Friday, March 13, 2009

கல்விக்கண் திறக்க மாற்றம் தேவை!




கல்வி மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது... கல்வியின் முக்கியத்துவத்தை சங்க காலம் தொட்டே வழியுருத்திக் கொண்டு வந்துள்ளனர் நமது முன்னோர். "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்றாள் 'கொன்றை வேந்தனில்' ஔவை, "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்றார் வள்ளுவர்.

இவ்வாறாக கல்வியின் நன்மை அறிந்து, 'தான் கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பினும், தம் குழந்தைகள் அவ்வாறு இல்லாமல் நன்றாக பயின்று நல்ல நிலைமைகளுக்கு வர வேண்டும்' என்று எண்ணிய, உயர்ந்த உள்ளங்கள் நம் முன்னோர்கள் தொடங்கி, நமது பெற்றோர் உள்பட முன்வந்ததால், தற்போது கல்வி அறிவு அற்ற மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. ஒருபுறம் கல்வி பெற முடியாத குழந்தை தொழிலார்களை கண்டு மனம் வேதனைப்பட்டாலும், மறுபுறம், கற்றவர் விழுக்காடு பெருகி வருவதை காணும்போது, கூடிய விரைவில் கல்வி அறிவு இல்லாதோர் இல்லை என்ற நிலை உருவாகும் என்ற நம்பிக்கையை தருகிறது..

தமிழக பள்ளிகளின் நிலைமை:
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை (admission) நடை பெரும் காலம், உறவினர் வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவர்கள் குழந்தையை பள்ளியில் (L.K.G யில்!) சேர்க்க எப்படி அல்லல் படுகிறார்கள் என்பதை சொன்னபோது ஆடிப் போய் விட்டேன். சென்னையில் நிலவரம், குறைந்தது 10 ஆயிரம் தொடங்கி 25 ஆயிரம். இங்கு குறிப்பிட்டது நடுத்தர மக்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் நிலவரம் மட்டுமே!


அரசு பள்ளிகளில் சேர்த்தால் தரமான கல்வி கிடைப்பது இல்லை என்பது இந்த மாதரி உள்ள பெற்றோர்களின் புலம்பல். இது உண்மையாகவே உள்ளது. அரசு ஆரம்பப் பள்ளிகள் நாடு நிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் வரை, அரசு கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ள தர இடைவெளி மிகவும் அதிகமாக காணப்படுவதை இயல்பாக உணரலாம். ஏன்?!

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் தொகை அதிகமாக இருக்கிறது, அதனால் அதிகம் படித்த ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்து வேலைக்கு அமர்த்தலாம். உண்மைதான், ஆனால் சொத்து வரியாக ஒவ்வொரு நகராட்சியிலும் வசூலிக்கப்படும் 2% கல்வி வரி (education cess) என்ன செய்து கொண்டு இருக்கிறது?? உதாரணமாக தூத்துக்குடி நகராட்சியில் வசூலிக்கப்பட்ட கல்வி வரி 3 கோடி அனால் ஆரம்பப் பள்ளிகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை வெறும் 5 லட்சம் மட்டுமே! இதுபோல நம் நாடு முழுதும் கல்விக்கான பணம் தேங்கிக்கிடக்கிறது. இது இவ்வாறு இருக்க, தமிழகத்தில் பல நகரங்களில் அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன... இந்தியா முழுவது எடுத்துக்கொண்டால், 6 - 14 அகவை உள்ள குழந்தைகளில் பாதிக்கும் குறைவான எண்ணிகையினரே பள்ளிக்கு செல்கின்றனர் என்கிறது 'CRY' என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம்.

கல்வி தரத்தை உயர்த்த என்ன செய்யலாம்:

இதே போல அரசு, ஆசிரியர்கள் தேர்வில் - திறமைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அரசு பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் தெரியும். நான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் எனக்கு பாடம் எடுத்த 20 ஆசிரியர்களில் 10 பேர் உதவாக்கரைகள், (இப்போதாவது அந்த நிலைமை சற்று மாறி இருக்கும் என்று நம்புகின்றேன்!) இது கசப்பான உண்மை, சிறந்த ஆசிரியர்களும் ஒன்று இரண்டு பேர் இருந்தனர்.. அரசு ஆசிரியர்களை நியமிக்கும் பொழுது சாதி அடிப்படிலான இட ஒதுக்கீட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை ஆசிரியர்களின் திறமைக்கும் தர வேண்டும் என்பது என் கருத்து.

மேலும், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு அரசு 'கல்வி வரி' மூலம் சேர்த்த பெரும் தொகை கொண்டு நல்ல பயிற்சிகளுக்கு ஏற்ப்பாடு செய்யலாம். தனியார் பள்ளிகள் பெரும் நகரங்களிலேயே முகாமிட்டு வளம் கொளிக்கின்றனர். அவர்கள் கிராமப் புறங்களை கண்டு கொள்வதே இல்லை, அதனால் கிராமங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் நகராங்களிலும், பெரு நகராங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கும் திறன் வளர்க்கும் பயிற்சி வகுப்புகள், உளவியல் பயிற்சிகள் கொடுப்பது மூலமும் நாடு முழுவதும் ஒரே சீரான நல்ல தரமுள்ள கல்வியை தர முடியும் அல்லவா??

குழந்தைகள் மனதை ஆக்கிரமிப்பதா??

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பே, பெற்றோர்கள் இப்போதெல்லாம் ஆரம்ப பாடங்களை சொல்லித்தருகிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால், நான் பார்த்த வரையில் "கை வீசம்மா கை வீசு" காணமல் போயிருந்தது, அந்த இடத்தை "Ringa Ringa roses" ஆக்கிரமித்து கொண்டுவிட்டது... நான் ஆங்கில பாடல்களுக்கோ, கவிதைகளுக்கோ நான் எதிரி அல்ல. ஆனால், தமிழ் புறம் தள்ளப்படுவதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக என் உறவினரின் பிள்ளைகளுக்கு "ABCD" கற்றுத்தர பல மாதரியான புத்தகங்களை வைத்துள்ளனர் ஆனால் அந்த பிள்ளைகளுக்கு "அ ஆ இ ஈ " என்றால் என்ன என்றே தெரியாது!!

இது அவர்கள் வீட்டில் மட்டுமல்ல மாகணம் பொருந்தியவர்களே.. இந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன், குழந்தைகளுக்கான புத்தகங்கள் நிறையா விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. மகிழ்ச்சியுடன் உறவினர் குழந்தைகளுக்கு சில புத்தகங்கள் வாங்கலாமே என்று சென்றேன். அனைத்து பெற்றோர்களும் அங்கு தள்ளு முள்ளு நடத்தி பொறுக்கிக் (சேகரித்து என்று வைத்துக் கொள்ளுங்கள்!) கொண்டிருந்தது, அனைத்தும் ஆங்கில புத்தகங்கள். இருந்த ஒன்றிரண்டு தமிழ் புத்தகங்களும், ஆங்கிலம் பயிற்றுவிக்கும் புத்தகங்களை போல ஆர்வம் ஊட்டும் வகையில் ('interactive way') இல்லை! ஆங்கில புத்தகங்கள் எழுத்துக்களை, வார்த்தைகளை விளக்கும் விதத்திலும் படங்களுடனும், பளிச்சென்றும் இருந்தன, ஆனால் தமிழ் கற்கவோ, கருப்பு வெள்ளை மையில் அச்சடித்த நான்கு கோடு புத்தகங்களே இருந்தன...

அதே போல குழந்தைகள் கற்க நீதி கதைகள் உள்ள புத்தகம் வாங்கலாம் என்றாலும் தமிழில் ஒரு புத்தகம் கூட இல்லை. மூன்று, நான்கு கடைகளில் நடத்துனர்களை விசாரிதேன், பதில் 'NO'! இதற்க்கு பெற்றோர் சொல்லும் சமாதானம் "ஆங்கிலம் தான் அயல் மொழி - கற்றுக்கொள்ள சிரமம் தமிழ் வீட்டில் பேசுகிற மொழி தானே சுலபமாக வந்துவிடும்" அவர்கள் தமிழின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி...
ஆனால் என்னுடைய கேள்வி "கணிதம், அறிவியல், முதலியன எளிதாக கற்றுக்கொள்ளும் குழந்தைகள் அவற்றை போல் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ள மாட்டார்களா?? தமிழை பதவி இறக்கி விட்டு குழந்தைகள் மனதில் ஆங்கிலத்தை அரசாள விடுவதில் என்ன அற்ப மகிழ்ச்சி?!"

அரசியல் வாதிகளின் பொறியியல் அட்டூழியங்கள்:

மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லும் நிலையில், கல்விக் கூடங்களும் அதிகரிக்கவே செய்கிறது. ஆனால், இன்று கல்வி, ஆரம்பப் பள்ளி முதல் பொறியியல், மருத்துவம் என்று சகல மட்டங்களிலும் வியாபாரம் ஆக்கப்பட்டதுதான் வேதனையான விசயம். குறிப்பாக, 'பொறியியல் துறை' அரசியல் வாதிகளின் முக்கிய இலக்காக மாறிப் போய் விட்டது... தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லுரிகளுக்கு அனுமதி கொடுப்பது மட்டுமின்றி, தாங்களே ஆரம்பித்து பினாமி (மனைவி/கொழுந்தியா என) பெயரில் நடத்துகின்றனர். தங்களின் கட்சி ஆட்சியில் இருக்கும் போது ஆனுமதி அளித்து கல்லூரிகளை துவக்கி, வேறு கட்சி ஆட்சியில் இருக்கும் போதும் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழியாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.

அதிலும் முதலில் ஒரு ஆண்டு மாணவர்கள் மட்டும் படிக்கும் வகையில் கட்டிடங்களை கட்டுவது, தரமான பொறியியல் படிப்புக்கு தேவையான
சாதனங்களில் பாதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்பேற்றுவது, பின் படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ரத்தத்தை பிழிந்து தங்கள் இஷ்டத்திற்கு ஆயிரத்தி எட்டு வகையான கட்டணங்களை வசூலித்து தேவைப்படும் வசதிகளை செய்து கொண்டும், தாங்கள் மேலும் சம்பாதிக்க, விளம்பரம் செய்துகொள்ள வழி செய்து கொள்வது... இது தானே நடக்கிறது.. இப்படி அந்த கல்வியின் தரத்தை பற்றி சிறிதும் கவலை இன்றி சகட்டு மேனிக்கு கல்லூரிகளை ஆரம்பித்ததால் இப்போது கட்டணத்தை ஒழுங்கு படுத்தவும் ஆளில்லை. தரத்தை நிர்மாணிக்கவும் வழி இல்லை. இப்போது இது யாரை பாதிக்கும்? கல்லூரி நடத்துவோரையா? இல்லை. மாணவர்களைத்தான். அவர்கள், ஏதோ பட்டம் பெற்றோம் என்ற நிலையில் தான் இருப்பார்கள். சர்வதேச மாணவர்களுடன் போட்டியிடும் நிலையில் இருக்க மாட்டர்கள். இதை பற்றியெல்லாம் கவலைப்பட நம் அரசியல் (வ)வியாதிகளுக்கு எங்கு நேரம் இருக்கிறது??

உடனே, நான் பொறியியல் கல்விகளுக்கு எதிரானவன் என்று சொல்ல வேண்டாம், நானும் ஒரு பொறியாளர்தான். மேலை நாடுகளில் உயர் கல்வி என்று வந்தால் பல துறைகளில் மாணவர்கள் தங்கள் முனைப்பை காட்டுகின்றனர். அனால் இங்கு ப்ளஸ் டூ படித்து முடிக்கும் ஒவ்வொரு மாணவனையும் வசீகரிப்பது பொறியியல் கல்லூரிகளின் விளம்பரம்தான். "விளம்பரம் மட்டும் செய்தால் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தை கூட சுத்த இளநீர் என்று ஒரு கை பார்த்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்." சரி வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் என்று கேட்கலாம்?!

மாற்று வழி இருக்கிறது, எதிர்காலத்தில் இயற்க்கை சார்ந்த துறைகளில் மாணவர்களை தயார் செய்வதுதான் ஒட்டு மொத்த உலகத்துக்கும், நாட்டுக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், இதை ஆங்கிலத்தில் "green collar jobs"
என்கிறார்கள். இதன் மூலம், நாம் செய்யும் வேலை, நமக்கு வருமானத்தை ஈட்டும் வகையிலும், அதே சமயம், நாம் வாழும் இந்த பூமிக்கு புத்துயிர் அழிக்கும் வகையிலும் இருக்கும். நமது கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கும், நகரப் புறங்களில் கணிப்பொறி மற்றும் இயந்திரத் தனமான வாழ்க்கையை அனுபத்த மாணவர்களுக்கும், இது ஒரு அருமையான மற்று வழியாகத்தானே இருக்கும்?!

அதாவது, தொழில் வளர்ச்சியை, அதன் முதலீடுகளின் பெரும் பங்கை, இயற்க்கை சார்ந்த ஆதாரங்களை பெருக்க பயன்படுத்துவது. உதாரணமாக, சூரியவொளி கலங்களை தயாரிப்பது, காற்றாலைகளுக்கு தேவையான தொழில் நுட்பங்க்ளை பெருக்குவது, இதன் மூலம், நன்கு படித்த இளைஞர்களுக்கு இந்த தொழில் நுட்பங்கள் தாயரிக்கும் வேலைகளும், குறைந்த கல்வி பெற்றிருப்பவர்களை கொண்டு இதற்க்கு தேவையான மனித சக்தி பெறுவதும் இதன் சாராம்சமகும். இதன் மூலம் பல கோடி கணக்கில் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் வேலை வாய்ப்பை பெருக்கலாம். வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கலாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள், நமது ஆட்சியாளர்கள் இது போன்ற சிந்தனையுடன் எப்போதாவது செயல் பட்டு இருக்கிறார்களா?? மாறாக, கல்வியை முற்றிலும் வியாபார மயமாக்கி, மக்களை ஏமாற்றி அவர்கள் சேமித்த பணத்தை பறிக்கும் கள்வர்கள் வேலை அல்லவா பார்க்கிறார்கள்?

மாற்றம் தேவை!! ஆம் எல்லா இடங்களிலும், எல்லாருடைய மனங்களிலும் மாற்றம் தேவை..

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

11 comments:

நாகை சிவா said...

நல்ல பதிவு !

குழந்தைகளுக்கான நீதி கதைகள் புத்தகம் நிறைய உள்ளது. சிடிகளும் கிடைக்கிறது. கொஞ்சம் அலைந்தால் வாங்கலாம், நான் புத்தக கண்காட்சியில் பார்க்கவில்லை. ஆனால் சென்னையில் என் மாப்பிள்ளைக்கு வாங்கினேன்.

Rajeswari said...

//உதாரணமாக தூத்துக்குடி நகராட்சியில் வசூலிக்கப்பட்ட கல்வி வரி 3 கோடி அனால் ஆரம்பப் பள்ளிகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை வெறும் 5 லட்சம் மட்டுமே!//

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.இதே மாதிரியாக நிறைய இடத்தில நடந்து கொண்டே இருக்கிறது.

Rajeswari said...

//அதனால் கிராமங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் நகராங்களிலும், பெரு நகராங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கும் திறன் வளர்க்கும் பயிற்சி வகுப்புகள், உளவியல் பயிற்சிகள் கொடுப்பது மூலமும் நாடு முழுவதும் ஒரே சீரான நல்ல தரமுள்ள கல்வியை தர முடியும் அல்லவா??
//
தமிழர் நேசன் அவர்களே,நீங்கள் கூறிய திறன் வளர்க்கும் முகாமும்,உளவியல் பயிற்சி முகாம்களும்,தனியார் ஆசியர்களுக்கும் மட்டுமன்றி ,அரசு ஆசிரியர்களுக்கும், வருடத்திருக்கு இரு முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது...

Rajeswari said...

//நான் பார்த்த வரையில் "கை வீசம்மா கை வீசு" காணமல் போயிருந்தது, அந்த இடத்தை "Ringa Ringa roses" ஆக்கிரமித்து கொண்டுவிட்டது...//

உண்மைதான்,ஆனால் கல்வியின் பதிவில் எதற்கு ,மொழியை வலியுறுத்துகிறீர்கள் ? புரிய வில்லை! கல்வியின் மேன்மையை வலியுர்த்தும் போது, மொழியை பற்றிய தங்களது கனத்த மனநிலை ,சிறிது இடரலை விளைவிக்கிறது.

Rajeswari said...

//எதிர்காலத்தில் இயற்க்கை சார்ந்த துறைகளில் மாணவர்களை தயார் செய்வதுதான் ஒட்டு மொத்த உலகத்துக்கும், நாட்டுக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், இதை ஆங்கிலத்தில் "green collar jobs"
என்கிறார்கள். இதன் மூலம், நாம் செய்யும் வேலை, நமக்கு வருமானத்தை ஈட்டும் வகையிலும், அதே சமயம், நாம் வாழும் இந்த பூமிக்கு புத்துயிர் அழிக்கும் வகையிலும் இருக்கும்.//

செய்யும் வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைக்கபெறுமானால்,கண்டிப்பாக நீங்கள் கூறியது நிறைவேறும்

Rajeswari said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

தமிழர் நேசன் said...

வாங்க நாகை சிவா! நல்லா இருக்கீங்களா?? ரொம்ப நாளா பதிவும் காணோம், ஆளையும் காணோம்.
//குழந்தைகளுக்கான நீதி கதைகள் புத்தகம் நிறைய உள்ளது. சிடிகளும் கிடைக்கிறது. கொஞ்சம் அலைந்தால் வாங்கலாம், நான் புத்தக கண்காட்சியில் பார்க்கவில்லை.//

உண்மை.. தமிழ் நாட்டிலேயே அலைந்தால் தான் வாங்க முடிகிறது அது தான் என் வருத்தமும்...

கருத்துக்கு நன்றி..

Anonymous said...

“Saying is very easy but doing is very hard” Everybody started to feel about society and criticized others means nothing happened or no changes will not come. Why tamilarnesan..?? What tamilarnesan looking for among the society or looking publicity.. .???? And we might try to do something correct first our home and street….

I think while our family and street become healthy means chances might comes to society also. We also aware bout what happened in society …????? we need not good article or poems about society but We looking solution for that all problem and very nice to read all article and your pages all …if you can possible to give solution for any one .we will happy and always comes behind tamilarnesan …we are looking leader not follower (Criticism) …

If any word hurt means I am really apologetic…..

தமிழர் நேசன் said...

Rajeswari said...
//தமிழர் நேசன் அவர்களே,நீங்கள் கூறிய திறன் வளர்க்கும் முகாமும்,உளவியல் பயிற்சி முகாம்களும்,தனியார் ஆசியர்களுக்கும் மட்டுமன்றி ,அரசு ஆசிரியர்களுக்கும், வருடத்திருக்கு இரு முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது...//
அப்படியா? நல்ல விஷயம், எனக்கு இதுவரை தெரியாது. ஆனால் அதற்கு நாம் எதி பார்க்கும் பலன் இருக்கவேண்டும் என்பதே என் ஆவல். அந்த முகாம்களையும் பேருக்காக நடத்தாமல் இருந்தால் சரி!
//உண்மைதான்,ஆனால் கல்வியின் பதிவில் எதற்கு ,மொழியை வலியுறுத்துகிறீர்கள் ? புரிய வில்லை! கல்வியின் மேன்மையை வலியுர்த்தும் போது, மொழியை பற்றிய தங்களது கனத்த மனநிலை ,சிறிது இடரலை விளைவிக்கிறது.//

மொழி இன்றி கல்வியா? கல்வியில் மொழி என்பது மதிபெண்ணுக்காக என்று வந்ததால் தான் வசதி உள்ளவர்கள், பிரன்ச், இந்தி, என தங்களுக்கு எது சுலபமாக வருகிறதோ அதை தேர்ந்து எடுத்துக் கொள்கின்றனர்! ஏன் 247 எழுத்துக்களை கற்றுக்கொடுக்க சிரமாக இருக்கிறது அதுதானே? ஆங்கிலம் என்றால் 26 ரோடு முடிந்தது விடும், நியாயம் தான். நமது வீடு கொஞ்சம் வசதி குறைந்தது தான்(ஆனால் பெருமை வாய்ந்தது). அதற்காக நம் குழந்தை ஆண்டி ('aunty') வீட்டில் தான் இருப்பேன் என்று சொன்னால் விட்டு விடுவீர்களா? தாய் மொழியின் முக்கியத்துவத்தை கல்வியின் மூலம் வழியுறுத்த கூடாதா? சிறு பிஞ்சுகள் மனதில் தாய் மொழியின் இனிமையையும் சிறப்பையும் பதிய வைப்பது தவறா?! அவர்கள் குழந்தையாய் இருக்கும் போது இதை கற்றுக் கொடுக்காமல் அவர்கள் வளர்ந்து 'டாமிலா'? என்று கேட்கும்போது புரிய வைப்பீர்களா? முழுவதும் ஆங்கிலத்திலேயே (அதிக மொழி கலப்பு) பேச பழகிய குழந்தைகள் எப்படி தன் தாத்தா பாட்டி யுடன் உறவாடும்? அவர்களுடன் உறவாடினால் என்ன இல்லாவிட்டால் என்ன? நமக்கு பிறர் முன்நிலையில் நம் குழந்தை ஆங்கிலத்தில் வறுத்தால் தான் நமக்கு பெருமை இல்லயா? பிரன்ச்சு, செர்மனி, இத்தாலி, சீன ,ஜப்பானிய இன்னும் பல பல நாட்டுக் குழந்தைகள் அந்த அந்த மொழியில் தான் தங்கள் கல்வியை பெறுகின்றனர், இவையெல்லாம் சாதாரண நாடுகள் இல்லையே??! ஏன் மொழி ஒரு தடை இல்லை மாறாக அது ஒரு சக்தி. நமக்கு ஆங்கில மோகம், கலாசார மோகம், வாசனை மோகம், இன்னும் பல மோகங்கள், அதனால் நாம் பிறரை போல் நம்மை பார்க்கிறோம், நமது சுய சிந்தனைகளை தொலைத்து, சினிமா முதல் தலை முடி வரை மற்றவரை(வெளிநாட்டவரை) காப்பி அடிப்பது 'புதுமை' என்று நினைக்கிறோம்.
என்னை பொறுத்த வரை பெற்ற தாயை புறக்கணித்து முதியோர் விடுதியில் சேர்பதும் தாய் தமிழை புறக்கணித்து ஆங்கிலத்தை வரவேற்ப்பதும் ஒன்றுதான்.

இந்த தெளிவான கருத்தில் உங்களுக்கு என்ன இடறல் என்று புரியவில்லையே??

தமிழர் நேசன் said...

Dear ArulRaj!
//“Saying is very easy but doing is very hard” Everybody started to feel about society and criticized others means nothing happened or no changes will not come. And we might try to do something correct first our home and street…. I think while our family and street become healthy means chances might comes to society also. We also aware bout what happened in society …????//
Correct, True. I'll appreciate if you start doing so...

//What tamilarnesan looking for among the society or looking publicity.. .???? //
what makes you to think so? If I want publicity, I might have done something else putting my name and identity big so that i get popular. Now no one knows my identity! Because I don't want myself but my thoughts get popular, should wake up people like you!!

//we need not good article or poems about society//
You can't say that society doesn't need good articles, etc... i don't get u!

//if you can possible to give solution for any one .//
if u had reed my articles carefully u could find the solutions too!! if u want me to list few of them?! here it is...
1)Identify bad leaders who are pretending to be good.
2)Find out right person and vote for him.
3)Don't loose our language and its huge heritage because of being mesmerized by western things.
4)Oppose atrocities where ever it happens.
5)Take care of your parents at their old age..
6) and so on and on and on....

Don't you see these are some useful things like a candle light for people who are literally in darkness??! How do you say I did not give any solutions??! Please read, even in the above article i came up with a suggestion of "green collar jobs" that no one started speaking in our country!!

//we are looking leader not follower (Criticism) …//
I'm doing what ever i can.I spend my valuable time in witting about issues that people should aware of If 100 persons realize what is going on. I feel its a success. I'm leader for 100. Do you think some one should come like Jesus christ to rescue every one suddenly from all evil in one night???!

//If any word hurt means I am really apologetic…//
You need not apologize. I want you to catch the real meaning of my articles...

//very nice to read all article and your pages all …//
Thank you.

Anonymous said...

My Dear… tamilarnesan?


//What tamilarnesan looking among the society or looking publicity.. .???? //

What makes you to think so? If I want publicity, I might have done something else putting my name and identity big so that i get popular.

I am not asked about you and your publicity….what tamilarnesan???..&..Why

I told “Saying Is Easy” Everybody can give solutions without whether it will give correct solutions or not…? I asked who is going to take action all issues... And How?

What is the part of tamilarnesan?

Now no one knows my identity! Because I don't want myself but my thoughts get popular, should wake up people like you!!

Like me? “ beat around the bush”

And how differ Me and you.. Can you say what type of people we are?

//we need not good article or poems about society//
You can't say that society doesn't need good articles, etc... i don't get u!

I never “society doesn't need good articles, etc”....

//if you can possible to give solution for any one .//
if u had reed my articles carefully u could find the solutions too!!

Tamilarnesan is a solutions tool..? Can you brief? What are the changes comes by tamilarnesan..?


//we are looking leader not follower (Criticism) …//
I'm doing what ever i can.I spend my valuable time in witting about issues that people should aware of If 100 persons realize what is going on. I feel its a success. I'm leader for 100. Do you think some one should come like Jesus christ to rescue every one suddenly from all evil in one night???!


What leader for 100……can you list what you did for society as leader of 100 …what changes happened and what achieved as leader for 100…I am not asked about Jesus Christ and all. You not get me what I asked about tamilarnesan..?

My previous command for “tamilarnesan” not for you ……..you only wrongly understood whether I am telling about you..my command for “tamilarnesan” and What and Why …your answer was …except my command ……I asked by the way of clarify my doubts.


//If any word hurt means I am really apologetic…//
You need not apologize. I want you to catch the real meaning of my articles...

Ok ..I never going to ask apology for this command..Happy .Ya..?


Thank you for reply ….
Arul

Post a Comment