததும் ஒரு போர் வீரனை போல நடந்து சென்று தமிழின துரோகிகளை எதிர்க்க என்னிடம் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு ஜனநாயக ஆயுதத்தை சரியாக பயன்படுத்திவிட்டு வந்த கையோடு இந்த பதிவை இடுகிறேன்!

நான் தென் சென்னையில் அடையாறு அவையா தொடக்கப்பள்ளிக்கு சென்று என்னுடைய வாக்கை செலுத்தினேன். அப்போது இந்திய நேரம் காலை 7 மணி. வழக்கம் போல வாக்குப்பதிவு தொடங்கியவுடன் இருக்கும் சொற்ப கூட்டமே இருந்தது, குறிப்பாக கழக கண்மணிகள் முதல் வேலையாக தத்தமது வாக்குகளை செலுத்த நின்றுகொண்டிருந்தனர்.

நான் அந்த பகுதிக்கு அரசியல் ரீதியில் புதியவன், எனது சொந்த ஊர் திருப்பூர், ஆனால் சில மாதங்களுக்கு முன்பே முயற்சிகளின் எடுத்து எனது பெயரை புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறச்செய்து விட்டேன். எனது அடையாளத்தை சந்தேகித்த உள்ளூர் முகவர்களிடம், என்னை சரியான வாகாளர்தான் என அடையாளம் காட்டியவர், எனக்கு பெயர்பட்டியலில் இணைக்க உதவிய எங்கள் பகுதி கௌன்சிளர். அதனால் எதிர்ப்புகள் அடங்க தேர்தல் அதிகாரி எனக்கு கருப்பு மையிட அனுமதித்தார்.

இது நான் வாக்களிக்கும் 4 வது தேர்தல் என்றாலும், வாக்கு இயந்திரத்தை கண்டவுடன் எனது நெஞ்சில் பரபரப்பு, ஒரு ராட்சத அலையில் பயணிப்பதை போல உணர்ந்தேன், ஒரு கணப்பொழுதில், அங்கு இருந்த சலசலப்புக்கள் நிசப்தமாகி மனம் இத்தனை நாளாக, நான் கடுமையாக எதிர்த்த; விமர்சித்த காங்கிரஸ் தலைவர்களையும், மழைபோல நம்பி ஏமாற்றிய சுயநல கலைஞர் ஆகியோர் செய்த ஏமாற்று வித்தைகளையும், அங்கு என் இன மக்கள் தெருக்களில் எழுப்பிய அவல குரல்களையும் காலத்தில் பயணித்து காட்டியது.

இந்த இடைவெளியில், எனது கண்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு நேர் எதிர் சின்னத்தை கண்டுபிடித்திருந்தது. சற்றும் தாமதிக்காமல், எனது படுகொலை செய்யப்படும்; ஒடுக்கப்பட்ட இனத்தின் எதிர்ப்பை பதிவு செய்து விட்டு வெளியேறினேன்.

அங்கு வந்திருந்தவர்களில் பலர் முதியவர்கள், பெண்கள், அவர்கள் யாருக்கு வாகளிபார்கள்? என்ற எண்ணத்தைவிட எனக்கு மேலோங்கிய கேள்வி எங்கே என் இனத்து இளைஞர்கள்?? வாரம்தோறும் வெளியிடப்படும் புதிய தமிழ் சினிமாக்களை பார்ப்பதற்கு அலைமோதும் இளைஞர் பட்டாளம் எங்கே? இரவு பகலாக கணினியில் மாயாது எழுதும் அறிவார்ந்த மக்கள் எங்கே? தேர்தலை ஒட்டி மாதக்கணக்கில் பல மணி நேரங்களை செலவழித்து விமர்சனங்கள்; கேலிகள் செய்த மாந்தர்கள் எங்கே?

முதியவர்களும், பெண்களும் தமிழ்நாட்டில் அனேகமாக தங்கள் வீட்டின் ஆண் மகன் பரிந்துரைக்கும் கட்சிகளுக்கே வாக்களிபார்கள். இவ்வாறு பரிந்துரை செய்பவர்கள் பெரும்பாலும் உடன் பிரப்புக்கலாகவோ ரத்தத்தின் தத்தங்கலாகவோ இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் தத்தமது தலைவர்கள், கருணாநிதியாக இருக்கட்டும், ஜெயலலிதாவாக இருக்கட்டும், அவர்கள் என்னதான் அநியாயங்கள் செய்தாலும் அந்த கட்சிகளுக்கே தங்கள் வாக்குகளையும் தங்கள் குடும்பத்து வாக்குகளையும் அளிப்பவர்கள்.

குறிப்பிட தகுந்த அளவு தங்கள் முதல் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தவிருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள். இவர்களிடம் பரவியிருக்கும் கேள்வி ஏன் விஜய் தேர்தலில் போட்டியிடவில்லை?, நயன்தாரா நமீதாவுக்கு இவர்களிடம் உள்ள அபிமானத்தை காட்ட வாய்ப்பில்லாமல் போனது ஒரு வருத்தமாக தெரிகிறது.

இவற்றை சிந்தித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன், சில உண்மைகள் தெளிவாக புரிந்தது...
- இன்றைய காலகட்டத்தில், படித்த இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊர்களில் இல்லை.
- சொந்த மாநிலத்திலேயும், நாட்டின் பல பகுதிகலேயும், வெளிநாடுகளிலும் வேலை வைப்பு காரணமாக இடம் பெயந்து வாழும் நம் இளைஞர்களில் எண்ணிக்கை மிக அதிகம்.
- இவர்கள் தேர்தலுக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணிப்பது முடியாத காரியம்தான்.
- சொந்த ஊர்களிலேயே இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள்; இருந்தும் வாக்களிக்க மனமில்லாதவர்கள்.

ஆகையால், நான் அவர்களுக்கு வைக்கும் வேண்டுகோள், நீங்கள் ஓட்டு போட முடியவில்லை என்றாலும், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொந்த ஊரில் உள்ள சொந்தங்களிடம் அவர்களை தவறாமல் வாக்களிக்க வேண்டுங்கள், இப்போதைய அரசியல் உண்மைகளை; நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள் நிச்சயம் கேட்ப்பார்கள், என்னிடம் நேற்று முதல் 10 நண்பர்கள்; உறவினர்கள் யாருக்கு ஓட்டு போடுவது? என்று கேட்டார்கள். அது போன்றவர்களை ஊக்கப்படுத்துங்கள்; உதவுங்கள். அப்போது தேர்தல் முடிவுகளை பார்க்க சுவாரச்யமாகவாவது இருக்கும்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Monday, May 11, 2009

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் இலங்கையை கண்டித்துள்ளார் : காணொளி

டேவிட் மில்லிபான்ட் கடந்த மூன்று நாட்களாக நடந்துவரும் மனித படுகொலைகளை வன்மையாக கண்டித்துள்ளார். அவர் பேசிய காட்சி இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
> ஐ.நா.வின் பேச்சாளரான கோர்டன் வைஸ் அவர்கள் இலங்கையில் எதிர்பாத்த இரத்தக்குளியல் "blood Bath" நடந்து விட்டது என்று கூறியதை சுட்டிக்காட்டிய மில்லிபான்ட், பெரும் தொகையான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

> கடந்த சனிக்கிழமை தொடக்கம் திங்கள் வரை நீடித்த கடும் தாக்குதல்கள், அங்கு பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது என்றும் இது தொடர்பாக தாம் போகல்ல கமாவிடம் பேசியதாகவும், கொலைகள் நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறினார்.

(கவனிக்க : பிரித்தானிய அமைச்சர் கண்டிக்கின்ற அளவுக்கு படுகொலைகள் நடந்த அதே நாளில் இங்கு 20 மைல் தொலைவில் உள்ள நம்மிடம் நமது தமிழ் காவலர் கலைஞர், இத்தாலி அன்னை சூனியா இருவரும் 'தங்கள் முயற்சியால் தான் போர் நின்றது' என்று கூறியது - நம்மை எவ்வளவு முட்டாள்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதை உணர்த்தும்!)

> மேலும், அவர் இந்த போரை சாட்சி இன்றி நடக்கும் போர் "war without witness" என்று வர்ணித்துள்ளார். அவர் இது தொடர்பாக N.G.O மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களுடன் பேசவிருப்பதாக கூறினார்.

> பிரித்தானிய நிருபர் நாடு கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மில்லிபான்ட், இலங்கை என்ன செய்ய வேண்டுமோ அதற்க்கு எதிராக நடந்துகொள்கிறது என்று சாடினார். அதாவது நிருபர்களையும் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் அனுமதித்து ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கண்காணிப்பு அனுமதிக்கப்பட வேண்டும் அனால் அதற்கு மாறாக நிருபர்களை நாடுகடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

> இலங்கையின் இந்த போக்கு பாதுகாப்பு சபை உறுபினர்களை கவலை கொள்ள செய்துள்ளதாகவும், ஐ.நா இலங்கை விவகாரங்களை பற்றி தெரிந்து கொள்வது மட்டுப்படுத்தபடுவது ஒரு பெரும் பின்னடைவாக உள்ளது என்றார்.

> முக்கியமாக சர்வதேச நாணய நிதியம் மறுவாழ்வுக்காக அளிக்கும் நிதியை இலங்கை எப்படி பயன்படுத்துகிறது என்பதை பிரிடன் கூர்ந்து கவனிக்கும் என்றும் கூறினார்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Sunday, May 10, 2009

வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது : கருணாநிதி
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை (சோ)சூனியா காந்தியுடன் சேர்த்து உரையாற்றிய கருணா நதி, உதிர்த்த வார்த்தைகளில் சில வருமாறு..

கருணா : வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது அந்தக்காலம்; வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது என்பது இந்தக்காலம்.
- ஒரு அடிமை தன் எஜமானரை பற்றி பெருமையாக பேசுவதைப் போலத்தான் இருக்கிறது.

கருணா : சொக்கத்தங்கம் சோனியா.
- தங்கத்தை, சொக்கத்தங்கம் என்று அறிய எப்படி சோதனை செய்வார்கள்?

கருணா : தியாகத் திருவிளக்கு என்ற அடைமொழியை சோனியாவுக்குக் கொடுத்துள்ளோம்.
- ஆம் முக்கிய அமைச்சர் பதவிகளை இவர் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் வழங்கும் தியாகிதான்!!

இதையெல்லாம் விடக் கொடுமை சோனியா பேசியதுதான்.

சோனியா : இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவதே காங்கிரஸின் லட்சியம். எங்கள் அரசின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாகத்தான் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறது.

- 20, 30 மைல் தொலைவில் அவர் பேசிக்கொண்டு இருக்கும் தருணத்தில் இரண்டு நாட்காளாக தொடர்து பீரங்கி தாக்குதல், பல்குழல் எறிகணை, முக்கியமாக வான் வழித்தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் அதில் உயிரிழந்திருப்பதாகவும் - புதிய பாதுகாப்பு வலயத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவர் சண்முக ராஜ கூறுகிறார்!!

அன்னை - தங்களால்தான் போர் நிறுத்தப்பட்டது என்று பொய்பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார் அதே வேளை அங்கு கொத்துகுண்டுகள் நம் தமிழர்கள் தலையில் விழுந்து கொண்டிருக்கிறது. இந்த பொய் பிரச்சார நாடகத்தை நம் மக்கள் ஆட்டு மந்தைகளைப் போல நின்று ரசித்துக்கொண்டு இருகிறார்கள். இவர் பேசி முடிக்கும்போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் உயிரிழந்தும், சில ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும் இருப்பார்கள்!

சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நம் நாட்டில் யாராலும் தோற்கடிக்க முடியாது... இதை அவர்கள் நன்கு உணர்திருக்கிறார்கள்...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Saturday, May 9, 2009

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்
[ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009, 10:16 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.

பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாகவும் தீவிரவமாகவும் இருக்கின்றது எனவும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடலங்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


நன்றி : புதினம்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Monday, May 4, 2009

ஒரு உண்ணாவிரதமும் பல கேள்விகளும்

கருணாநிதி உண்ணாவிரதம்.
ஈழ மக்களை காக்க உண்ணாவிரதத்தை தொடங்கினார்; முடித்தார்.

இந்த கேள்விகளை கேட்க நேரம் இன்னும் கடக்கவில்லை...


1. உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுத்தார்கள் ஐயா,?

நாங்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு எங்கங்கோ அலைந்து திரிந்த போதும் தேர்தல் வரை ஈழ தமிழர்களுக்கான எந்த போரட்டங்களுக்கும் அனுமதி கொடுக்க முடியாது என்று காவல் துறையினர் சொன்னார்களே... உங்களுக்கு மட்டும் யார் கொடுத்தது அனுமதி?


2. ஈழத்திற்காக மக்கள் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டால் அவர்களை அலைகழித்து ஓட..ஓட.. விரட்டுவார்களே.. நீங்கள் மட்டும் எப்படி அறிவிப்பின்றி அதிகாலையிலே உண்ணாவிரதம் இருக்கின்றிர்கள்,


3. துரத்தி துரத்தி அடித்தாலும்,எத்தனை இன்னல்கள் கொடுத்தாலும் பிடிவாதமாக,நிச்சயமாக உண்ணவிரதம் இருப்போம் என உண்ணாவிரதம் இருந்த எம் இன வீர பெண்களை உண்ணாவிரம் இருந்தபோது கிண்டல்,கேலி செய்த உங்கள் வேட்புமனு தாக்கல் பார்டீகள் உங்களை கிண்டல் செய்யமாட்டார்களா..?


4. ஈழ தமிழர்களுக்காக நீங்கள் ஏதாவது செய்தால் பலத்த பாதுக்காப்பு மக்கள் செய்தால் தேசிய பாதுகாப்பா..?


5.ஈழ தமிழர்களுக்காக என்னையே அர்பணிக்கிறேன் என்று சொல்லி உண்ணாவிரதம் இருக்கின்றீர்களே..
ஈழ தமிழர்களை கொல்ல காங்கிரஸ் உடன் சேர்ந்து ஆயுதங்கள் அனுப்பிவிட்டு, கவிதை,கண்டனம்,தந்தி,தொலைபேசி என காலத்தை தாழ்த்தி மக்களை சாகடித்து விட்டு தேர்தலுக்காக உண்ணாவிரதம் என்று சொல்லிவரும் நீங்கள் செய்தது அர்பணம் என்றால்...

தமிழனாக பிறந்து, ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கமுடியாமல்,
மக்களின் காசை கொள்ளை அடிக்காத,
நினைத்த நேரத்தில் அமைச்சரை மாற்றமுடியாத,
நினைத்த நேரத்தில் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாத,
சுவிஸ் வங்கி என்றால் என்ன என்று தெரியாத,
டெண்டர் காண்ட்ராக்ட் கமிசன்களை அறியாத,
என் மக்கள் எம் இனம் காப்பாற படவேண்டும் என்று மட்டுமே நினைத்துதங்களையே தீக்கிரையாக்கி கொண்ட முத்துகுமார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் செய்ததற்க்கு பெயர் என்னவென்று சொல்வது,


6.உங்களைப்போல் உண்ணாவிரதம் இருக்க எல்லோருக்கும் அனுமதி கொடுத்திருந்தால் இதுநாள் வரை லட்சக்கண்க்கான மக்கள் உண்ணாவிரதம் இருந்து, ஈழ தமிழனின் நிலையை உலகுக்கு எளிதில் எடுத்துரைந்திருக்க முடியும், அப்போது ராஜபக்சேவுக்கு புரிந்திருந்திருக்கும் தமிழனை அடித்தால் உலகம் நம்மை அடிக்கும் என்று உணர்ந்திருப்பான்,


7.விளம்பரம் தேடிக்கொள்வதில் யாருக்கு முதலிடம் என்று போட்டி வைத்தால் சத்தியமாக உங்களுக்கு போட்டியாக கூட எவனாலும் வரமுடியாது,
எத்தனையோ தீக்குளிப்புகள்,எத்தனையோ தடையை மீறிய உண்ணாவிரதங்கள்,லட்சக்கணக்கிலான போரட்டங்கள்,எல்லாவற்றையுமே இருட்டடிப்பு செய்த உங்கள் குடும்ப உடகங்கள், உங்கள் உண்ணாவிரத்தை மட்டும் நேரடி ஒலி,ஒளி பரப்பு செய்து சாதனை புரிவது ஒன்றும் ஆச்சர்ய படவைக்கவில்லை,
உங்களை விட மக்களின் போராட்டங்களும்,உண்ணாவிரதமும்,தீக்குளிப்புமா முக்கியம்....,


8. உண்மையில் ஈழ தமிழனை காப்பது உங்களின் எண்ணம் என்றால்..


ஏன் ஈழ தமிழனுக்காக மாணவர்கள் போராடிய போது அவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து போராட்டத்தை நசுக்கினீர்கள்?

ஏன் வழக்கறிஞர்கள் மீது காவல் துறையை கொண்டு தாக்குதல் நடத்தி அவர்களின் போராட்டத்தை வழுவிழக்க செய்திர்கள்?

ஏன் தியாகி முத்துகுமாரின் திருவுடலை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்தீர்கள்?

ஏன் ஈழ தமிழனுக்காக எவன் பேசினாலும் தேசியபாதுகாப்பு சட்டத்தை வைத்து குத்தினிர்கள்?

ஏன் ஈழ தமிழனுக்கான போரட்டங்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், இதன் மூலம் உலகத் தமிழன் சொந்த இனத்தின் அழிவை பார்த்து போராட்டங்கள் எதுவும் செய்யாத நாய்கள் என்று எங்களை காரித்துப்ப மாட்டானா?

ஏன் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்திர்கள்,லண்டன்,பாரிஸ்,அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜெர்மனி,கனடா போன்ற அனைத்து நாடுகளிலும் தமிழனுக்காக உண்ணாவிரதம் இருக்கும் போது,அவர்கலெல்லாம் அதை செய்யாத தமிழ் நாட்டில் இருப்பவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்க மாட்டார்களா?

ஏன் M.P-க்களை வைத்து ராஜினாமா நாடகம் ஆடினிர்கள்?


மத்திய அரசுதான் நீங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால்...மேற்கண்ட அனைத்தினையும் செய்தது நீங்கள்தானே....

இதன் மூலம் ஒன்று தெரிகிறது,இங்கு அடிமைகளாய் இருந்து சாவதற்கு..

ஈழத்தில் தமிழனோடு பட்டினி கிடந்து மண்ணை தின்றோ.. அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசு கொடுத்த குண்டுகளை மார்பில் ஏந்தியோ சாகலாம் என்றுதான் தோன்றுகிறது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது வந்து உண்ணாவிரதம் என்றால் என்ன அர்த்தம்...


9. ஈழ தமிழர் பிரச்சனையில் மட்டும் தயவு செய்து நாடகங்களை நிறுத்தி விட்டு உணர்வு பூர்வமாக எதேனும் செய்ய இயலுமா என்று பாருங்கள்,

மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எதையாவது செய்வோம் என்ற மலிவான அரசியலை இதில் புகுத்துவதை நிறுத்திவிட்டு ஈழ தமிழனை காக்க ஆக்கபூர்வமான செயல்பாடுகளை செய்யமுடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுவிடுங்கள்,


10. நாளையே ப்ரனாப் முக்கர்ஜி ராஜபக்சேவை நல்லிரவில் சந்தித்து விட்டு வந்தால், தயவு செய்து இது என் உண்ணாவிரததிற்கு கிடைத்த வெற்றிதான் என்று சொல்லி மக்கள் காதில் பூ இல்லை..இல்லை.. மாலையை சுற்றாதீர்கள், அவர் எதற்காக அங்கு செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்,


11.உங்களுக்கு அறிவுரை சொல்லவோ,வாழ்த்துக்கள் சொல்லவோ எங்களுக்கு வயதில்லை அதனால் நாங்கள் வணங்கி கேட்டுகொள்வதெல்லம் "பதவியை விட பெயர்தான்தான் முக்கியம்" இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகும் காமராஜர்,கக்கன் போன்றோர்களின் பெயர்கள் நிலைத்திருக்கும்,அவர்களைபோல் இல்லை என்றாலும் பரவாயில்லை ஹிட்லர்,நீரோ போன்றவர்களின் பெயர்வரிசைக்கு சென்றுவிடாதீர்கள் என்பதுதான் நம் மக்களின் விருப்பம்,


11. மன பூர்வமான அதிரடி முடிவை எடுக்காமல் வெறுமனே நல்ல செய்தி வரும், தந்தி அடித்தேன்,என்று தேவையற்ற ஒன்று,தனி ஈழம் தான் தீர்வு என்பது அனைவரும் அறிந்த ஒன்று அதை முனெடுத்து சொல்லாமல் பேசிகொண்டேயிருப்பது தேவையற்றது, ஜெயலலிதாவே சொல்லிவிட்டார்கள் உங்கள் பங்குக்கு தேர்தலுக்காகவாவது ஏதாவது அதிரடியாக சொல்லவில்லை என்றால் நீங்கள் வெத்துவேட்டு என்ற எதிர்கட்சிகளின் கூற்று உண்மையாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

நன்றி : தமிழ்மக்கள்குரல்

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Tuesday, April 28, 2009

மழை நின்றும் தூவானம் விடவில்லை - கருணாநிதிநேற்று கருணாநிதியிடம் பி.பி.சி செய்தி நிறுவனம் கேட்ட கேள்வி ஒன்றும் அவர் அதற்க்கு அளித்த பதிலும் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது' போல இருந்தது...

பி.பி.சி : "இலங்கை அரசு அறிவித்ததற்கு மாறாக கனரக ஆயுதங்களை பயன்படுத்துகிறது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டு இருகிறதே இதை பற்றி உங்கள் கருத்து என்ன?!

கருணா : "இது மழை விட்டும் தூவானம் விடாதது போல" என்று பதிலளித்தார்.


தேர்தல் நாடகத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் குவிந்துவிட்டன போலும்! ராஜபக்க்ஷே உண்மையாகவே போரை நிறுத்திவிட்டதாகவும் அதற்க்கு முழு காரணம் தாம் தான் என்றும் கருணாநிதி மனப் பிராந்தியில் இருக்கிறார் போல தெரிகிறது...

பல தசாப்தங்களாக பதவி அதிகாரம் முதலியவற்றை அனுபவித்தும், தன் குடும்பத்தை ஒரு பணக்கார, அதிகாரமைய அமைப்பாக மாற்றிய பின்னும், 85 வயதாகியும் உயிரை விட மனம் வராமல் பல வழிகளிலும் (மந்திரம்; தந்திரம் உள்ளிட்ட) முயலும் ஒரு நபர், இந்த உலகத்தின் எந்த சுகங்களையும் காணாமல் கொத்து குண்டுகளுக்கு கொத்து கொத்தாய் உயிர் துறக்கும் சிறு குழந்தைகளும், பெண்களும், தங்கள் தலை மேல் எப்போது ராட்சத விமானங்கள் குண்டு பொழியும் என்று அச்சத்தில் இறக்கும் வலியை 'தூவானம்' என்று வர்ணிப்பதுதான் தமிழர் நெஞ்சங்களில் கருணாநிதி என்ற ராஜபக்க்ஷே தன் பங்குக்கு போடும் கனரக குண்டு; ஆயுதம் எல்லாம்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Friday, April 24, 2009

ஏன் கருணாநிதி ஒரு சுய நலவாதி??
கருணாநிதி நமது முதல்வர், அவர் தமிழர்களுக்காக தமிழ் இனத்துக்காக பல நன்மைகளை செய்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது...

அவர் உரை எழுதிய பழந்தமிழ் நூல்கள், அவர் எழுதிய கட்டுரைகள், கதைகள், அனைத்தும் தமிழுக்கு நிச்சயம் நெடுநாள் புகழ் சேர்க்கும் தான்.

இது அவருடைய நீண்ட நாள் சாதனைகள், ஆனால், தற்ப்போது சில வருடங்களாக சுமார் 10-15 வருடங்களாக அவர், தன் குடும்ப நலனிலேயே கண்ணாய் இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக இந்த ஈழத்தமிழர் விவகாரம் எழுந்தபோது முழுத் தமிழினமும், தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி நடக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு எந்த துயரும் ஏற்பட அனுமதிக்க மாட்டார் என்று எதிர்கட்சியில் இருப்பவர்கள் கூட நம்பினார்கள், ஏன் பிரபாகரன் கூட நம்பியிருந்திருக்க கூடும். ஆனால் நடந்தது என்ன என்று நம் அனைவருக்கும் தெரியும், நாடாளுமன்ற உறிப்பினர்கள் பதவிவிலகள், மனித சங்கிலி, போராட்டம், என்று எழுந்தது அதை விட வேகமாக வலுவிழந்தது. ஏன்?

அதை விடக் குறிப்பாக, தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமிழக அரசும் மத்திய அரசும் செய்யும் பிழையை, கொள்கை பிழையை சுட்டி காட்டியவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ட்டனர். இலங்கை இராணுவத்தை கண்டிபவர்கள் தீவிரவாதியாக பார்க்கப்பட்டனர்!

எல்லாம் தாண்டி தேர்தல் வர, கருணாநிதியின் உடன் பிறப்புகள் தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர். கலைஞர் என்பவர் எப்போதும் சுயானலதிற்க்காக் செயல்படமாட்டார் என்று நம்பினார்கள். ஆனால் நடந்தது என்ன? நேற்று பந்த் என்று முந்தாநாள் அறிவித்தார். ஈழதமிழர்களுக்காக, அவர்கள் துயரங்களில் நாமும் பங்கு போட்டு கொள்ளும் அடையாளமாக, அங்கு உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடு பட வேண்டும் என்றார்.

இது போன்ற சமயங்களில் அரசியல் பாகுபாடின்றி தமிழர்கள் இதற்க்கு ஆதரவு தர வேண்டும் என்றார். சரி, இப்போதாவது இதை செய்கிறார் இவர் நல்லவராக இருப்பாரோ, திருந்தி இருப்பாரோ ஒரு வேளை தான் செய்த பிழையை திருத்திகொள்ள முனைகிராரோ என்றெல்லாம் என்னும் பலரிடமும், கலைஞர் அவர்களை தமிழினத்தலைவர் என்று இன்னும எண்ணிக் கொண்டிருக்கும் பலரிடமும், ஏன் அவரிடமே நாம் கேட்கும் கேள்வி இது தான்.

தாங்கள் பிறரை வேளை நிறுத்தம் செய்ய சொன்னீர்களே உங்கள் குடும்ப தொலைகாட்சிகளுக்கு விடுமுறை அளித்தீர்களா? எதோ மகளுக்கு செய்தி சென்றடைய வேண்டும் என்ற விருப்பமா? அப்படியென்றால், செய்தி சேனல்களை மட்டும் இயக்கிக்கொண்டு இருக்கலாமே, மாறாக சிரிப்பு சேனல்களிலும், தங்கள் பெயரிலேயே இயங்கும் சேனலிலும் புத்தம் புதிய சிறப்பு திரைப்படம் போடுகிறீர்களே?? மேலும் உங்கள் குடும்ப நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து சேனல்களிலும் ஒரே கூத்தும் கும்மாலமும் இடம்பெற்றது ஏன்? ஏன் ஈழ வரலாற்றை தமிழ் மன்னர்கள் அங்கு ஆட்சி செய்ததை தமிழர்களின் இனப் பெருமையை காட்டி இருக்கலாமே என்று கூட கேட்க்கவில்லை தமிழர்களுக்காக ஒரு நிகழ்ச்சியையாவது கொடுதிருக்காமே??

இதுதான் நீங்கள் காட்டும் அனுதாபமா? நீங்கள் கெடுவது மட்டுமின்றி நாடையும் கெடுத்து வைக்கிறீர்களே இது நியாமமா கலைஞர் அவர்களே??

உங்களுக்கு விளம்பர தாரர் முக்கியம், மற்ற நிறுவன முதலாளிகளுக்கு அவர்களுடைய வாடிக்கையாளர்கள் முகியமில்லையா? இதில் உங்களுக்கு இரட்டை ஆதாயம், வருமானத்துக்கு வருமானம், மக்களும் எங்கும் வெளியே சுற்றித் திரிய மாட்டார்கள், அதனால், பந்த் முழு வெற்றி என்று அறிவித்து பெருமை கொள்ளலாம் இல்லையா??

மக்களோ மடையர்கள், நீங்களோ காரியக்காரர் சபாஸ்!!! இதிலிருந்தே தெரிகிறதே உங்களை பற்றி!! சுயநலவாதிகளின் முடிசூடா மன்னன் நீங்கள் வாழ்க!!

இந்த மக்கள் எப்போது இதயெல்லாம் உணரப் போகின்றனரோ அப்போதுதான் தமிழினம் சற்றே மானத்தோடு உலக அரங்கில் நிமிர முடியும்...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Saturday, April 18, 2009

சிந்தனையின் முரண்பாடு

தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி!

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Wednesday, March 25, 2009

தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழ தமிழர்களை பாதுகாக்க நினைபோர் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

ஓராண்டுக்கும் மேலாக நமது தொப்புள்கொடி உறவுகள், ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள், பிஞ்சுக் குழந்தைகள் என பாகுபாடின்றி தினம் 50 - 100 என இலக்கு வைத்து கொல்லப்பட்டு இன்று வரை சுமார் 3000 பேருக்கு மேல் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர், இது தொடர்து கொண்டே இருப்பதை கண்டு நம்மில் பலரது மன நிலை ஆரோகியம் குன்றி வருவது உண்மையே!

நம் கண்களுக்கு முன் இத்தகைய கொடுமைகள் நடந்தும், அதை நாம் வரியாக கட்டிய பணத்தை கொண்டே செய்து முடிக்கும் வன்கொடுமையை உணர்ந்தும், ஏதும் செய்ய முடிய வில்லையே என தினம் செய்திகளில் முகம் புதைத்து கண்ணீர் விடும் என்னை போன்ற பல பல தமிழ் நெஞ்சங்கள் தங்கள் நெஞ்சுக்கு நீதி இன்றி தவிக்கின்ற சூழலில் வருகிறது தேர்தல்!!

ஈழ தமிழர் பிரச்சனையில் 'காங்கிரஸ்' தி.மு.க வின் கரங்களை கட்டிபோடுகிறது அல்லது தி.மு.க காங்கிரசை திருப்த்திபடுத்துவதன் மூலம் ஆட்சியை தக்கவைக்கலாம் என்று எண்ணுகிறது. எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள். ஆனால் தி.மு.க மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துவிட்டது, இதை துரதிஷ்ட வசமானது அல்லது சுயநலவாதத்தின் உச்சகட்டம் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். இரண்டில் ஏதோ ஒன்று உண்மை.

ம.தி.மு.க ஈழ தமிழர்கள் விசயத்தில் நீண்ட காலமாக (கட்சி தொடங்கிய காலம் முதல்) ஒரு வலுவான நிலைப்பாட்டை, அவர்களுக்கு தனி நாடே தீர்வு என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சி. தனது கட்சியின் அங்கத்தினர் பதவி இன்றி இருந்தால் அவர்களை மாற்று(தாய்) கட்சிக்கு எளிதில் இழுத்து விடுவார்கள் என்பதால் மாற்று கருத்துடைய அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும், தனது நிலைப்பாட்டிலிருந்து வளைந்து கொடுக்காத கட்சி அல்லது தலைவர்.

பா.ம.க, மாநிலத்தில் - காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்தான் இனப்படுகொலை நடக்கிறது என்று உண்மையாய் உண்மையை மேடைக்கு மேடை முழங்கினாலும், அதே காங்கிரஸ் கட்சி தந்த மந்திரிப் பதவியை உதர முடியாமல் இருதலை கொல்லி எறும்பு போல உள்ளது அல்லது பதவி ஆசை காரணமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள், இவர்களுக்கும் ம.தி.மு.க வுக்கும் ஈழ விசயத்தில் முரண்பாடு இல்லை, ம.தி.மு.க என்ன காரணத்துக்காக அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறதோ அதே காரணம்தான் இவர்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கவும்.

கம்யூனிஸ்டுகள், அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்படுவதையும் அதற்க்கு 'காங்கிரஸ்' துணை நிற்ப்பதையும் மாநிலத்தில் கண்டிக்கிறது.

தே.மு.தி.க வும், ஈழ மக்களின் மீது கரிசனம் கொண்டு இருப்பதை, மக்களை சந்திக்கும்போது எல்லாம் எடுத்து கூறுகிறது. அதுவும் மதில் மேல் பூனை போல் உள்ளதால் இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது.

தமிழகத்தை பொறுத்த வரை இதில் (ஐயா / அம்மா) ஏதோ ஒரு கூட்டணியில் இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலை ஒருபுறம் இருக்கிறது. இதை நாம் மறந்து விட முடியாது. ஏனென்றால், பல வருட காலமாக மாறி மாறி ஆட்சியில் அமரும் அய்யாவும், அம்மாவும், காவல்த்துறை, சட்டத்துறை என முக்கிய இடங்களில் தனி செல்வாக்குடன் இருகிறார்கள், இன்று யாரவது நான் மக்களுக்கு நல்லது செய்கிறேன் எனக்கு ஒட்டு போடுங்கள் என்று கிளம்பினால் என்ன நடக்கும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (தெரியாதவர்கள் பின்நூட்டமிடவும் நான் சொல்கிறேன்!)

'காங்கிரஸ்' - இவர்களுக்கு ஈழம் என்றால் நினைவுக்கு வருவது ராஜீவ் கொலை மட்டுமே. அதை தாண்டி எதையும் யோசிக்க தயாராகாதவர்கள், தினம் தினம் தன் இன மக்கள், அப்பாவி மக்கள், தங்கள் கட்சி தலைமையின் தவறான பார்வையினால் கொல்லப்படுகின்றனர் என்பதை உணர மறுப்பவர்கள்.

இந்த பேரவலத்தை தடுத்து நிருத்தச் சொல்லி மத்தியில் உள்ள தங்கள் கட்சி தலைமையினை மன்றாடி கேட்கும் தார்மீக பொறுப்பில் தாங்கள் இருப்பதை முற்றாக மறந்து விட்டு, தங்கள் தலைவியின் கண்கள் மறைக்கப்பட்டு இருந்தால், உண்மையை அவர்(சோனியா) விளங்க உதவுவதை விட்டுவிட்டு, பிச்சைக்கார பதவிக்காக தங்கள் தாயின்(தமிழ்) இரத்தத்தையும் விற்க துணிந்தவர்கள்.

இந்திய மக்கள் சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்ற அடிப்படையில் போடும் ஓட்டுக்களை பொருக்கி அதில் சுகம் கண்டு பழகிய மூடர்கள். பதவியை தக்க வைக்க சொந்த இன மக்களையே புறம்தள்ளி டில்லியில் உள்ள பெரும் தலைகளின் கால்களை பூஜிக்க போட்டி போடுபவர்கள். தங்கள் கட்சியின் உண்மைத்தொண்டன் தீகுளிப்பதை பற்றி சிறிதும் கவலை இன்றி, தலைவிக்கு ஒத்து ஊத சண்டை போட்டுக்கொள்ளும் முட்டாள்கள்.

ஆக, ஈழ தமிழ் மக்களின் துயரம் கண்டு, தங்கள் தொப்புள்கொடி உறவுகளாய் இருந்தும் எந்த ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கும் ஒவ்வொரு தமிழனும் - "யாருக்கு ஓட்டு போடுவது"?

நம் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் 'வாக்குரிமை' மட்டும் தான். ஆம், பிற ஜனநாயக உரிமைகள், குறிப்பாக 'பேச்சுரிமை' நமக்கு இருக்கிறதா? முற்காலத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது, இப்போதும் செய்கிறது இதை சொன்னால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது.

நடக்கும் உண்மையை பேசியதர்க்கே இப்போது மூன்று பேரை சிறையில் அடைத்திருக்கிறது நம் அரசு! இவர்களுக்கு ஓட்டு போட்டு அதிகாரம் அளித்த நமக்கு, "என் பணத்தை கொண்டு நான் கொடுத்த அதிகாரத்தை கொண்டு என் வாசல் வழியே ஆயுதம் தந்து, என் சகோதர சகோதரிகளையே கொள்கிறாயே, இது நியாயமா?" என்று கேட்டால், தேச துரோகமா சிறை தண்டனையா?!

சரி எப்படியோ 5 வருடம் முடிந்து மீண்டும் நமக்கு கிடைத்துள்ள வாக்குரிமையை அவர்கள் நம்மிடம் கேட்டு வரப் போகிறார்கள். இப்போது உள்ள கூட்டணி சூழ்நிலையில்...

  • அனைவரும் ஓட்டு போட வேண்டும்.
  • உண்மையான தமிழன் என்று தன்னை நினைக்கும் ஒவ்வொருவரும் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு 'ஓட்டு' போடவே கூடாது.
  • தாங்கள் மனிதாபிமானி, மிதவாதி, வன்முறைக்கு எதிரானவர்கள் என்றுஅடையாளப் படுத்திகொள்ளும் ஒவ்வொரு இந்தியனும், 'மனிதாபிமானமேஇன்றி அப்பாவி மக்களை தினம் கொள்ளும் இலங்கை இனவாத அரசுக்கு' ஆதரவளிக்கும் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும்.
  • அயல் நாட்டு மண்ணில் தன் இன விடுதலைக்காக போராடும் ஒரு விடுதலைஅமைப்பை நசுக்க முன்னுரிமை கொடுத்து, தன் சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்த (மும்பை தாக்குதல்) பொறுப்பற்ற காங்கிரஸ் அரசைஒவ்வொரு இந்தியனும் தோற்கடிக்க வேண்டும்.
  • காங்கிரசை தவிர்த்து நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுபோடலாம், போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் மண்ணைக்கவ்வ வேண்டும். ஈழ மண்ணில் இறந்த ஒவ்வொரு குழந்தை உயிருக்கும் இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
  • இனப் படுகொலை செய்ய துணையிருந்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட 'டெபாசிட்' வாங்க முடியாமல் போனது என்று வரலாறு சொல்ல வேண்டும். இது பிற கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
  • அதுமட்டுமல்ல நண்பர்களே! நாம் ஒவ்வொருவரும் நமக்கு தெரிந்தநண்பர்களிடமும், உறவினர்களிடமும், இயன்ற அனைத்துவாக்காளர்களிடமும் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வற்ப்புருத்தவேண்டும். இது நம் ஒவ்வொருவராலும் செய்ய முடிந்ததே. இது தான் மிக மிகமுக்கியம், வார இறுதி நாட்களில் நம் ஓய்வு நேரத்தில் இதை செய்தால் கூட, ஓரளவுக்கு நமது மனிதாபிமான கடமையை செய்தவர்களாவோம்.

"'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்' என்னும்,
பல்
அவையோர் சொல்லும் பழுது அன்றே - பொல்லா
வடுவினையே
செய்த வய வேந்தன் தேவி!
கடு
வினையேன் செய்வதூவும் காண்."

இது சிலப்பதிகாரத்தில், அரசனால் (கவனக்குறைவால்) வஞ்சிக்கப்பட்ட கண்ணகி மொழிவது. இன்று தெரிந்தே பல உயிர்களை கொள்ளும் இந்த அரசு என்ன செய்ய போகிறது?! கண்ணகிக்காக சிலை வைத்தவருக்கு இது புரியாமல் போனது தான் காலக் கொடுமை.

குறிப்பு : இந்த பதிவை யார் வேண்டுமானாலும் மீள் பிரசுரம் செய்து அவர்கள்வலையில் பதிவிட்டுக் கொள்ளலாம்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Wednesday, March 18, 2009

இன நலனும் பாதை மாறிய கூட்டணி அரசியலும் - காரணம் யார்?!இன்றைய அரசியல் சூழலில் ஏன் தலைவர்கள் தங்கள் கொள்கைகளையும் இன நலனையும் மீறி கூட்டணி அமைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். நேற்று வரை தமிழர்கள் இன அழிப்பு என்று கதறிய தலைவர்கள் அனைவரும் இன்று கூட்டணி குதிரையில் எந்த குதிரையில் ஏறலாம், எது வெற்றிபெறும், என்று அந்தந்த குதிரைகளின் ஒட்டு மொத்த கொள்கை பற்றி கவலையின்றி - எதோ ஒரு கூட்டணியில் தொற்றிக்கொள்ள வேண்டும் என்று எத்தனிப்பது ஏன்? இது இன்று நம் மனதிலும் எழும் அதிர்ச்சியான கேள்வி?!.

ஆனால் எதார்த்தத்தை நாம் உணர வேண்டும். இன்றைய அரசியல் சூழலில், ஒரு தலைவன் எந்த கட்சியானாலும் சரி, எந்த உண்ணதமான கொள்கை கொண்டிருந்தாலும் சரி அரசியல் வெற்றி பெற முடியாது! நல்லது செய்யவேண்டும் என்று எண்ணி பயனில்லை! எனென்றால், ஒரு அரசியல் கட்சி தலைவர், முதலில் தன்னுடன் இருக்கும் மக்கள் செல்வாக்குடைய புள்ளிகளை திருப்ப்திபடுதியே ஆகவேண்டும். குறிப்பாக பெரும் கட்சிகளின் ஆதரவுடன் காலம் தள்ளும் சிறு கட்சிகள் ம.தி.மு.க, பா.ம.க, இடதுசாரி, வலதுசாரி, விடுதலை சிறுத்தை, என்பன...

யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது முதல், என்ன பேசலாம் என்பது வரை ஆலோசனைகள் கேட்டே தீர வேண்டும். இந்த பெரும் புள்ளிகளுக்கு நீங்கள் சொல்வதுபோல் மாற்றமின்றி ஒரு ஒற்றுமை இருக்கிறது அது பணம் கொழிப்பது, பதவி சுகம் காண்பது, இன்னும் பிற லட்சியங்கள்...

தலைவர்கள் தேர்தல் இல்லாத காலங்களில் சற்று சுதந்திரமாக செயல் பட முடியும், பேசமுடியும், இழவுக்கு போய் அழ முடியும். ஆனால், தேர்தல் என்று வந்தால் ஓயாமல் தங்கள் உடனிருப்பவர்களை திருப்தி படுத்தும் வேளையிலேயே ஈடுபட முடியும்!
இந்த செல்வாக்குள்ள புள்ளிகளுக்கு கட்சி கொள்கை எல்லாம் சும்மா தோளில் போடும் துண்டு போல சுலபமாக மாற்றிக்கொள்ளலாம், "தலைவர் என்னை அவமதித்தார் அதனால் நான் கட்சி தாவுகிறேன்". அவ்வளவுதான். சமீபத்திய உதாரணம் 'கண்ணப்பன்'.


நான் தலைவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். அவர்களுக்கும் கட்சிதான் முக்கியம். அரசியல் வெற்றி இன்றி பொருளாதார நலன்(!) இன்றி கட்சியை நடத்த முடியாது. கட்சியை காப்பாற்ற ஒரு சில இடங்களையாவது தக்கவைக்க வேண்டும், அதற்க்கு இந்த புள்ளிகள் வேண்டும், பெரும் கட்சி தலைவர்கள் (ஐயா / அம்மா) ஆசி வேண்டும். ஏனென்றால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையில் மத அடிப்படையில் நாம் (தமிழர்கள்) பிரித்து ஆளப்பட்டு வருபவர்கள். நம் மக்களுக்கு மரபு வழியாக இரத்தத்தில் ஊரியது - சாதி மத உணர்வு. இன்று அதை வைத்தே தேர்தல் கணக்குகள் போடப்படுகின்றன. பெருந்தலைகள் - குறிவைப்பது, தக்கவைப்பது, திருப்ப்திபடுதுவது எல்லாம், சாதி ஆதரவுள்ள தலைவர்களை தான்.

நாம் பொதுவாக நினைத்துக்கொள்வது திருமா, ராமதாஸ் போல சிலர்தான் சாதி அடிப்படையில் இயங்கி வெற்றிபெறும் கட்சிகள் என்று, ஆனால் அது உண்மையல்ல. எந்த கட்சியாக இருப்பினும், போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், அந்தந்த தொகுதியில் எந்த சாதியினர் அதிகமாக வசிக்கின்றனரோ, அவர்கள் ஆதரவை பெறுகின்ற ஆள் யார் என்று பார்த்து சீட்டு கொடுப்பது தான் விதி("பார்முலா"). (இந்த விதியில் இருந்து சற்று மாறுவது பொது உடமை கட்சி. ஆனால் அதிலும் ஒரு வேடிக்கையான உண்மை ஒன்று, எனக்கு தெரிந்து பொது வாழ்வில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு சுயநலமின்றியும் பொருள்சேர்க்கும் ஆசையின்றியும் இருக்கும் 'நல்ல கண்ணு ' அவர்கள் கடந்த முறை என் கொங்கு நாட்டில் போட்டி இட்டார், ஆனால் அவருக்கு - வெற்றிபெற்றவர் பெற்ற ஓட்டு எண்ணிக்கையில் பாதி கூட விழவில்லை. ஏன்??!)


சற்று முந்தைய காலத்தில் நல்ல தலைவர்கள் நம்மை ஆளும் வாய்ப்பு இருந்தது, உதாரணமாக பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் போன்றோர். அப்போது சுதந்திரம் பெற்றுக்கொடுத்த கட்சி காங்கிரஸ் என்று காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு உண்மையான தமிழுணர்வாளர், மொழி சுதந்திரத்திற்காக போராடி வெற்றி பெற்றார், ஆட்சியமைத்தார் அறிஞர் அண்ணா. பின்பு சக்தி வாய்ந்த ஊடகமாக விஸ்வரூபம் எடுத்த திரைப்படத்துறை மூலமாக நல்ல கருத்துக்களை பதித்து பெரும்பாலான ஏழைகளின் மனதில் இடம் பிடித்து ஆட்சியை பிடித்தார் புரட்சித்தலைவர். அனால் இவர்கள் எல்லாம் நல்லவர்களாக, மக்களுக்கு தொண்டு செய்யும் மனம் படைத்தவர்களாக இருந்து விட்டனர். நம் புண்ணியம்.

ஆனால் இன்றும், முன்பு சொன்ன வழிகளை கடைப்பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர திட்டம் போடும் தலைவர்கள் தான் நம்மிடம் உள்ளனர். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி அண்ணனாக இருந்தாலும் சரி. நமது மக்களும், கொடுப்பதை வாங்கிக்கொண்டு பின் விளைவுகளை பற்றி கவலையின்றி குத்துகின்றனர்... இந்த ஓட்டு கணக்கு அரசியல் வாதிகளுக்கு கைவந்த கலை. இதுவரை அம்மாவும் ஐயாவும் மாறி மாறி தங்கள் கொல்லைபுரங்களை கரன்சியால் நிரப்பி விட்டனர். சரி விஜய காந்த் புதுசா எதோ சொல்கிறாரே என்று சற்று திரும்பினால் பொதுகூட்டம் போட்டு தன் பலத்தை காட்டி, இப்போது நல்ல விலை எதிர்பார்த்து காத்திருக்கிறார் போலும்?!

இந்த சூழ்நிலையில் நாம் செய்ய முடிந்தது, அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் கட்சி கரிசனம் இன்றி, சாதி சார்பு இன்றி, குறைந்த கெட்டவர்களையோ, அதிக நல்லவர்களையோ, நல்ல கொள்ளயர்களையோ, தேர்ந்தெடுப்பதுதான். குறைந்தது அரசியல் வாதிகளின் சாதி கணக்கையாவது பொய்க்க வைப்போம். கொஞ்சமாக அரசியல் சாக்கடையில் கெட்டுப்போனவர்களை, மேலும் கெடாமல் தடுப்போம். சாதியை தாண்டி, கொள்கை பிடிப்புடன் இருக்க முயலும், மக்களுக்கு பொதுவாக நல்லது செய்ய நினைக்கும் நபர்களை, மக்கள் உணர்வை புரிந்து அவர்களை நல்ல முறையில் வழி நடத்தும் (குறைந்தது முயற்சிக்கும்) நபர்களை தேர்ந்தெடுத்து, ஒரு மாபெரும் பின்னடைவில் இருந்து மீளும் முதல் அடியை எடுத்து வைப்போம்.

வரும்காலங்களில் நமது பிள்ளைகளுக்கு, நல்ல குணங்களை வளர்த்து, தீயவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் திறனை கற்றுக்கொடுத்து, வருங்கால தமிழ்களை மொழி பற்றுடயவர்களாகவும், நாட்டுப்பற்று உடையவர்களாகவும் வளர்த்து நல்ல எதிகாலத்தை அமைக்க வேண்டும். குறிப்பாக இன்று எல்லா வீட்டிலும் சுயநலம் கற்றுக்கொடுப்பவர்களாகவே பெற்றோர் இருகிறார்கள். அந்த சுய நல வட்டத்தை எப்போது உடைத்து எறிகிறோமோ அப்போதுதான் நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.

இந்த கட்டுரையை படித்துவிட்டு தங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Friday, March 13, 2009

கல்விக்கண் திறக்க மாற்றம் தேவை!
கல்வி மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது... கல்வியின் முக்கியத்துவத்தை சங்க காலம் தொட்டே வழியுருத்திக் கொண்டு வந்துள்ளனர் நமது முன்னோர். "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்றாள் 'கொன்றை வேந்தனில்' ஔவை, "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்றார் வள்ளுவர்.

இவ்வாறாக கல்வியின் நன்மை அறிந்து, 'தான் கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பினும், தம் குழந்தைகள் அவ்வாறு இல்லாமல் நன்றாக பயின்று நல்ல நிலைமைகளுக்கு வர வேண்டும்' என்று எண்ணிய, உயர்ந்த உள்ளங்கள் நம் முன்னோர்கள் தொடங்கி, நமது பெற்றோர் உள்பட முன்வந்ததால், தற்போது கல்வி அறிவு அற்ற மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. ஒருபுறம் கல்வி பெற முடியாத குழந்தை தொழிலார்களை கண்டு மனம் வேதனைப்பட்டாலும், மறுபுறம், கற்றவர் விழுக்காடு பெருகி வருவதை காணும்போது, கூடிய விரைவில் கல்வி அறிவு இல்லாதோர் இல்லை என்ற நிலை உருவாகும் என்ற நம்பிக்கையை தருகிறது..

தமிழக பள்ளிகளின் நிலைமை:
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை (admission) நடை பெரும் காலம், உறவினர் வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவர்கள் குழந்தையை பள்ளியில் (L.K.G யில்!) சேர்க்க எப்படி அல்லல் படுகிறார்கள் என்பதை சொன்னபோது ஆடிப் போய் விட்டேன். சென்னையில் நிலவரம், குறைந்தது 10 ஆயிரம் தொடங்கி 25 ஆயிரம். இங்கு குறிப்பிட்டது நடுத்தர மக்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் நிலவரம் மட்டுமே!


அரசு பள்ளிகளில் சேர்த்தால் தரமான கல்வி கிடைப்பது இல்லை என்பது இந்த மாதரி உள்ள பெற்றோர்களின் புலம்பல். இது உண்மையாகவே உள்ளது. அரசு ஆரம்பப் பள்ளிகள் நாடு நிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் வரை, அரசு கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ள தர இடைவெளி மிகவும் அதிகமாக காணப்படுவதை இயல்பாக உணரலாம். ஏன்?!

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் தொகை அதிகமாக இருக்கிறது, அதனால் அதிகம் படித்த ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்து வேலைக்கு அமர்த்தலாம். உண்மைதான், ஆனால் சொத்து வரியாக ஒவ்வொரு நகராட்சியிலும் வசூலிக்கப்படும் 2% கல்வி வரி (education cess) என்ன செய்து கொண்டு இருக்கிறது?? உதாரணமாக தூத்துக்குடி நகராட்சியில் வசூலிக்கப்பட்ட கல்வி வரி 3 கோடி அனால் ஆரம்பப் பள்ளிகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை வெறும் 5 லட்சம் மட்டுமே! இதுபோல நம் நாடு முழுதும் கல்விக்கான பணம் தேங்கிக்கிடக்கிறது. இது இவ்வாறு இருக்க, தமிழகத்தில் பல நகரங்களில் அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன... இந்தியா முழுவது எடுத்துக்கொண்டால், 6 - 14 அகவை உள்ள குழந்தைகளில் பாதிக்கும் குறைவான எண்ணிகையினரே பள்ளிக்கு செல்கின்றனர் என்கிறது 'CRY' என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம்.

கல்வி தரத்தை உயர்த்த என்ன செய்யலாம்:

இதே போல அரசு, ஆசிரியர்கள் தேர்வில் - திறமைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அரசு பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் தெரியும். நான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் எனக்கு பாடம் எடுத்த 20 ஆசிரியர்களில் 10 பேர் உதவாக்கரைகள், (இப்போதாவது அந்த நிலைமை சற்று மாறி இருக்கும் என்று நம்புகின்றேன்!) இது கசப்பான உண்மை, சிறந்த ஆசிரியர்களும் ஒன்று இரண்டு பேர் இருந்தனர்.. அரசு ஆசிரியர்களை நியமிக்கும் பொழுது சாதி அடிப்படிலான இட ஒதுக்கீட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை ஆசிரியர்களின் திறமைக்கும் தர வேண்டும் என்பது என் கருத்து.

மேலும், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு அரசு 'கல்வி வரி' மூலம் சேர்த்த பெரும் தொகை கொண்டு நல்ல பயிற்சிகளுக்கு ஏற்ப்பாடு செய்யலாம். தனியார் பள்ளிகள் பெரும் நகரங்களிலேயே முகாமிட்டு வளம் கொளிக்கின்றனர். அவர்கள் கிராமப் புறங்களை கண்டு கொள்வதே இல்லை, அதனால் கிராமங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் நகராங்களிலும், பெரு நகராங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கும் திறன் வளர்க்கும் பயிற்சி வகுப்புகள், உளவியல் பயிற்சிகள் கொடுப்பது மூலமும் நாடு முழுவதும் ஒரே சீரான நல்ல தரமுள்ள கல்வியை தர முடியும் அல்லவா??

குழந்தைகள் மனதை ஆக்கிரமிப்பதா??

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பே, பெற்றோர்கள் இப்போதெல்லாம் ஆரம்ப பாடங்களை சொல்லித்தருகிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால், நான் பார்த்த வரையில் "கை வீசம்மா கை வீசு" காணமல் போயிருந்தது, அந்த இடத்தை "Ringa Ringa roses" ஆக்கிரமித்து கொண்டுவிட்டது... நான் ஆங்கில பாடல்களுக்கோ, கவிதைகளுக்கோ நான் எதிரி அல்ல. ஆனால், தமிழ் புறம் தள்ளப்படுவதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக என் உறவினரின் பிள்ளைகளுக்கு "ABCD" கற்றுத்தர பல மாதரியான புத்தகங்களை வைத்துள்ளனர் ஆனால் அந்த பிள்ளைகளுக்கு "அ ஆ இ ஈ " என்றால் என்ன என்றே தெரியாது!!

இது அவர்கள் வீட்டில் மட்டுமல்ல மாகணம் பொருந்தியவர்களே.. இந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன், குழந்தைகளுக்கான புத்தகங்கள் நிறையா விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. மகிழ்ச்சியுடன் உறவினர் குழந்தைகளுக்கு சில புத்தகங்கள் வாங்கலாமே என்று சென்றேன். அனைத்து பெற்றோர்களும் அங்கு தள்ளு முள்ளு நடத்தி பொறுக்கிக் (சேகரித்து என்று வைத்துக் கொள்ளுங்கள்!) கொண்டிருந்தது, அனைத்தும் ஆங்கில புத்தகங்கள். இருந்த ஒன்றிரண்டு தமிழ் புத்தகங்களும், ஆங்கிலம் பயிற்றுவிக்கும் புத்தகங்களை போல ஆர்வம் ஊட்டும் வகையில் ('interactive way') இல்லை! ஆங்கில புத்தகங்கள் எழுத்துக்களை, வார்த்தைகளை விளக்கும் விதத்திலும் படங்களுடனும், பளிச்சென்றும் இருந்தன, ஆனால் தமிழ் கற்கவோ, கருப்பு வெள்ளை மையில் அச்சடித்த நான்கு கோடு புத்தகங்களே இருந்தன...

அதே போல குழந்தைகள் கற்க நீதி கதைகள் உள்ள புத்தகம் வாங்கலாம் என்றாலும் தமிழில் ஒரு புத்தகம் கூட இல்லை. மூன்று, நான்கு கடைகளில் நடத்துனர்களை விசாரிதேன், பதில் 'NO'! இதற்க்கு பெற்றோர் சொல்லும் சமாதானம் "ஆங்கிலம் தான் அயல் மொழி - கற்றுக்கொள்ள சிரமம் தமிழ் வீட்டில் பேசுகிற மொழி தானே சுலபமாக வந்துவிடும்" அவர்கள் தமிழின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி...
ஆனால் என்னுடைய கேள்வி "கணிதம், அறிவியல், முதலியன எளிதாக கற்றுக்கொள்ளும் குழந்தைகள் அவற்றை போல் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ள மாட்டார்களா?? தமிழை பதவி இறக்கி விட்டு குழந்தைகள் மனதில் ஆங்கிலத்தை அரசாள விடுவதில் என்ன அற்ப மகிழ்ச்சி?!"

அரசியல் வாதிகளின் பொறியியல் அட்டூழியங்கள்:

மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லும் நிலையில், கல்விக் கூடங்களும் அதிகரிக்கவே செய்கிறது. ஆனால், இன்று கல்வி, ஆரம்பப் பள்ளி முதல் பொறியியல், மருத்துவம் என்று சகல மட்டங்களிலும் வியாபாரம் ஆக்கப்பட்டதுதான் வேதனையான விசயம். குறிப்பாக, 'பொறியியல் துறை' அரசியல் வாதிகளின் முக்கிய இலக்காக மாறிப் போய் விட்டது... தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லுரிகளுக்கு அனுமதி கொடுப்பது மட்டுமின்றி, தாங்களே ஆரம்பித்து பினாமி (மனைவி/கொழுந்தியா என) பெயரில் நடத்துகின்றனர். தங்களின் கட்சி ஆட்சியில் இருக்கும் போது ஆனுமதி அளித்து கல்லூரிகளை துவக்கி, வேறு கட்சி ஆட்சியில் இருக்கும் போதும் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழியாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.

அதிலும் முதலில் ஒரு ஆண்டு மாணவர்கள் மட்டும் படிக்கும் வகையில் கட்டிடங்களை கட்டுவது, தரமான பொறியியல் படிப்புக்கு தேவையான
சாதனங்களில் பாதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்பேற்றுவது, பின் படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ரத்தத்தை பிழிந்து தங்கள் இஷ்டத்திற்கு ஆயிரத்தி எட்டு வகையான கட்டணங்களை வசூலித்து தேவைப்படும் வசதிகளை செய்து கொண்டும், தாங்கள் மேலும் சம்பாதிக்க, விளம்பரம் செய்துகொள்ள வழி செய்து கொள்வது... இது தானே நடக்கிறது.. இப்படி அந்த கல்வியின் தரத்தை பற்றி சிறிதும் கவலை இன்றி சகட்டு மேனிக்கு கல்லூரிகளை ஆரம்பித்ததால் இப்போது கட்டணத்தை ஒழுங்கு படுத்தவும் ஆளில்லை. தரத்தை நிர்மாணிக்கவும் வழி இல்லை. இப்போது இது யாரை பாதிக்கும்? கல்லூரி நடத்துவோரையா? இல்லை. மாணவர்களைத்தான். அவர்கள், ஏதோ பட்டம் பெற்றோம் என்ற நிலையில் தான் இருப்பார்கள். சர்வதேச மாணவர்களுடன் போட்டியிடும் நிலையில் இருக்க மாட்டர்கள். இதை பற்றியெல்லாம் கவலைப்பட நம் அரசியல் (வ)வியாதிகளுக்கு எங்கு நேரம் இருக்கிறது??

உடனே, நான் பொறியியல் கல்விகளுக்கு எதிரானவன் என்று சொல்ல வேண்டாம், நானும் ஒரு பொறியாளர்தான். மேலை நாடுகளில் உயர் கல்வி என்று வந்தால் பல துறைகளில் மாணவர்கள் தங்கள் முனைப்பை காட்டுகின்றனர். அனால் இங்கு ப்ளஸ் டூ படித்து முடிக்கும் ஒவ்வொரு மாணவனையும் வசீகரிப்பது பொறியியல் கல்லூரிகளின் விளம்பரம்தான். "விளம்பரம் மட்டும் செய்தால் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தை கூட சுத்த இளநீர் என்று ஒரு கை பார்த்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்." சரி வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் என்று கேட்கலாம்?!

மாற்று வழி இருக்கிறது, எதிர்காலத்தில் இயற்க்கை சார்ந்த துறைகளில் மாணவர்களை தயார் செய்வதுதான் ஒட்டு மொத்த உலகத்துக்கும், நாட்டுக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், இதை ஆங்கிலத்தில் "green collar jobs"
என்கிறார்கள். இதன் மூலம், நாம் செய்யும் வேலை, நமக்கு வருமானத்தை ஈட்டும் வகையிலும், அதே சமயம், நாம் வாழும் இந்த பூமிக்கு புத்துயிர் அழிக்கும் வகையிலும் இருக்கும். நமது கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கும், நகரப் புறங்களில் கணிப்பொறி மற்றும் இயந்திரத் தனமான வாழ்க்கையை அனுபத்த மாணவர்களுக்கும், இது ஒரு அருமையான மற்று வழியாகத்தானே இருக்கும்?!

அதாவது, தொழில் வளர்ச்சியை, அதன் முதலீடுகளின் பெரும் பங்கை, இயற்க்கை சார்ந்த ஆதாரங்களை பெருக்க பயன்படுத்துவது. உதாரணமாக, சூரியவொளி கலங்களை தயாரிப்பது, காற்றாலைகளுக்கு தேவையான தொழில் நுட்பங்க்ளை பெருக்குவது, இதன் மூலம், நன்கு படித்த இளைஞர்களுக்கு இந்த தொழில் நுட்பங்கள் தாயரிக்கும் வேலைகளும், குறைந்த கல்வி பெற்றிருப்பவர்களை கொண்டு இதற்க்கு தேவையான மனித சக்தி பெறுவதும் இதன் சாராம்சமகும். இதன் மூலம் பல கோடி கணக்கில் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் வேலை வாய்ப்பை பெருக்கலாம். வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கலாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள், நமது ஆட்சியாளர்கள் இது போன்ற சிந்தனையுடன் எப்போதாவது செயல் பட்டு இருக்கிறார்களா?? மாறாக, கல்வியை முற்றிலும் வியாபார மயமாக்கி, மக்களை ஏமாற்றி அவர்கள் சேமித்த பணத்தை பறிக்கும் கள்வர்கள் வேலை அல்லவா பார்க்கிறார்கள்?

மாற்றம் தேவை!! ஆம் எல்லா இடங்களிலும், எல்லாருடைய மனங்களிலும் மாற்றம் தேவை..

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Thursday, March 5, 2009

காந்தியின் தேசமே, விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!இன்று காந்தியின் பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் சாராய சாம்ராஜியத்தின் மன்னன் என்று கூறப்பட்டாலும், நமது நாட்டின் பெருமையை விலைபோகாமல் காப்பாற்றியதற்காக இவரை நான் பாராட்டுகிறேன். ஆனால், அந்த பொருட்களை வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் எழுப்பிய கோரிக்கைகள் நம்மை சிந்திக்க வைத்துள்ளன.

"ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும்
காந்தி
- அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்.

அதே போல, அரசு 40 சதவீகம் கல்வி அறிவு இல்லாதவர் இருக்கும் இந்திய தேசத்தில் படிப்பை வளர்க்க பயன் படுத்தும் தொகை இந்தியாவின் மொத்த உற்ப்பத்தியில் வெறும் 3.5% தான். ஆனால், சர்வதீச நாடுகளை எடுத்துக்கொண்டால், 4.9% ஆகவும், வளரும் நாடுகளில் 3.8% ஆகவும் உள்ளது.
அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு 0.7% மே ஒதுக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் 3.2% ஆகா உள்ளது!

இந்திய அரசு இது போலவே, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் (அவர்களின் பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும்)
பல
ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால், அந்த தொகை, போய் சேர வேண்டிய கிராம புற ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்றால் இல்லை! (விவசாயிகளை கேட்டால், விவசாய கூட்டுறவு வங்கிகளில் முதலில் கடனே தருவதில்லை என்றும் பாதி நாட்கள் இந்த வங்கிகள் பூட்டியே கிடக்கிண்டறன என்றும் வாங்காத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் என்ன அசலை தள்ளுபடி செய்தால் என்ன என்று கேட்கின்றனர்?!). காரணம் தேசமெங்கும் பரவிக்கிடக்கும் ஊழல், லஞ்சம், இன்னும் பிற...இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மஹாத்மா காந்தியடிகள். ஆம் நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்னதைப் போல, கிராமங்களில், விவசாயமாக, கைத்தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலையாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பை மேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.

ஆனால் இந்த கிராமங்களின் உயிர் மூச்சாக இருக்கும் விவசாயத்தை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கவணிக்கின்றனர்??"கிராமங்களிலிருந்து சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் நூற்றுக்கு தொன்னூறு பேர் விவசாயிகள். காரணம் விவசாயம் லாபகரமானதாக இல்லை. அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்மொழியப்படவில்லை". இவ்வாறு நண்பர் மதிபாலா தனது அற்ப்புதமான கட்டுரையில் சொல்லியிருந்தார். உண்மையிலும் உண்மை.. இது தொடர்பில் என்னுடைய சில கருத்தையும் பதிவு செய்ய விரும்பி இதை எழுதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு விவசாயி ஒரு முறை சொன்னார், "இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரட்ச்சனை எல்லாவற்றிலும் பெரியது வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறைதான், தோட்ட வேலை செய்ய ஆட்கள் வராததால், பலர் விவசாயத்தை கைவிட்டு, தங்கள் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை வைத்து நாட்க்களை கடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம்".

மதிபாலா நீங்கள் சொல்வதை போல் பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் விவசாயிகள் மட்டும் அல்ல. தங்கள் கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, அரசாங்கம் அறிவித்திருக்கும் கிராம புற வேலை வாய்ப்பு திட்டத்தை நோக்கி சென்றுவிட்டனர். இதன் மூலமாக கிடைக்கும் கூலி விவசாய வேலை செய்வதை விட சற்று அதிமாக இருக்கிறது அதனால் வயக்காடுகளில் கஷ்டப்படுவதை விட இந்த திட்டத்தில் குறைவான வேலை செய்து கிடைக்கும் கூலியை தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

மேலும், விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்ற கவலையை தெரிவிக்கின்றனர். உதாரணமாக கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை போதுமானதாக இல்லை, காய் கறிகளை பயிரிடுவோர் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் மிக மிக குறைந்த தொகையையே பெற முடிகிறது..
ஆனால், இடைத்தரகர்களோ, அதை பெரும் லாபங்களுக்கு கை மாற்றி விடுகின்றனர்.இதை தடுப்பதற்கும் அரசு எந்த உருப்படியான நடவிடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாய பண்டங்கள், அதை விளைவிக்கும் விவசாயிக்கு பயனளிக்கும் வகையிலும் லாபம் அடையும் வகையிலும் இருந்தால், விவசாயக் கூலியை அதிகரிக்கலாம், தொழிலாளர்கள், ஆர்வத்துடன் வருவார்கள், இந்த தொழிலை செய்ய இளைஞர்கள் முன் வருவார்கள், விவசாய நிலங்களை அழியாமல் காப்பாற்றலாம், நாடு செழிக்கும்.
அதை விடுத்து வேலை வாய்ப்பு தருகிறேன் என்று (நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுக்காமல், அந்த நோய் ஏற்ப்படுத்தும் வலிக்கு, வலி நிவாரணி மூலம் தீர்வுகாண்பதை போல்) விவசாயத்தை நசுக்கினால், ஒரு நாள் அந்த நோய் புரைஓடி உயிரைக்கொல்லும்.

இதற்கெல்லாம் காரணம், விவசாயிகளின் உண்மை பிரட்ச்சனையை உணர்ந்து நீக்காமல், மேம்போக்காக சில திட்டங்கள் மூலமும், கவர்ச்சி திட்டங்கள் மூலமும், ஓட்டு எண்ணிகையை பெருக்கவே ஆட்சியாளர்கள் முனைவது தான்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Thursday, February 26, 2009

வேலை இழப்பை தவிர்க்கவும்; சமாளிக்கவும் - பயனுள்ள யோசனைகள்.நான் நேற்று "ஒபாமாவின் புதிய அயல் கொள்முதல் கொள்கை, இந்திய மென்பொருள் துறை இளைஞர்களை பாதிக்கும்; மாற்று வழி என்ன??!" என்ற பதிவை செய்திருந்தேன்.

ஒபாமா அவர்களின் புதிய பொருளாதார மற்றும், வரி விதிப்பு கொள்கைகளினால், மென்பொருள் மற்றும் அயல் கொள்முதல் முறையை சார்ந்து விளங்கும் பிற துறைகளும் எவ்வாறு பாதிக்கபடுகின்றன என்பதை மேற்கோள்களுடனும், புள்ளிவிபரங்கள் மூலமும் எடுத்துக்காட்டி இருந்தேன்.

அது தொடர்பாக நான் எழுப்பிய சில கேள்விகளுக்கு இன்று என்னுடைய சில உளக்கருத்துக்களை('idea') இங்கு பதிவு செய்துள்ளேன்.நாம் உணர்வது என்ன?
* உலகச்சந்தை சரிவில் இருக்கிறது.
* தினமும் வேலை இழப்பை பற்றி செய்திகளை படிக்கின்றோம்.
* சில நண்பர்களுக்கு வேலை இழப்பு ஏற்ப்படதையும் அறிகிறோம்.
* இன்னும் 24 மாதத்திற்கு இந்த நிலை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
* ஆங்காங்கே, சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
* நிறுவனங்களின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நமது தேவை என்ன?
> தற்ப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை தக்கவைக்க வேண்டும்.
> மாதாமாதம் 'வாங்கிய' கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
> நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தை பேண வேண்டும்.
> இவற்றை தடையின்றி செய்யலாம் என்ற பாதுக்கப்பு உணர்வு வேண்டும்!.

செய்யக்கூடியான சில

# தேவையற்ற விடுப்பு எடுப்பதை தவிர்கவும்.
# பயணம் மேற்கொள்ளவும், இடம் மாறுதல் செய்யவும் தயாராக இருக்கவும்.
# சம்பள உயர்வை எதிர்நோக்க வேண்டாம்.
# சிரமம் பாராமல் கொடுத்த பணியை முடித்து கொடுக்கவும்.
# புதிய நிறுவனங்களுக்கு செல்ல, அவசியம் இன்றி முயல வேண்டாம்.
# புதிய தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவேண்டும்.
# முடிந்த வரை உறப்பத்தியை பெருக்கி வேலைகளை துரிதாமாக செய்து
நிறுவனம் லாபம் ஈட்ட உதவ வேண்டும்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இது, பல நெருக்கடிகளில் இருந்து காக்கும்.
$ குறிப்பாக கடன் அட்டைகள் மூலம் வாங்கிய கடனை அடைக்கவும்.
$ அது போல் மாத சந்தாக்கள் ('E.M.I') அனைத்தையும் அடைக்க முயலவும்.
$ நீங்கள் இருக்கும் வீடு வாடகை அதிகமானதாகவும் தேவைக்குமேல்
பெரிதாகவும் இருந்தால் வேறு குறைந்த வாடகை வீடு பார்க்கவும்.
$ உங்கள் மாத செலவுகளை பட்டியலிடவும்.
$ தேவையானது, அனாவசியமானது என்று பட்டியலை பிரித்துக் கொள்ளவும்.
$ அனாவசியமானதை பட்டியலிலிருந்து நீக்கிவிடவும்.
$ அடிக்கடி வெளியில்('Restaurants') உண்பதை தவிர்க்கவும்.
$ மேலும் என்னென்ன வழிகளில் பணம் விரயமாகுமோ அனைத்தையும் தவிர்க்கவும்.


தயாராக இருங்கள்
இனி ஒரு வேளை பணி இழப்பு ஏற்ப்பட்டால் சந்திக்க, செய்யவேண்டியன...

@ இயன்ற வரை - வேறு துறைகளில் செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
@ தந்தை, சுய தொழில் செய்பவராக இருந்தால், அந்த தொழிலில் ஈடுபடும் மனநிலையை வளர்த்துகொள்வது நல்லது.
@ நண்பர்கள் வேறு தொழில் செய்பவர்களாக இருந்தால், அவர்களுடன் கலந்து அந்த தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை ஓரளவு தடையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்..
@ இந்த சந்தர்ப்பத்தை ஒரு தொய்வாக எடுத்துகொள்ளாமல், நமக்கு பிடித்த துறைகளில் ஈடு பட கிடைத்த வாய்ப்பாக எண்ணி, முயற்சி செய்யலாம்.
(என்னை கேட்டால் விவசாயத்துறையில் ஈடு பட விருப்பம்!
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." நினைவிற்கு வருகிறது... )புதியவர்களுக்கு சில யோசனை

தற்போது வேலைக்காக விண்ணப்பித்து கொண்டிருப்பவர்களுக்கு

^ ஏதாவது பயிற்சி வகுப்புக்களில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
^ ஏதாவது நிறுவனங்களில் வேலை பழகும் வாய்ப்பு கிடைத்தால் உடனே சேரவும். பின்பு உங்கள் திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பை பெறலாம்...
^ இந்த நிறுவனம், இந்த ஊர், வேலை நேரங்கள், என்பதை போல் எந்த கட்டுப்பாடுகளையும் வகுத்துக்கொள்ள வேண்டாம்.
^ ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர் சிபாரிசுடன் முயல்வது நல்லது.
^ உங்கள் கருத்துக்கள் பரிமாறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.


நண்பர்களே! நீங்களும் உங்கள் உளக்கருத்துக்களை இங்கு பகிர்ந்தால், இந்த பதிவை இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்...

நன்றி.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Wednesday, February 25, 2009

ஒபாமாவின் புதிய அயல் கொள்முதல் கொள்கை, இந்திய மென்பொருள் துறை இளைஞர்களை பாதிக்கும்; மாற்று வழி என்ன??!
அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் உள்நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்ட நிலைமைகளை சமாளிக்க ஒபாமா அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள கொள்கை இந்திய மென்பொருள் துறையில் பணிபுரியும் இளைஞ்ர்களை கவலையுற செய்திருக்கிறது...

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "நாம் நமது வரி விதிக்கும் கொள்கையை தெளிவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றி, நமது நாட்டில் உள்ள வேலைவைப்புகளை அயல் கொள்முதல் ('Outsourcing') மூலம் குறைக்கும் நிர்வனங்களுக்கு அதிக வரியும், உள் நாட்டு மக்களுக்கு வேலைவாப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பும் செய்து மாற்றியமைப்போம்" என்று கூறியுள்ளார்..

ஒபாமாவின் இந்த அறிக்கை, இந்தியா போன்ற மலிவான நாடுகளிடம் அயல் கொள்முதல் ('Outsourcing') செய்யும் அந்நாட்டு நிறுவனங்களுக்கு பலத்த எச்சரிக்கை சமின்ஞைகளை அனுப்பி உள்ளது...


மேலும் அவருடைய முதல் பாராளுமன்ற உரையில், "எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளங்கள் அமெரிக்காவின் எல்லைகளை கடந்து போவதை தாம் விரும்பவில்லை என்றும், மற்ற அமெரிக்கர்களும் விரும்ப மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்!"

ஒபாமாவின் இது போன்ற தொடர்ச்சியான அயல் கொள்முதல் எதிரிப்பு நிலைப்பாடு இந்திய நிறுவனகளை கவலையுற செய்திருக்கிறது... எனென்றால், அமெரிக்காவின் மொத்த அயல் கொள்முதல் நிதியான $64 பில்லியன் தொகையில் 60% சதவிகிதம் இந்தியாவுக்கு வருகிறது...


இதுமட்டுமல்ல, அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிறுவனந்களை மீட்கும் அமெரிக்கா அவர்களுக்கு ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, "H-1B என்று அழைக்கப்படும்
மூன்று வருட கால வீசாவில் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவரை, வேலைக்கு அமர்த்தக்கூடாது". இந்த கட்டுப்பாடும் இந்தியாவை ஏற்கனவே கடுமையாக பாதித்திருக்கிறது. ஏனென்றால், அமெரிக்க அரசால் வருடம் தோறும் விநியோகிக்கப்படும் 65,000 H-1B வீசாகளில் 21,667 இந்திய மென்பொருள் வல்லுனர்களுக்கே வழங்கப்படுகிறது!!!

ஏற்கனவே, பொருளாதார அழுத்தங்களை சந்தித்துவரும் இந்தியாவிற்கும், அதன் மென்பொருள் நிறுவனங்களுக்கும் அமெரிக்கா அதிபரின் கொள்கைகள் பெரும் சவாலாகவே இருக்கும் என்பது உறுதி...

இனி நாம் பார்க்க வேண்டியது, தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கில் மென்பொருள் துறையை நம்பி படித்து வெளியில் வரும் மாணவர்களின் நிலை என்ன?

மாணவர்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையை தேர்ந்தெடுத்து படிப்பது எந்த அளவிற்கு அவர்களுக்கு ஒரு நம்பகமான எதிகாலத்தை ஏற்படுத்தும்??

ஏற்கனவே மென்பொருள் துறையில் இருப்பவர்கள், ஒருவேளை தங்களுக்கு வேலை பறிபோகும் சூல்நிலை வந்தால் மாற்று வேலைகளை செய்ய தயாராக இருக்கின்றனரா??

மேலும் இது தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கு கூறுங்கள்...

நன்றி...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Tuesday, February 24, 2009

ஈழத்தின் வரலாற்றுச் சுவடுகள் - எளிய தொகுப்பு பாகம் 1

வணக்கம், ஈழ வரலாற்றை தெளிவாக அறிய முற்பட்டபோது. நான் படித்து அறிந்த செய்திகளை, இன்னும் பலருக்கு எளிய வடிவத்தில் தந்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று எண்ணி, இந்த பதிவை எழுதுகிறேன். என்னால் இயன்ற வரை சுருக்கியும், தெளிவான வரலாற்றுச் சான்றுகளை பதிவுசெய்தும் இருக்கிறேன். பக்க சார்பு இல்லாமல் இருக்க, இயன்ற வரை 'மூல' இணைப்புக்களையும் (சான்றாக) தந்துள்ளேன்.


ஓரளவு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பட்ட பிறகான காலத்திலிருந்து (பாதிரியார் பெர்னாவோ டி குவைறோஸ் 'perna de quiros' சிலோனின் மதமாற்றங்கள் பற்றி எழுதிய நூல்களினூடாக), சற்று சுருக்கமாக சிலோனின் வரலாற்றை பார்போம். சங்கிலியன் என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போர்த்துகல் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்க குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள்.யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து சங்கிலியனைத் தண்டிக்க வேண்டுமென்று இவர்கள் கோவாவில் இருந்த போத்துக்கேயர் தலைமையையும், போத்துக்கல் அரசனையும் பலவழிகளிலும் வற்புறுத்தி வந்தனர். 1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா(Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான்.

சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லுரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். பின்னர் நீண்ட கால இடப்பெயர்வினால் வருந்திய போத்துகேய தலைமைக்கு தூது அனுப்பி, போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு, நல்லூர் திரும்பினான். சங்கிலி மேலும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பின்னர் இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார்.1591ல் ஆந்த்ரே போர்த்தாடொ(Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் ('கடுமையான போத்துக்கீச மேலாதிக்கத்தின் கீழ்') 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான். பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான். உரிய வயது வரும்வரை அவனையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மருமகனான அரசகேசரி அரசன் ஒப்படைத்திருந்தான். எனினும், அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் சங்கிலி குமாரன் எடுத்துக்கொண்டான். இறுதியாக பெரும் போர் புரிந்து, அப்போது ஆட்சியை கைப்பற்றி இருந்த சங்கிலி குமரனை வீழ்த்தி யாழ்ப்பாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் வரிகளாலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் ஒரு குறுகிய காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் (Dutch) 1658 ஜூன் 22 கைப்பற்றி, யாழ்ப்பாண கோட்டையை ஆக்கிரமித்தனர். இந்த வீழ்ச்சியின் போது நல்லூர் எனும் ஊரில் இருந்த பல கோயில்களையும் சரஸ்வதி மண்டபம் என்ற பெரிய நூலகத்தயும் போத்துக்கேயர்கள் அழித்தாக குறிப்புகள் உள்ளன.

இந்த போரின் முடிவில் 1660 ல் கண்டி இராச்சியம் தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் ஒல்லாந்தர்(Dutch) வசமானது. ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் யாழ்ப்பாணத்தை பிரித்தாணியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது. இவர்களும் மக்களை கடுமையான வரிகள் மூலம் தொலைத்து எடுத்தனர் என்கிறது வரலாறு...

அதன்பின்னர், 25 மார்ச் 1802 ம் ஆண்டு அமியேன் ஒப்பந்தம் (Treaty of Amiens) மூலம் ஒல்லாந்தர்(Dutch) வசமிருந்த தீவின் அனைத்து பகுதிகளும் ஆங்கிலேயர் வசமானது..


ஆங்கிலேய காலனி ஆதிக்கம், 1803 ம் ஆண்டு கண்டியை கைப்பற்ற சூழ்ச்சியுடன் கூடிய 'கண்டி யுத்தம்' நடத்தி அப்போது ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்(இயற்ப்பெயர் கண்ணுசாமி) என்ற இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான்(சிங்கள அரசனிடம் இருந்து - முன்னைய அரசன் ஸ்ரீ இரஜாதி ராஜ சிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது ஆட்சயுரிமை பெற்றான்!).

இந்த அரசனை கைப்பற்றி, 1815 மார்ச் 2 ஆம் திகதி 'கண்டி ஒப்பந்தம்' என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் முழுமையாக கொடுக்கப்பட்டது. அதாவது இந்தியாவில் இருந்ததைபோல் தமிழ் மற்றும் சிங்கள குறு மன்னர்களும் கப்பம் கட்டி தங்கள் பகுதிகளை நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டது.

இது மாதரியான வழக்கும் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் (Colebrooke Commission 1833) என்ற ஒப்பந்தத்தின் மூலம் சிதறிக் கிடந்த பல பகுதிகளை ஒருங்கினைத்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தினை செயல்படுத்தியதன் விளைவாக பிற்காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினை உருவாக அடிக்கோலாக அமைந்தது!

19 ம் நூற்றாண்டு ஆரம்பாத்தில்
சிலோனின் செறிவான காபி மற்றும் தேயிலை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பெருமையாக விளங்கியது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ வர்க்கம், இந்த தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கூளித்தொழிலாளிகளை இறக்குமதி செய்ததது.

இதற்கிடையில், பத்தாம், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பாண்டிய சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பிறகு, சிங்களர்கள் ஆட்சியின் போது, மத்திய தெற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து, மேல் சாதி சமூகத்தினர், வியாபாரம், மதம் ஆகிய நோக்கங்கலுக்காக ஊடுருவியதாக தெரிகிறது. இவர்களை இலங்கையின் உயர்தட்டு சமூகம் தன்னுடன் காலபோக்கில் இணைத்துக்கொண்டது தெரிகிறது. இவ்வாறாக இலங்கைக்கு இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த மக்கள் தொகை 10% சதவிகிதமாக இருந்தது...

1920 களில் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பல தமிழர் தலைவர்கள், தமிழர் உரிமைகளுக்காக போராடினர். குறிப்பாக தமிழ் மொழி போதனைகள், பள்ளிகளின் கட்டுமானம், போன்ற சமூக பணிகளாகும். இந்த கால கட்டத்தில் தான் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்தன.

இன்னும் வரும்...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.