Thursday, February 26, 2009

வேலை இழப்பை தவிர்க்கவும்; சமாளிக்கவும் - பயனுள்ள யோசனைகள்.நான் நேற்று "ஒபாமாவின் புதிய அயல் கொள்முதல் கொள்கை, இந்திய மென்பொருள் துறை இளைஞர்களை பாதிக்கும்; மாற்று வழி என்ன??!" என்ற பதிவை செய்திருந்தேன்.

ஒபாமா அவர்களின் புதிய பொருளாதார மற்றும், வரி விதிப்பு கொள்கைகளினால், மென்பொருள் மற்றும் அயல் கொள்முதல் முறையை சார்ந்து விளங்கும் பிற துறைகளும் எவ்வாறு பாதிக்கபடுகின்றன என்பதை மேற்கோள்களுடனும், புள்ளிவிபரங்கள் மூலமும் எடுத்துக்காட்டி இருந்தேன்.

அது தொடர்பாக நான் எழுப்பிய சில கேள்விகளுக்கு இன்று என்னுடைய சில உளக்கருத்துக்களை('idea') இங்கு பதிவு செய்துள்ளேன்.நாம் உணர்வது என்ன?
* உலகச்சந்தை சரிவில் இருக்கிறது.
* தினமும் வேலை இழப்பை பற்றி செய்திகளை படிக்கின்றோம்.
* சில நண்பர்களுக்கு வேலை இழப்பு ஏற்ப்படதையும் அறிகிறோம்.
* இன்னும் 24 மாதத்திற்கு இந்த நிலை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
* ஆங்காங்கே, சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
* நிறுவனங்களின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நமது தேவை என்ன?
> தற்ப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை தக்கவைக்க வேண்டும்.
> மாதாமாதம் 'வாங்கிய' கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
> நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தை பேண வேண்டும்.
> இவற்றை தடையின்றி செய்யலாம் என்ற பாதுக்கப்பு உணர்வு வேண்டும்!.

செய்யக்கூடியான சில

# தேவையற்ற விடுப்பு எடுப்பதை தவிர்கவும்.
# பயணம் மேற்கொள்ளவும், இடம் மாறுதல் செய்யவும் தயாராக இருக்கவும்.
# சம்பள உயர்வை எதிர்நோக்க வேண்டாம்.
# சிரமம் பாராமல் கொடுத்த பணியை முடித்து கொடுக்கவும்.
# புதிய நிறுவனங்களுக்கு செல்ல, அவசியம் இன்றி முயல வேண்டாம்.
# புதிய தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவேண்டும்.
# முடிந்த வரை உறப்பத்தியை பெருக்கி வேலைகளை துரிதாமாக செய்து
நிறுவனம் லாபம் ஈட்ட உதவ வேண்டும்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இது, பல நெருக்கடிகளில் இருந்து காக்கும்.
$ குறிப்பாக கடன் அட்டைகள் மூலம் வாங்கிய கடனை அடைக்கவும்.
$ அது போல் மாத சந்தாக்கள் ('E.M.I') அனைத்தையும் அடைக்க முயலவும்.
$ நீங்கள் இருக்கும் வீடு வாடகை அதிகமானதாகவும் தேவைக்குமேல்
பெரிதாகவும் இருந்தால் வேறு குறைந்த வாடகை வீடு பார்க்கவும்.
$ உங்கள் மாத செலவுகளை பட்டியலிடவும்.
$ தேவையானது, அனாவசியமானது என்று பட்டியலை பிரித்துக் கொள்ளவும்.
$ அனாவசியமானதை பட்டியலிலிருந்து நீக்கிவிடவும்.
$ அடிக்கடி வெளியில்('Restaurants') உண்பதை தவிர்க்கவும்.
$ மேலும் என்னென்ன வழிகளில் பணம் விரயமாகுமோ அனைத்தையும் தவிர்க்கவும்.


தயாராக இருங்கள்
இனி ஒரு வேளை பணி இழப்பு ஏற்ப்பட்டால் சந்திக்க, செய்யவேண்டியன...

@ இயன்ற வரை - வேறு துறைகளில் செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
@ தந்தை, சுய தொழில் செய்பவராக இருந்தால், அந்த தொழிலில் ஈடுபடும் மனநிலையை வளர்த்துகொள்வது நல்லது.
@ நண்பர்கள் வேறு தொழில் செய்பவர்களாக இருந்தால், அவர்களுடன் கலந்து அந்த தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை ஓரளவு தடையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்..
@ இந்த சந்தர்ப்பத்தை ஒரு தொய்வாக எடுத்துகொள்ளாமல், நமக்கு பிடித்த துறைகளில் ஈடு பட கிடைத்த வாய்ப்பாக எண்ணி, முயற்சி செய்யலாம்.
(என்னை கேட்டால் விவசாயத்துறையில் ஈடு பட விருப்பம்!
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." நினைவிற்கு வருகிறது... )புதியவர்களுக்கு சில யோசனை

தற்போது வேலைக்காக விண்ணப்பித்து கொண்டிருப்பவர்களுக்கு

^ ஏதாவது பயிற்சி வகுப்புக்களில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
^ ஏதாவது நிறுவனங்களில் வேலை பழகும் வாய்ப்பு கிடைத்தால் உடனே சேரவும். பின்பு உங்கள் திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பை பெறலாம்...
^ இந்த நிறுவனம், இந்த ஊர், வேலை நேரங்கள், என்பதை போல் எந்த கட்டுப்பாடுகளையும் வகுத்துக்கொள்ள வேண்டாம்.
^ ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர் சிபாரிசுடன் முயல்வது நல்லது.
^ உங்கள் கருத்துக்கள் பரிமாறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.


நண்பர்களே! நீங்களும் உங்கள் உளக்கருத்துக்களை இங்கு பகிர்ந்தால், இந்த பதிவை இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்...

நன்றி.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Wednesday, February 25, 2009

ஒபாமாவின் புதிய அயல் கொள்முதல் கொள்கை, இந்திய மென்பொருள் துறை இளைஞர்களை பாதிக்கும்; மாற்று வழி என்ன??!
அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல் மற்றும் உள்நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்ட நிலைமைகளை சமாளிக்க ஒபாமா அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள கொள்கை இந்திய மென்பொருள் துறையில் பணிபுரியும் இளைஞ்ர்களை கவலையுற செய்திருக்கிறது...

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "நாம் நமது வரி விதிக்கும் கொள்கையை தெளிவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றி, நமது நாட்டில் உள்ள வேலைவைப்புகளை அயல் கொள்முதல் ('Outsourcing') மூலம் குறைக்கும் நிர்வனங்களுக்கு அதிக வரியும், உள் நாட்டு மக்களுக்கு வேலைவாப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பும் செய்து மாற்றியமைப்போம்" என்று கூறியுள்ளார்..

ஒபாமாவின் இந்த அறிக்கை, இந்தியா போன்ற மலிவான நாடுகளிடம் அயல் கொள்முதல் ('Outsourcing') செய்யும் அந்நாட்டு நிறுவனங்களுக்கு பலத்த எச்சரிக்கை சமின்ஞைகளை அனுப்பி உள்ளது...


மேலும் அவருடைய முதல் பாராளுமன்ற உரையில், "எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளங்கள் அமெரிக்காவின் எல்லைகளை கடந்து போவதை தாம் விரும்பவில்லை என்றும், மற்ற அமெரிக்கர்களும் விரும்ப மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்!"

ஒபாமாவின் இது போன்ற தொடர்ச்சியான அயல் கொள்முதல் எதிரிப்பு நிலைப்பாடு இந்திய நிறுவனகளை கவலையுற செய்திருக்கிறது... எனென்றால், அமெரிக்காவின் மொத்த அயல் கொள்முதல் நிதியான $64 பில்லியன் தொகையில் 60% சதவிகிதம் இந்தியாவுக்கு வருகிறது...


இதுமட்டுமல்ல, அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிறுவனந்களை மீட்கும் அமெரிக்கா அவர்களுக்கு ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, "H-1B என்று அழைக்கப்படும்
மூன்று வருட கால வீசாவில் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவரை, வேலைக்கு அமர்த்தக்கூடாது". இந்த கட்டுப்பாடும் இந்தியாவை ஏற்கனவே கடுமையாக பாதித்திருக்கிறது. ஏனென்றால், அமெரிக்க அரசால் வருடம் தோறும் விநியோகிக்கப்படும் 65,000 H-1B வீசாகளில் 21,667 இந்திய மென்பொருள் வல்லுனர்களுக்கே வழங்கப்படுகிறது!!!

ஏற்கனவே, பொருளாதார அழுத்தங்களை சந்தித்துவரும் இந்தியாவிற்கும், அதன் மென்பொருள் நிறுவனங்களுக்கும் அமெரிக்கா அதிபரின் கொள்கைகள் பெரும் சவாலாகவே இருக்கும் என்பது உறுதி...

இனி நாம் பார்க்க வேண்டியது, தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கில் மென்பொருள் துறையை நம்பி படித்து வெளியில் வரும் மாணவர்களின் நிலை என்ன?

மாணவர்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையை தேர்ந்தெடுத்து படிப்பது எந்த அளவிற்கு அவர்களுக்கு ஒரு நம்பகமான எதிகாலத்தை ஏற்படுத்தும்??

ஏற்கனவே மென்பொருள் துறையில் இருப்பவர்கள், ஒருவேளை தங்களுக்கு வேலை பறிபோகும் சூல்நிலை வந்தால் மாற்று வேலைகளை செய்ய தயாராக இருக்கின்றனரா??

மேலும் இது தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கு கூறுங்கள்...

நன்றி...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Tuesday, February 24, 2009

ஈழத்தின் வரலாற்றுச் சுவடுகள் - எளிய தொகுப்பு பாகம் 1

வணக்கம், ஈழ வரலாற்றை தெளிவாக அறிய முற்பட்டபோது. நான் படித்து அறிந்த செய்திகளை, இன்னும் பலருக்கு எளிய வடிவத்தில் தந்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று எண்ணி, இந்த பதிவை எழுதுகிறேன். என்னால் இயன்ற வரை சுருக்கியும், தெளிவான வரலாற்றுச் சான்றுகளை பதிவுசெய்தும் இருக்கிறேன். பக்க சார்பு இல்லாமல் இருக்க, இயன்ற வரை 'மூல' இணைப்புக்களையும் (சான்றாக) தந்துள்ளேன்.


ஓரளவு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பட்ட பிறகான காலத்திலிருந்து (பாதிரியார் பெர்னாவோ டி குவைறோஸ் 'perna de quiros' சிலோனின் மதமாற்றங்கள் பற்றி எழுதிய நூல்களினூடாக), சற்று சுருக்கமாக சிலோனின் வரலாற்றை பார்போம். சங்கிலியன் என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போர்த்துகல் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்க குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள்.யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து சங்கிலியனைத் தண்டிக்க வேண்டுமென்று இவர்கள் கோவாவில் இருந்த போத்துக்கேயர் தலைமையையும், போத்துக்கல் அரசனையும் பலவழிகளிலும் வற்புறுத்தி வந்தனர். 1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா(Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான்.

சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லுரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். பின்னர் நீண்ட கால இடப்பெயர்வினால் வருந்திய போத்துகேய தலைமைக்கு தூது அனுப்பி, போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு, நல்லூர் திரும்பினான். சங்கிலி மேலும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பின்னர் இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார்.1591ல் ஆந்த்ரே போர்த்தாடொ(Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் ('கடுமையான போத்துக்கீச மேலாதிக்கத்தின் கீழ்') 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான். பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான். உரிய வயது வரும்வரை அவனையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மருமகனான அரசகேசரி அரசன் ஒப்படைத்திருந்தான். எனினும், அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் சங்கிலி குமாரன் எடுத்துக்கொண்டான். இறுதியாக பெரும் போர் புரிந்து, அப்போது ஆட்சியை கைப்பற்றி இருந்த சங்கிலி குமரனை வீழ்த்தி யாழ்ப்பாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் வரிகளாலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் ஒரு குறுகிய காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் (Dutch) 1658 ஜூன் 22 கைப்பற்றி, யாழ்ப்பாண கோட்டையை ஆக்கிரமித்தனர். இந்த வீழ்ச்சியின் போது நல்லூர் எனும் ஊரில் இருந்த பல கோயில்களையும் சரஸ்வதி மண்டபம் என்ற பெரிய நூலகத்தயும் போத்துக்கேயர்கள் அழித்தாக குறிப்புகள் உள்ளன.

இந்த போரின் முடிவில் 1660 ல் கண்டி இராச்சியம் தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் ஒல்லாந்தர்(Dutch) வசமானது. ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் யாழ்ப்பாணத்தை பிரித்தாணியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது. இவர்களும் மக்களை கடுமையான வரிகள் மூலம் தொலைத்து எடுத்தனர் என்கிறது வரலாறு...

அதன்பின்னர், 25 மார்ச் 1802 ம் ஆண்டு அமியேன் ஒப்பந்தம் (Treaty of Amiens) மூலம் ஒல்லாந்தர்(Dutch) வசமிருந்த தீவின் அனைத்து பகுதிகளும் ஆங்கிலேயர் வசமானது..


ஆங்கிலேய காலனி ஆதிக்கம், 1803 ம் ஆண்டு கண்டியை கைப்பற்ற சூழ்ச்சியுடன் கூடிய 'கண்டி யுத்தம்' நடத்தி அப்போது ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்(இயற்ப்பெயர் கண்ணுசாமி) என்ற இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான்(சிங்கள அரசனிடம் இருந்து - முன்னைய அரசன் ஸ்ரீ இரஜாதி ராஜ சிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது ஆட்சயுரிமை பெற்றான்!).

இந்த அரசனை கைப்பற்றி, 1815 மார்ச் 2 ஆம் திகதி 'கண்டி ஒப்பந்தம்' என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் முழுமையாக கொடுக்கப்பட்டது. அதாவது இந்தியாவில் இருந்ததைபோல் தமிழ் மற்றும் சிங்கள குறு மன்னர்களும் கப்பம் கட்டி தங்கள் பகுதிகளை நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டது.

இது மாதரியான வழக்கும் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் (Colebrooke Commission 1833) என்ற ஒப்பந்தத்தின் மூலம் சிதறிக் கிடந்த பல பகுதிகளை ஒருங்கினைத்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தினை செயல்படுத்தியதன் விளைவாக பிற்காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினை உருவாக அடிக்கோலாக அமைந்தது!

19 ம் நூற்றாண்டு ஆரம்பாத்தில்
சிலோனின் செறிவான காபி மற்றும் தேயிலை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பெருமையாக விளங்கியது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ வர்க்கம், இந்த தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கூளித்தொழிலாளிகளை இறக்குமதி செய்ததது.

இதற்கிடையில், பத்தாம், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பாண்டிய சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பிறகு, சிங்களர்கள் ஆட்சியின் போது, மத்திய தெற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து, மேல் சாதி சமூகத்தினர், வியாபாரம், மதம் ஆகிய நோக்கங்கலுக்காக ஊடுருவியதாக தெரிகிறது. இவர்களை இலங்கையின் உயர்தட்டு சமூகம் தன்னுடன் காலபோக்கில் இணைத்துக்கொண்டது தெரிகிறது. இவ்வாறாக இலங்கைக்கு இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த மக்கள் தொகை 10% சதவிகிதமாக இருந்தது...

1920 களில் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பல தமிழர் தலைவர்கள், தமிழர் உரிமைகளுக்காக போராடினர். குறிப்பாக தமிழ் மொழி போதனைகள், பள்ளிகளின் கட்டுமானம், போன்ற சமூக பணிகளாகும். இந்த கால கட்டத்தில் தான் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்தன.

இன்னும் வரும்...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Sunday, February 22, 2009

வக்கீல்கள் - போலீஸார் மோதல்; பின்னனியில் நடந்தது என்ன?? ஆதாயம் யாருக்கு??!செய்திகளை படித்தவர் அனைவருக்கும் எழும் கேள்விகளுக்கு இந்த பதிவு ஓரளவுக்கு விடையளிக்கும் என நம்புகிறேன்...

அடிப்படையாகவே, சுப்ரமணிய சாமி என்பவர் ஈழ போராட்டத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் எதிரானவர். மறுபுறம், வக்கீல்கள், அரசின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் ஈழ தமிழர்களுக்கு தொன்று தொட்டு ஆதரவு தருபவர்கள்.

கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், உங்களுக்கு இரு அணி உருவானது புலப்படும். ஒன்று, தமிழர்களுக்கு ஆதரவான, விடுதலை புலிகளை அங்கீகரிக்கிற அணி. இந்த அணியில் தான் வைகோ, திருமாவளவன் என (இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்), சீமான், வக்கீல்கள் உள்ளனர்...
இனொரு பக்கம் காங்கிரஸ், சுப்ரமணிய சாமி, ஸோ, போன்ற தமிழர் எதிரிகளும் உள்ளனர். சமீப காலமாக வக்கீல்கள் தொடர்ந்து தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்காக பல ஊர்களிலும் போராட்டங்கள், விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை தடுக்க கோரியும், அடக்க கோரியும், காங்கிரஸ் பல முறை ஆளும் தி.மு.க வை சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தனர்! அரசு ( தி.மு.க ) தன்னுடைய விஸ்வாசத்தை காட்டியாக வேண்டிய சூழ்நிலையில், வக்கீல்களை தண்டிக்க காத்திருந்தது.
தி.மு.க வுக்கு சுப்ரமணிய சாமி மீது ராஜிவ் காந்தி காலத்தில் இருந்தே முரண்பாடு இருந்து வந்தது நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்...
மறு புறம் காவல் துறையும், இதற்க்கு முன்னர் சட்ட கல்லூரி விவகாரம் தொடர்பான அவதூறுகளை துடைத்து கொள்ள சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தது...
இந்த சூழ்நிலையில் கருப்பு பூனை படை பாதுக்காப்பில் இருக்கும் சுப்ரமணிய சாமி, தன்னை வெறுப்பவர்கள் இருக்கும் இடத்திற்கே வருவது பஞ்சும் நெருப்பும் அருகருகே வருவதை போன்ற ஒரு நிகழ்வு... இது தன்னிச்சையாக நடப்பது காத்திருபவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமா இல்லையா?? (போலீஸ் அரசாங்கத்தின் (தி.மு.க + காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருப்பதை கவனத்தில் வைக்கவும்!)
இதற்க்கு மேல் என்ன நடந்திருக்கு, என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை...

காரியம் ஆகா வேண்டியவர்களுக்கு காரியம் முடிந்தது. அதாவது,
1. காங்கிரசை திருப்தி படுத்தியாச்சு.
2. தமிழ் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பியாச்சு.
3. தமிழர்களுக்காக போராடும் தலைவர்களின் வேகத்தை சற்று இந்த பிரட்சனையில்
திருப்பி விட்டாச்சு..
4. வக்கீல்கள் இனி சில நாட்களுக்கு போலீசை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள்! (அது உள் விவகாரம் தானே எல்லாம் சரி செய்து விடலாமல்லவா??! ; காவல் துறை அதிகாரியை இடம் மாற்றம் செய்யலாம்...)
5. அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த வக்கீல்கள் இப்போது ஆத்திரத்தின் காரணமாக அங்கங்கே ஓரிரு அது மீறல்கள் செய்து பேரை கெடுத்துக்கொல்வார்கள் (இல்லையேல் இவர்கள் கெடுத்துவிடுவார்கள்)
6. இன்னும் பிற உள் ஆதாயங்களும் உண்டு(!)..இறுதியில் முட்டிக்கொண்டு மண்டை உடைத்துக்கொண்டு நிற்பவர்கள் போலீசும், வக்கீல்களும் தான். இது ஏற்க்கனவே 'ஆட்சியை தக்க வைக்க', பலர் காலில் விழுந்து ஆட்சியை பாதுகாத்து கொள்வதை விட, போதிய பலம் நிறைந்த காங்கிரஸ் காலை பிடித்தால் பல விதத்தில் லாபம் என்று கணக்கு போட்டு விட்ட தி.மு.க தமிழர் பிரச்சனையில் மெத்தனத்தை கடைபிடித்து பெரும் துரோகத்தை செய்வதை தாங்க முடியாத, எதிரணியில் (தமிழர்கள் பாதுகாப்புக்கு இயக்கம்) இருக்கும் அனைவருக்கும் இப்போது கோபத்தை ஊட்டி இருக்கிறது... அவர்களும் இப்போது வக்கீல்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்..

இவ்வாறாக, அவர் (பெரும் தலைவர்(!)) நினைத்தது நடக்க ஆரம்பித்து விட்டது...

அட தலைவர் சொன்னது உண்மைதான்!! //காக்கியில் இருப்பவரும் கருப்பு சட்டையில் இருப்பவரும் நம்மவரே(!)//

என்ன ஆச்சரியம், அரசியலில் பழம் தின்று பல கொட்டைகள் போட்டவரல்லவா??


பிழையிருந்தால் எடுத்து காட்டவும், சரியாக இருந்தால் ஏற்று கொள்வேன்...

நன்றி...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Saturday, February 21, 2009

தீ குளிதவரின் தியாகம் உணர்த்துவது என்ன??இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மனிதச் சங்கிலி போராட்டம்.

இதுவரை மனித சங்கிலிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நடத்திய இயக்கங்கள் கட்சிகள் - மத்தியில் ஆளுகிற காங்கிரஸ் அரசையும், மாநிலத்தில் அந்த அரசை தாங்கிபிக்கும் தூண்களில் ஒன்றான தி.மு.க அரசையும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, போரை நிறுத்த வேண்டும் என்று வலியுரிதின!
அவ்வளவு ஏன், இதே தி.மு.க தான் முதலில் நடத்திய மனித சங்கிலியின்போது மத்திய அரசை போரை நிறுத்த வலியுறுத்தியது?! ஆனால் இப்போது அது அந்த கோசத்தையே கைவிட்டுவிட்டது... மாறாக இலங்கை அரசை வலியுருதுகிரார்கலாம்.. ஏன் இந்த குட்டிகர்னம்?? இந்திய அரசு அழுத்தம் கொடுக்காமல் இந்த போர் நிற்க்கிறது என்று தெரிந்தும், இந்திய அரசு இதுவரை போரை நிறுத்து என்று ஒப்புக்கு கூட சொல்லாத நிலையில் இவர்கள் இந்திய அரசை கண்டிக்காமல், வற்புறுத்தாமல், இலங்கை அரசை வலயுருத்துவது ஏன்??
தி.மு.க வினால் இந்திய அரசை பணியவைக்க முடியும். இலங்கை அரசை ஒருபோதும் பணிய வைக்க முடியாது... போரை நிறுத்த முடியும், அப்பாவித்தமிழர்க்ளை அழிவிலிருந்து காக்க முடியும் ஆனால் அதற்க்கு பதவியையும் ஆட்சியும் துச்சமாக மதிக்க வேண்டும்.. இதை தி.மு.க அரசு செய்தது 'அன்று' ஆனால் 'இன்று'??
மக்கள் சிந்திப்பார்களா??? தி.மு.க வினர் சிந்திப்பார்களா??

"ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு கோரி தி.மு.க. தொண்டர் இன்று தீக்குளிப்பு"

இந்த மாதரி போராட்டங்களை நடத்தும் உங்கள் கட்சியின் நோக்கமும் கலந்து கொள்பவன் நோக்கமும் ஒன்றல்ல. அதுதான் வேதனைக்கு உரியது... கலந்து கொள்பவன் தன் உயிரை கூட துச்சமாக மதித்து தன் குடும்ப நலனை புறம்தள்ளி இன்னொரு உயிரை காக்க தன் உயிர் உதவாதா என்று நினைக்கும், உயிர் துறக்கும் தியாகி எங்கே? போரை நிறுத்தும், பல உயிரை காக்கும் வல்லமை இருந்தும் அவர்களை சாக விட்டு, தன் ஆட்சியை காப்பாற்றி கொண்டும், தன் சுய நலன், குடும்ப நலன், கொழுந்தியா நலன், இன்னும் பிற நலன் பேணும் கட்சி தலைவர்கள் எங்கே??

இனியும் ஏமாளியாக வேண்டுமா?? உறக்கத்தில் இருப்பவன் எவனுக்கும் விடுதலை வாங்கிதரவோ, எவன் உயிரும் காக்கவோ முடியாது..
விழித்துக்கொள் தமிழ் இனமே... உன்னை மன்றாடி கேட்கிறேன்..

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Wednesday, February 18, 2009

பண வீக்க தளர்ச்சி சாமானியனுக்கு பயன்படுமா??வணக்கம் நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தது நம் அனைவருக்கும் தெரியும். இந்திய அரசு எவ்வாறு தன்னுடைய பணவீக்கத்தை கணிக்கிறது என்பதை பார்த்தபின் அதனால் எவ்வாறெல்லாம் என்னையும் உங்களையும் போல ஒரு சராசரி குடிமகன் பாதிக்க படுகிறான் என்பதை பார்ப்போம்.

நமது பணவீக்கம் மொத்த விற்ப்பனை குறியீடு (Wholesale Price Index 'WPI') எனப்படும் முறையில் கணக்கிடப்படுகிறது. இது 1902 ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பொருளாதார மாற்றங்களை கணக்கிட கடைபிடித்த முறை. அதன் பின்னர் வளர்ந்த நாடுகளில் 1970 முதல் 'நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு' (Consumer Price Index 'CPI') என்ற முறையை அறிமுகப்படுத்தி கடைப்பிடித்து வந்தனர். இந்த முறைகளில் என்ன வேறுபாடு என்று அறிவது முக்கியம்.

மொத்த விற்ப்பனை குறியீடு

நமது நாட்டில் இருப்பதை போல் மொத்த விற்ப்பனை குறியீடு மூலமாக 435 முக்கிய பொருட்களின் விலையை கண்காணித்து அதன் விலை ஏற்றங்களை பிரதி வாரமும் கணக்கெடுத்து பணவீக்கத்தை உணர முடியும். ஆனால் 435 ல் 100 வகைகளுக்கும் அதிகமான பொருட்கள் நுகர்வோருக்கு சிறிதும் தேவை இல்லாத பொருட்கள் ஆகும். மேலும் இந்த முறையில் மொத்த வணிகத்தில் ஏற்படும் தாக்கத்தை மட்டுமே உணர முடியும் ஆனால் இங்கு அதை பொது மக்களின் மீது ஏற்படும் தாக்கத்தை கணிக்க பயன்படுத்துகின்றனர்! மேலே குறிப்பிட்ட 435 பொருட்களின் பட்டியலும் 1993-1994 ம் வருடம் நிர்ணயிக்க பட்டது. அதன் பின்னர் எந்த மாற்றமும் இன்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் கணக்கிட்டால் தவறான குறியீடாகவே அமையும் என்று பல பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிட்டு வருவது கவனிக்கப்பட வேண்டியது அவசியம். உலகில் உள்ள பெரிய நாடுகளில் 'WPI' முறையை கடைபிடிப்பது இந்தியா மட்டுமே என்பது குறிப்பிட தக்கது.

நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு

அதே சமயம், 'நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு' மூலம் நுகர்வோர் வாங்கும் முனையில் உள்ள 100 முக்கிய பொருட்களின் விலையை கண்காணித்து அதன் மூலம் பணவீக்கம் கணக்கிட படுகிறது! இப்போது உங்களுக்கே நன்றாக புரியும், 'CPI' மூலம் கணக்கிடுவது நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவதற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டி உள்ளது என்பதை மிக துல்லியமாக கணிக்க முடியும். அமெரிக்கா தொடங்கி இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், சீனா, சிங்கபூர், உள்ளிட்ட நாடுகள் இந்த முறையிலேயே தங்கள் நாட்டு மக்களின் பொருளாதார வாழ்க்கை தரத்தை (Cost of Living) கணிக்கின்றனர்.

நமது அரசு மிகப்பெரிய / மொத்த வியாபாரிகளின் அருகில் இருந்து கவனிக்கும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளினால் நம்மை போன்ற சாதாரண குடிமகன் முகம்கொடுக்கின்ற / எதிர்நோக்குகின்ற பொருளாதார சவால்களை உணர முடியாது என்பது தெளிவாகிறது!

யார் காரணம்?

இனி பணவீக்கம் என்ற காரணியால் நாம் அனைவரும் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதை பார்க்கலாம். மேலே குறிப்பிட்டதை போல கடந்த ஆகஸ்ட் மாதம் 'கச்சா எண்ணெய்' (Crude Oil) விலைஅதிகரித்ததால் பணவீக்கம் அதிகரித்தது என்ற செய்தி வெளியானவுடன், பெட்ரோல், டீசல், மட்டுமல்லாமல், சகல பொருள் அங்காடி (Super Market) முதல் பெட்டி கடைகள் வரை அனைத்து கொள்முதல் வழிகளிலும் விலை ஏற்றத்தினை கண்டோம். அரிசி முதல், சீம்பூ (கலைச்சொல் 'Shampoo'), பல் பொடி வரை அனைத்து பொருட்கள் விலையும் ஒரு சில நாட்களிலேயே உயர்த்தப்பட்டது!! என்ன காரணம்??! இதன் விளைவாக உணவு விடுதிகள் அனைத்திலும் விலை ஏற்றம், சரி நியாயம்தான்(!).

அதன் பின்னர் படிப்படியாக கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கியது, பணவீக்கமும் (செய்திகள் முலமாக தெரிந்து கொண்ட 12, 10, 8, 6 என) குறைய தொடங்கியது... இறுதியில் பல இழுபறிகளுக்கு பிறகு அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைத்தது. இன்று, அரசு பணவீக்கத்தை கட்டுப்படுதிவிட்டது, எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது, சாதனை நிகல்திவிட்டது என்றெல்லாம் தினமும் பத்திரிக்கைகளில் காண்கிறோம். எல்லாம் சரி, நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை சந்தையில் குறைந்ததா?? இல்லை. யாரை கேட்பது?! இன்று நம் அரசியல் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு இது தெரியுமா தெரியாதா??

இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இடைக்கால பட்ஜெட் ஒன்று வந்துள்ளது, புது வரிகள் இல்லை, மளிகை பொருட்களுக்கு வரி குறைப்பு... என்று செய்தித்தாள்களில் வருகிறது, சில எதிர் கட்சிகள் இது தேர்தல் மிட்டாய் என்று வர்ணிக்கின்றன, ஆனால், என்னுடைய ஆதங்கம், 'அந்த மிட்டாயை கூட காகிதத்தில் (செய்தி தாள்) மட்டும் தான் சுவைக்க முடியுமா?'

அதனால் நண்பர்களே, சிந்தியுங்கள். நாம் என்ன ஓட்டு போடும் இயந்திரங்களா? உங்களால் தேர்தெடுக்கபட்ட பின், அந்த நபரை (உங்கள் நாடாளுமன்ற உரிபினரையோ மாநிலங்களவை உரிபினரையோ), உங்களால் சந்தித்து கேள்வி கேட்க்க முடியுமா? முடியும் என்றால் அந்த வேட்பாலரை பற்றி சிந்தியுங்கள்...
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை விரல்களை காட்டியும், கும்பிட்டும், உங்கள் வீட்டு பிள்ளை, எண்டெல்லாம் கூறிக்கொண்டு வந்தும் பின் எங்கு (யார் வீட்டில்(!)) இருக்கிறார் என்றே தெரியாதா நபரை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள். விடிவு வரும் நாள் தொலைவில் இல்லை.

பின் குறிப்பு: மேலே குறிப்பிட்ட பொருளாதார தகவல்களை, நான் பல இணையங்களில் வல்லுனர்கள் குறிப்பிட்ட விசயங்களையே எடுத்து காட்டி உள்ளேன்.

நன்றி

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Saturday, February 14, 2009

மாணவர்களே உங்களுக்கு ஒரு செய்தி...

அன்பிற்குரிய மாணவ நெஞ்சங்களே,

நான் உங்களைப்போல ஒரு மாணவனாக இருந்த பொழுது, எனக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு லட்சியங்கள் தோன்றுவதும் பின் மாறுவதுமாக இருந்தது. அதில் ஒன்று அரசியலில் இணைந்து மக்களுக்கு நன்மை செய்வது, சொல்லப்போனால் பெரும்பாலும் தேர்தல் வரும் காலங்களில் பல விதமான பதவிகளுக்கு தலைவர்கள் என்பவர்கள்(!) வாக்கு கேட்டு வருவார்கள், உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர்(M.P), சட்டசபை உறுப்பினர்(M.L.A), தொடக்கம் கவுன்சிலர் வரை எத்தனையோ தேர்தல், இடை தேர்தல் வந்தபோதெல்லாம் அவர்களை பார்த்திருக்கிறேன். மக்கள் கூட்டம் கூடமாக சென்று அவர்கள் திருமுகத்தை பார்ப்பதற்காகவும் சிலர் ஆரத்தி எடுப்பதற்காகவும் இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் கூட வைத்துக்கொள்வார்கள் (அத்துடன் அன்பளிப்புகளும் உண்டு!!) .

ஆனால், தேர்தல் காலங்களில் பல பரபரப்புக்களை ஏற்படுத்தும் இவர்கள், தேர்தல் முடிந்தபின் மொத்தமாய் தொலைந்து போவது எனக்கு ஒவ்வொரு முறையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் பெரியவர்கள் அதை பற்றி கண்டுகொல்லாதவர்கலாய் தெரிந்தனர். எனது பெற்றோர் மற்றும் எங்கள் பகுதியில் இருந்த மக்கள் தங்கள் பகுதிக்கு ஒரு சாக்கடை வசதி வேண்டும் என்று தேர்தல் காலங்களில் காட்சியளிக்கும் அனைத்து தலைவர்களிடமும் மனு கொடுப்பார்கள். பின் வழக்கம் போல் அவ்வப்போது சிறிய குழுவாக சென்று பஞ்சாயத்து போர்டு முன் அதிகாரிகளை பார்த்து மனு கொடுப்பார்கள் ஒரு சில சமயம் சாலை மறியல் கூட செய்திருக்கிறார்கள், எந்த பயனும் இல்லை. (இதுவரை சாக்கடை வரவில்லை என்பது வேறு விஷயம்?!). இது போன்ற நேரங்களில் நாம் ஏன் வளர்ந்து ஒரு நல்ல தலைவனாக கூடாது என்று தோன்றும். பள்ளி கல்லூரி படிக்கும் பொழுது மாணவ தலைவனாக இருந்து செயல்பட்டு ஆறுதலைந்து இருக்கிறேன். ஆனால் கால மாற்றங்களினாலும் இன்னும் இனம்காண முடியாத பல காரணங்களால் இப்போது நானும் ஒரு சராசரி பொது சனமாக மாறி விட்டேன்.

இப்போது மக்களும் விழித்து கொண்டார்கள் என்று நினைக்க தோன்றுகிறது. ஆம் இபோதெல்லாம், மக்கள் வாக்களித்த பின் இவர்களை பிடிக்க முடியாது அதனால் முன்கூட்டியே (Pre-Paid) வருவதை பெற்றுகொள்வது நல்லது என்று நினைத்து விட்டனர் போலும்! ஆனால் மாணவர்களே, இதுதான் ஜனநாயகமா? நமது மக்கள், தங்களது உரிமையான மக்களாட்சியை மறந்து இன்று தங்களுக்கு தாங்களே விளம்பரபடுதிகொண்டு திரியும் போலி அரசியல் வாதிகளிடம் அடிமைகளாகும் நிலை தான் உள்ளது.

இதை யாரும் மறுக்க முடியாது, தாங்கள் மொத்தமாக சுருட்டுவதிலிருந்து தங்களுக்கு கீழே வாழ் பிடிப்பவர்களுக்கு உதிரிகளை திணித்து விளம்பரங்கள் செய்ய தூண்டுகிறார்கள். தொண்டர்களும் தங்கள் கற்பனா சக்திக்கு இயன்ற வரை புது புது பட்டங்களை ('தேச பிதாவே' தொடங்கி 'பாராளுமன்றமே', 'பிடல் காஸ்ட்ரோவே', என 'வாரணம் ஆயிரமே' வரை) சூட்டி மகிழ்கின்றனர்; மகிழ்விக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதை தங்கள் லட்சிமாக கொண்டு அரசியலுக்கு வந்த மாபெரும் தலைவர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு அவர்களின் பெயரில் இயக்கங்களுக்கு பெயர் வைத்துக்கொண்டு தலைவர்கலானவர்கள், இப்போது தங்களுக்கு ஒட்டு போடுவதுதான் மக்கள் கடமை என்று எதிர்பார்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த நிலைமை மாறி ஆகா வேண்டும், மாற்றி ஆகா வேண்டும், அது மாணவர்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நினைவில் வைத்து கொள்ளுங்கள், இதை நீங்கள் அறிவீர்களோ இல்லையோ, அவர்கள் அறிவார்கள். இந்த மண்ணை (தமிழ் மண்ணை) ஆழ இனி புதியவர்கள் தேவையில்லை தங்கள் பிள்ளைகளும் வாரிசுகளும் போதும் என்று முடிவு கட்டிவிட்டார்கள் போல தெரிகிறது. தாங்களே T.V சேனல்கள் ஆரம்பிப்பது பின் குழந்தைகள் தொடங்கி, மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் வரை ஆக்கிரமிக்கும் நிகழ்ச்சிகளை ஓயாது திணித்து உங்கள் நேரத்தை பறிக்கின்றனர்! அதில் விளம்பரங்கள் மூலம் பெறும் கொள்ளை லாபத்தையும் தங்களுக்குள் பங்குபோட்டு கொள்கின்றனர்! அதுமட்டுமில்லாமல் தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே ஒலிபரப்பு செய்கின்றனர். இதன் மூலம் மக்களை தங்கள் மாய பிடிக்குள் (Virtual Prison) வைத்திருக்கின்றனர். தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கின்ற 'மன்புமிகுக்கள்' தமிழை சினிமா நட்சத்திர மேடைகளில் நடிகைகளை கௌரவிபதன் மூலம் வளர்க்கிறார்களாம்! (அந்த நடிகைக்கு தமிழே தெரியாது என்பதும் மேடையில் அரைநிர்வாணமாக வந்து அமரும் கலாச்சாரத்தை கடைபிடிப்பவர் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும்?!) இப்படி ஓடி ஓடி தாங்களே திரைப்படங்களையும் தரமின்றி தயாரித்து என் சமுதாயத்தை சீரழிகின்றனர்; மாசுபடுதுகின்றனர்... இது மட்டுமா? இன்னும் தகவல் தொடர்பது சம்பந்தமான மீடியாக்கள் என அனைத்து வழிகளிலும் சொந்த பிரச்சாரத்தை திணித்து திணித்து நம்மை ஆட்டு மந்தைகளாக வளர்த்து வருகின்றனர்.. எல்லாவற்றையும் எழுதமுடியாது நண்பர்களே! விழித்துக்கொள்ளுங்கள்...

நான் உங்களிடம் விடுக்கும் கோரிக்கை எல்லாம், நீங்கள் சுயமாக சிந்தியுங்கள், நமது வரலாற்றில் தங்களை தன்னலமற்ற தலைவர்கள் என நிருபித்த மாபெரும் தலைவர்கள் சொன்ன கருத்துக்களை தேடி தேடி படியுங்கள். ஆம், பேரறிஞர் அண்ணா, கல்வி கண் திறந்த காமராஜர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், போன்றோர் நூல்களை படியுங்கள். நம் தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை!! விவேகானந்தரின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, "விழித்திரு, தனித்திரு, பசித்திரு"...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Tuesday, February 10, 2009

கலாச்சார சிக்கல் ஏற்படுத்தும் 'பப்' கள் நமக்கு அளிக்கும் பயன்கள் என்ன?!

இன்று நமது நகரங்களில் படமெடுத்து ஆடுகின்ற ஒரு நாகரீகம் பப்புக்கு போதல். இது தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். முதலில் ஆண்கள் வேலை பழு காரணமாக மன அழுத்தத்திற்க்கு ஆளாகிரார்கள் அதனால் பப்புக்கு போனால் தவறில்லை, பெண்கள் சென்றால் தவறு போலத்தான் தெரிகிறது என்றார்கள் ஒரு சாறார். பின் ஆண்கள் மட்டுமா வேலைக்கு செல்கிறார்கள் பெண்களும் தான் அதே வேலைகளை செய்கிறார்கள் அதனால் அவர்களுக்கும் சம உரிமை இருக்கின்ற காரணத்தினால் பெண்களும் பப்புக்கு செல்வது சரியே என்றனர் இன்னொரு சாறார். தற்போது மத்திய பெண் அமைச்சர் ஒருவர் அனைத்து பெண்களும் பப் நிரப்பும் போராட்டதில் ஈடுபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்!

இது இப்படி இருக்க ஒரு விவாதத்தின் போது எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார், நாம் (தமிழர்கள்) கலாச்சாரம் பண்பாடு இவற்றையெல்லாம் கடைபிடித்து எதனை சாதித்தோமெநவும், இது போன்ற தனிமயான இடங்களில் ஆபாச நடனங்களை பணம் உள்ளவர்கள் பார்பதில் ஒன்றும் தவரில்லை. மேலும் ஒரு படி சென்று அவர் சொன்னார் இன்னும் சில இடங்களில் தங்கள் கார் சாவிகளை குலுக்கி ஒன்றை தேர்வு செய்து ஒரு நாள் இரவு மட்டும் தங்களுக்கு கிடைத்த காரையும் அந்த காருக்கு சொந்தக்காறரின் மானைவியையும் (wife swapping) ஓட்டிச் செல்கிறார்கலாம், அது போல இன்னும் பல இடங்களில் நடந்தால், தாம் அதனை வரவேற்பதாகவும் சொன்னார்!!

என் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.

வேலைக்கு செல்பவர்கலுக்கு மன அழுத்தம் இருந்தால் அதற்க்கு மாற்று மருந்து இரவில் குடித்துவிட்டு உறங்காமல் ஆடுவதுதானா?! அப்படியென்றால், பப்புகள் இல்லாத ஊர்களிலும் கிராமங்களிலும் வாழ்பவர்கள் மன அழுத்தத்துடனேயே வாழ்கின்றனரா?

ஆண்களாகட்டும் பெண்களாகட்டும், மன அழுத்தத்தை குறைக்கிறேன் என்ற காரணத்திற்காக ஒரு இடதில் ஒன்று கூடி குடித்து பலருடன் ஆடுவதும் தன்னிலை மறப்பதும் கட்டுப்பாடுகளை மறந்து நடந்து கொள்வதும் - நாளடைவில் மன நிம்மதியை குழைக்குமே ஒழிய குறைக்காது என்பது என் எண்ணம்!

மேலும் பப்புகளில் கிடைக்கும் பல வகையான மது பாணங்களை குடிப்பதும் ஆரோக்கிய கேடான உணவுகளை உண்பதும் நமது ஆரோக்கியத்தை கெடுத்து உடல் நல குறைபாடுகளையும் ஏற்படுதுமே?? குறிப்பாக கர்பினி பெண்கள் சென்றாள் அங்கு உள்ள புகை முதலியன சிசுவுக்கும் பங்கம் விளைவிக்குமே??

இது போன்ற கலாச்சாரம் (சீர்கேடுகள்) நிறைந்த பல மேலை நாடுகளில் இன்று நாம் விவாகரத்துக்களை அதிகமாக காணாக்கூடியதாக இருக்கிறதே?? அதிலும் ஒருவர் ஒருமுறை அல்ல பல முறை விவாகரத்து செய்துகொள்கின்றனர். இதனால் பரவலாக குடும்பம் குழந்தைகளை பேணி வளர்ப்பது வயோதிகர்களுக்கான பராமரிப்பு இவைகளை செய்வது அன்னாட்டு அரசாங்கங்களுக்கு பெரும் சவாலாகவே மாறி வருகிறது. தற்போது குறிப்பாக அமெரிக்கர்கள், தங்கள் அரசாங்கம் தமது பெற்றோர்களை பரமரிக்க வேண்டும் என என்னுவதை அன்னாட்டு ஜனாதிபதி தேர்தல் பிரட்சாரதின்போது உணரமுடிந்தது!! இது எதை நமக்கு உணர்த்துகிறது?!

ஆக நமது நாடும், நமது மன நிலையும், நமது சமுதாயமும் - பல விவாகரத்துக்களையும், அதனால் குழந்தைகளும் வயதானவர்களும் அனாதைகளாக விடப்படும் சூழ் நிலைக்கு தள்ளப்படுவதயும் ஏற்றுக்கொள்ளும் மன இருக்கத்திற்க்கு தம்மை தயார் செய்து கொண்டணரா??

இதை படிபவர்க்கள் தங்கள் கருதுக்களை எழுதினால் சில உண்மைகளை உணர முடியும்!

நன்றி.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Monday, February 9, 2009

தீதும் நன்றும்

வணக்கம் நன்பர்களே, சில வாரங்களுக்கு முன்பு நான் பணி புரியும் அலுவலகதில் ஒரு ஓய்வு நேரத்தில், எனது நன்பர்களுக்குள், தமிழை தாய் மொழியாக கொண்டு இந்தியாவில் வாழ்வது சிரமமான ஒன்றாக இருப்பதாக சிலரும், அப்படி எதுவும் இல்லை வேண்டுமென்றால் இந்தியை படித்துக்கொள்ளலாம் என்றும் பல்வெரு விதமான கருதுக்கள் வந்தன. அதிலும் குரிப்பாக எனது நன்பர்களில் ஒருவர், தமிழ் மொழி என்று ஒன்றை கொண்டு தனியாக இருப்பாதை விட அனைவரும் தமிழை கைவிட்டு இந்தியை கற்றுக்கொண்டால் எளிதாக இருக்கும் என்று சொன்னது என்னை மிகவும் வருத்தபட வைத்தது.

இது தொடர்பாக நான் திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். (இவர் ஆனந்த விகடனில் வாரம் தோரும் "தீதும் நன்றும்" என்ற தலைபில் கட்டுரைகளை எழுதி வருகிரார்.) நான் அவருக்கு எழுதிய கடிதத்தை ஆங்கிலதில் கீழே இனைத்துளேன்.

from Siva Prakasam
to av@vikatan.com
date Sat, Dec 27, 2008 at 9:39 AM
subject Regarding - Thedhum nandrum
mailed-by gmail.com

Dear Nangil Naadan,

Good morning. I'm a regular reader of your article Thedhum nandrum, it's one of my favorite part in AV. I would like to bring to your kind attention one point.

Yesterday, I our office, we had a group discussion. the discussio was regarding having Hindi as our national language and we (Tamils) don't know Hindi - Controvercial. At one point of the discussion. one person said why should we have Tamil? rather than learning 2 languages hindi and tamil, why don't we take one common language for our country - Hindi, and lets leave tamil. He is a Tamilan. I become anxious, I said for every one mother tongue is important, see France, Germany, Itally, Japan, etc.. and I said, onese culture and tradition has to be hold high.

He asked me tell me what is Tamils culture and tradition, what we are following now?! One moment I was stopped, I don't know what to say clearly. I was ashamed that I can't counteract a simple question to me regarding my mother language and tradition.. I learnt lot of Tamil books like Silapathikaaram, Thirukkural, Bharathiyar paadalgal, etc.. I remember "Tamilai igaldhavanai, thaai thaduthaalum videan", but, I was sorry, I could not help!!

Please write a article regarding the impoertance of our Mother tongue and benefits of beholding it!!

I'm a software engineer, most of the guys working with me, I saw are some how addict to western civilizations.. they are ready to accept North Indian culture, they are ready to celebrate, Holly as joyfull one rather than Pongal!! It is very important, people like you educate people like me and my friends.

Warm regards
Siva Prakasam.

Longlive Tamil..


இந்த கடிதத்திற்கு அவருடைய கட்டுரைகளில் பதில் அளிப்பார் என்று எதிபார்திருந்தேன்...

இந்தோ சென்ற வாரம் அவர் எழுதிய கட்டுரையில் பதிலளிதிருந்தார். அந்த கட்டுரையில் இருந்து சில பகுதிகளை நான்
உங்களுக்காக பதிவு செய்திருகிறேன்.

மொழி என்பது ஊடகம். ஆனால், அதை தாண்டியும் அது பண்பாடு, கலை, ஞானம், வரலாறு என சகலத்தயும் தாங்கி நிற்பது; அடயாளப் படுத்துவது. முதலில் சிந்தனையில் இருந்து மொழி பிறந்தது என்பார்கள். இன்று சிந்தனையே மொழி மூலமாக பிறக்கிறது.

தாய் மொழி என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. கருவில் இருக்கும்போதே குழந்தை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது என்பது விஞ்ஞானம். எனில், வீர அபிமன்யு நமக்கு ஒரு இதிகாச எடுத்துக்காட்டு. சிலர் கேட்பார்கள், 'பிரந்த அன்று ஒரு தமிழ் குழந்தையை கொண்டுபோய் சீனாவில் வளர்த்தால், அதன் தாய் மொழி எது?' என. கருவில் இருந்து கற்று கொள்வதும் மரபணுக்கள் மூலம் அதற்க்கு கிடைக்கும் தாய்மொழி அறிவுக்கு நாம் என்ன கணக்கு வைத்துக்கொள்வது?

தாய் மொழி யாவர்க்கும் வெறும் ஊடகம் மட்டுமல்ல. நூறாயிரம் பேர்கொண்ட சிற்றினக் குழுவானாலும், எட்டுக் கோடிப் பேர்கொண்ட பேரினம் ஆனாலும், தாய்மொழி தாய்க்கும் உயிர்க்கும் நிகரானது; மேலானது. தாய் என்பவள் எப்படி பால் தரும் இயந்திரம் இல்லயோ, அவ்விதமே தாய்மொழியும் வெறும் ஊடகம் மட்டுமே அல்ல!

தாய்மொழிக்கான இடம் பறிபோவதால்தான் 25 ஆண்டுகள் மேலாக, லட்சக்கணக்கில் உயிர்த் தியாகம் புரிந்து, ஈழத்தில் விடுதலைப் போராட்டம் நடக்கிறது. எத்தனை வாதங்கள் வைத்து மூடிப்பொதியப் பார்தாலும் அடிப்படை உண்மை மாய்ந்து போய்விடுவதில்லை. 'தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்பது வெறும் கோசமாக மலினப்பட்டுப் போனாலும் அந்த கூற்றின் உயிர் அழிந்துவிடுவது இல்லை.

நமது தாய் மொழி தமிழ் அதில் நமக்குச் சந்தேகம் இல்லை. எத்தனை புறக்கணித்தாலும் அவமரியாதை செய்தாலும் அதில் மாற்றம் இல்லை. 'நாய் குடிக்க மறுக்கும் கஞ்சியைத் தாய்க்கு ஊற்று' எனும் மனோபாவம் உள்ளவருக்கும் கூடத் தாய்மொழி, தாய்மொழியேதான்! நம்மூர் பிராமணர்களுக்கும் தாய் மொழி தமிழ்தான்; வடமொழி அல்ல. ஆனால், வல்லந்தமாக நாம், 'நீங்கள் தமிழர் இல்லை!' எனும் பழியை அவர்மீது ஏற்றித் தூற்றுகிறோம்.

எளிதில் மதிப்பெண் வாங்கலாம் என்பதால், செல்வர் வீட்டுக் குழந்தைகள் யாவருமின்று ஃப்ரென்சு, ஜெர்மன், இந்தி என மொழி பாடம் கற்கிறார்கள். தமிழில் எழுதப் படிக்கத் தெரியாமலேயே தமிழ்நாட்டில் வாழும் தமிழர் குழந்தைகள் ஆரம்பக் கல்வி, உயர் கல்வி பெற்றுவிட முடிகிறது. அவர்கள் ஆங்கிலதில் கடுகு வருக்கிறார்கள். கைம்மாற்றாக ஐந்து ரூபாய் கேட்க, "யார், கிவ் மீ ஃபை பக்ஸ் யார்!" என்கிறார்கள்.

தொலைக்காட்ச்சிகளில், தமிழ் சேனல்களில் எவர் பண்டம் பலகாரம் செய்துகாட்டினாலும், ருசி பார்த்து சொல்பவர், இரு விரல்களால் கருவண்டு ஒன்றினைத் தூக்குவது போல் தொட்டும் தொடாமலும் ஒரு விள்ளல் எடுத்து, உதட்டுச் சாயம் கெட்டு விடாமல் வாயினுள் இட்டதும் சொல்லும் முதல் வாய்ப்பாடு 'வாவ்'! இப்போது எல்லோர்கும் இந்த புதிய பேய் பிடிதிருக்கிறது. சங்கீத கட்சேரிகள், 'பலே, சபாஸ், பேஸ்' எல்லாம் படமெடுத்து ஆடுகின்றது. 'ஆகா' அழிந்துவிடும் போலிருக்கிறது. சினிமாக்கள் தமிழ் சமூகத்தினுள் குத்திச் செலுத்திக் கொண்டிருப்பவை, 'சூப்பர், மாம்ஸ், மச்சான்ஸ்'. இபோது வேகமாக இறக்குமதி ஆகிக்கொண்டு இருப்பது, 'கூல்'. புதுசாக காப்பி அடிப்பவன் மேதாவி என்பது விதி.

நன்றி நாஞ்சில் நாடன் அவர்களே!!

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Monday, February 2, 2009

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம்…..

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக முத்துக்குமார் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30. தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் ஈழத் தமிழர்கள் தொடர்பாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி உரையாடிக் கொள்வாராம். கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 நிமிடமளவில் வந்த அவர் கையில் மண்ணெய் கலனை கொண்டு வந்து இருந்தார்.

ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும் அவர்களை காப்பாற்றக்கோரியும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கண்டித்து முழக்கமிட்டபடி மண்ணெயை தன் மீது ஊற்றினார். பிறகு தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார். திடீரென ஒரு வாலிபர் தீப்பிடித்த உடலுடன் ஓடுவதை கண்டதும் சாஸ்திரி பவன் வளாகத்தில் நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப்பகுதி முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறையினர் அவர் வைத்திருந்த பொருட்களை சோதனையிட்டனர். அப்போது 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப்பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது. அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவர் வைத்திருந்த துண்டுப்பிரசுரத்தில், "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். காலம் கடந்த நீதி, அநீதிக்கு சமமானது'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது: எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக்கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது. அண்ணன் பிரபாகரனுக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். திருமாவளவனுக்கும் தகவல் கொடுங்கள். பிரபாகரன் கில்லாடி. எப்படியாவது நான் எரிந்து கொண்ட தகவலை தெரிந்து கொள்வார் என முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.

உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.
இவ்வாறு அந்த துண்டுப்பிரசுர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.