Wednesday, March 18, 2009

இன நலனும் பாதை மாறிய கூட்டணி அரசியலும் - காரணம் யார்?!



இன்றைய அரசியல் சூழலில் ஏன் தலைவர்கள் தங்கள் கொள்கைகளையும் இன நலனையும் மீறி கூட்டணி அமைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். நேற்று வரை தமிழர்கள் இன அழிப்பு என்று கதறிய தலைவர்கள் அனைவரும் இன்று கூட்டணி குதிரையில் எந்த குதிரையில் ஏறலாம், எது வெற்றிபெறும், என்று அந்தந்த குதிரைகளின் ஒட்டு மொத்த கொள்கை பற்றி கவலையின்றி - எதோ ஒரு கூட்டணியில் தொற்றிக்கொள்ள வேண்டும் என்று எத்தனிப்பது ஏன்? இது இன்று நம் மனதிலும் எழும் அதிர்ச்சியான கேள்வி?!.

ஆனால் எதார்த்தத்தை நாம் உணர வேண்டும். இன்றைய அரசியல் சூழலில், ஒரு தலைவன் எந்த கட்சியானாலும் சரி, எந்த உண்ணதமான கொள்கை கொண்டிருந்தாலும் சரி அரசியல் வெற்றி பெற முடியாது! நல்லது செய்யவேண்டும் என்று எண்ணி பயனில்லை! எனென்றால், ஒரு அரசியல் கட்சி தலைவர், முதலில் தன்னுடன் இருக்கும் மக்கள் செல்வாக்குடைய புள்ளிகளை திருப்ப்திபடுதியே ஆகவேண்டும். குறிப்பாக பெரும் கட்சிகளின் ஆதரவுடன் காலம் தள்ளும் சிறு கட்சிகள் ம.தி.மு.க, பா.ம.க, இடதுசாரி, வலதுசாரி, விடுதலை சிறுத்தை, என்பன...

யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது முதல், என்ன பேசலாம் என்பது வரை ஆலோசனைகள் கேட்டே தீர வேண்டும். இந்த பெரும் புள்ளிகளுக்கு நீங்கள் சொல்வதுபோல் மாற்றமின்றி ஒரு ஒற்றுமை இருக்கிறது அது பணம் கொழிப்பது, பதவி சுகம் காண்பது, இன்னும் பிற லட்சியங்கள்...

தலைவர்கள் தேர்தல் இல்லாத காலங்களில் சற்று சுதந்திரமாக செயல் பட முடியும், பேசமுடியும், இழவுக்கு போய் அழ முடியும். ஆனால், தேர்தல் என்று வந்தால் ஓயாமல் தங்கள் உடனிருப்பவர்களை திருப்தி படுத்தும் வேளையிலேயே ஈடுபட முடியும்!
இந்த செல்வாக்குள்ள புள்ளிகளுக்கு கட்சி கொள்கை எல்லாம் சும்மா தோளில் போடும் துண்டு போல சுலபமாக மாற்றிக்கொள்ளலாம், "தலைவர் என்னை அவமதித்தார் அதனால் நான் கட்சி தாவுகிறேன்". அவ்வளவுதான். சமீபத்திய உதாரணம் 'கண்ணப்பன்'.


நான் தலைவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். அவர்களுக்கும் கட்சிதான் முக்கியம். அரசியல் வெற்றி இன்றி பொருளாதார நலன்(!) இன்றி கட்சியை நடத்த முடியாது. கட்சியை காப்பாற்ற ஒரு சில இடங்களையாவது தக்கவைக்க வேண்டும், அதற்க்கு இந்த புள்ளிகள் வேண்டும், பெரும் கட்சி தலைவர்கள் (ஐயா / அம்மா) ஆசி வேண்டும். ஏனென்றால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையில் மத அடிப்படையில் நாம் (தமிழர்கள்) பிரித்து ஆளப்பட்டு வருபவர்கள். நம் மக்களுக்கு மரபு வழியாக இரத்தத்தில் ஊரியது - சாதி மத உணர்வு. இன்று அதை வைத்தே தேர்தல் கணக்குகள் போடப்படுகின்றன. பெருந்தலைகள் - குறிவைப்பது, தக்கவைப்பது, திருப்ப்திபடுதுவது எல்லாம், சாதி ஆதரவுள்ள தலைவர்களை தான்.

நாம் பொதுவாக நினைத்துக்கொள்வது திருமா, ராமதாஸ் போல சிலர்தான் சாதி அடிப்படையில் இயங்கி வெற்றிபெறும் கட்சிகள் என்று, ஆனால் அது உண்மையல்ல. எந்த கட்சியாக இருப்பினும், போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், அந்தந்த தொகுதியில் எந்த சாதியினர் அதிகமாக வசிக்கின்றனரோ, அவர்கள் ஆதரவை பெறுகின்ற ஆள் யார் என்று பார்த்து சீட்டு கொடுப்பது தான் விதி("பார்முலா"). (இந்த விதியில் இருந்து சற்று மாறுவது பொது உடமை கட்சி. ஆனால் அதிலும் ஒரு வேடிக்கையான உண்மை ஒன்று, எனக்கு தெரிந்து பொது வாழ்வில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு சுயநலமின்றியும் பொருள்சேர்க்கும் ஆசையின்றியும் இருக்கும் 'நல்ல கண்ணு ' அவர்கள் கடந்த முறை என் கொங்கு நாட்டில் போட்டி இட்டார், ஆனால் அவருக்கு - வெற்றிபெற்றவர் பெற்ற ஓட்டு எண்ணிக்கையில் பாதி கூட விழவில்லை. ஏன்??!)


சற்று முந்தைய காலத்தில் நல்ல தலைவர்கள் நம்மை ஆளும் வாய்ப்பு இருந்தது, உதாரணமாக பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் போன்றோர். அப்போது சுதந்திரம் பெற்றுக்கொடுத்த கட்சி காங்கிரஸ் என்று காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு உண்மையான தமிழுணர்வாளர், மொழி சுதந்திரத்திற்காக போராடி வெற்றி பெற்றார், ஆட்சியமைத்தார் அறிஞர் அண்ணா. பின்பு சக்தி வாய்ந்த ஊடகமாக விஸ்வரூபம் எடுத்த திரைப்படத்துறை மூலமாக நல்ல கருத்துக்களை பதித்து பெரும்பாலான ஏழைகளின் மனதில் இடம் பிடித்து ஆட்சியை பிடித்தார் புரட்சித்தலைவர். அனால் இவர்கள் எல்லாம் நல்லவர்களாக, மக்களுக்கு தொண்டு செய்யும் மனம் படைத்தவர்களாக இருந்து விட்டனர். நம் புண்ணியம்.

ஆனால் இன்றும், முன்பு சொன்ன வழிகளை கடைப்பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர திட்டம் போடும் தலைவர்கள் தான் நம்மிடம் உள்ளனர். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி அண்ணனாக இருந்தாலும் சரி. நமது மக்களும், கொடுப்பதை வாங்கிக்கொண்டு பின் விளைவுகளை பற்றி கவலையின்றி குத்துகின்றனர்... இந்த ஓட்டு கணக்கு அரசியல் வாதிகளுக்கு கைவந்த கலை. இதுவரை அம்மாவும் ஐயாவும் மாறி மாறி தங்கள் கொல்லைபுரங்களை கரன்சியால் நிரப்பி விட்டனர். சரி விஜய காந்த் புதுசா எதோ சொல்கிறாரே என்று சற்று திரும்பினால் பொதுகூட்டம் போட்டு தன் பலத்தை காட்டி, இப்போது நல்ல விலை எதிர்பார்த்து காத்திருக்கிறார் போலும்?!

இந்த சூழ்நிலையில் நாம் செய்ய முடிந்தது, அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் கட்சி கரிசனம் இன்றி, சாதி சார்பு இன்றி, குறைந்த கெட்டவர்களையோ, அதிக நல்லவர்களையோ, நல்ல கொள்ளயர்களையோ, தேர்ந்தெடுப்பதுதான். குறைந்தது அரசியல் வாதிகளின் சாதி கணக்கையாவது பொய்க்க வைப்போம். கொஞ்சமாக அரசியல் சாக்கடையில் கெட்டுப்போனவர்களை, மேலும் கெடாமல் தடுப்போம். சாதியை தாண்டி, கொள்கை பிடிப்புடன் இருக்க முயலும், மக்களுக்கு பொதுவாக நல்லது செய்ய நினைக்கும் நபர்களை, மக்கள் உணர்வை புரிந்து அவர்களை நல்ல முறையில் வழி நடத்தும் (குறைந்தது முயற்சிக்கும்) நபர்களை தேர்ந்தெடுத்து, ஒரு மாபெரும் பின்னடைவில் இருந்து மீளும் முதல் அடியை எடுத்து வைப்போம்.

வரும்காலங்களில் நமது பிள்ளைகளுக்கு, நல்ல குணங்களை வளர்த்து, தீயவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் திறனை கற்றுக்கொடுத்து, வருங்கால தமிழ்களை மொழி பற்றுடயவர்களாகவும், நாட்டுப்பற்று உடையவர்களாகவும் வளர்த்து நல்ல எதிகாலத்தை அமைக்க வேண்டும். குறிப்பாக இன்று எல்லா வீட்டிலும் சுயநலம் கற்றுக்கொடுப்பவர்களாகவே பெற்றோர் இருகிறார்கள். அந்த சுய நல வட்டத்தை எப்போது உடைத்து எறிகிறோமோ அப்போதுதான் நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.

இந்த கட்டுரையை படித்துவிட்டு தங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

8 comments:

நாகை சிவா said...

நல்ல அலசல் :)

மதிபாலா said...

வரும்காலங்களில் நமது பிள்ளைகளுக்கு, நல்ல குணங்களை வளர்த்து, தீயவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் திறனை கற்றுக்கொடுத்து, வருங்கால தமிழ்களை மொழி பற்றுடயவர்களாகவும், நாட்டுப்பற்று உடையவர்களாகவும் வளர்த்து நல்ல எதிகாலத்தை அமைக்க வேண்டும். குறிப்பாக இன்று எல்லா வீட்டிலும் சுயநலம் கற்றுக்கொடுப்பவர்களாகவே பெற்றோர் இருகிறார்கள். அந்த சுய நல வட்டத்தை எப்போது உடைத்து எறிகிறோமோ அப்போதுதான் நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.///

சொல்லப்போனால் இதுதான் நாம் செய்யக்கூடியதாகத் தோணுகிறது.

அருமையான தேவையுள்ள கட்டுரை . சில இடங்களில் முரண்படுகிறேன்......நேரமிருக்கும் போது என் முரண்பாடுகளைச் சொல்கிறேன்.

தமிழர் நேசன் said...

வாங்க நாகை சிவா! பின்னூட்டம் தொடங்கி வைத்ததற்கு நன்றி!

//நல்ல அலசல் :)//

எத சொல்றீங்க?@!

தமிழர் நேசன் said...

வாங்க மதுபலா!

//சொல்லப்போனால் இதுதான் நாம் செய்யக்கூடியதாகத் தோணுகிறது.//

ரொம்ப வெக்ஸ் ஆனா எப்படி?! இன்னும் எவ்வளவோ இருக்கு....

//அருமையான தேவையுள்ள கட்டுரை . சில இடங்களில் முரண்படுகிறேன்......நேரமிருக்கும் போது என் முரண்பாடுகளைச் சொல்கிறேன்.//

உங்கள் மறு கருத்தை எதிர்நோக்கி உள்ளேன்!

நன்றி

Anonymous said...

சாலமன் ஐயா மொழியில் சொல்ல போனால் - அருமை அருமை

தமிழர் நேசன் said...

//சாலமன் ஐயா மொழியில் சொல்ல போனால் - அருமை அருமை//

மிக்க நன்றி செந்தில் அவர்களே.

மதிபாலா said...

நாம் பொதுவாக நினைத்துக்கொள்வது திருமா, ராமதாஸ் போல சிலர்தான் சாதி அடிப்படையில் இயங்கி வெற்றிபெறும் கட்சிகள் என்று, ஆனால் அது உண்மையல்ல. எந்த கட்சியாக இருப்பினும், போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், அந்தந்த தொகுதியில் எந்த சாதியினர் அதிகமாக வசிக்கின்றனரோ, அவர்கள் ஆதரவை பெறுகின்ற ஆள் யார் என்று பார்த்து சீட்டு கொடுப்பது தான் விதி("பார்முலா"). ///


இதில் அரசியல் கட்சிகளின் குற்றமென்ன இருக்கிறது? தன் சாதிக்காரன் என்று பார்த்து ஓட்டுப்போடும் வாக்காளன் தானே அதைத் தீர்மானிக்கும் படி கட்சிகளைத் தூண்டுகிறான்.

ஊருக்கு உழைத்த காமராஜை நாடாராகவும் , தேச விடுதலைக்கு உழைத்த தீரன் சின்னமலையை கவுண்டராகவும் - சமூக நீதிக்கான நீதிக்கட்சியை முதலியார் கட்சியாகவும் இன்றைக்கு மாற்றி வைத்திருப்பதில் சமுதாயம் தானே பெரும்பங்கு வகிக்கிறது நண்பரே?



(இந்த விதியில் இருந்து சற்று மாறுவது பொது உடமை கட்சி. ஆனால் அதிலும் ஒரு வேடிக்கையான உண்மை ஒன்று, எனக்கு தெரிந்து பொது வாழ்வில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு சுயநலமின்றியும் பொருள்சேர்க்கும் ஆசையின்றியும் இருக்கும் 'நல்ல கண்ணு ' அவர்கள் கடந்த முறை என் கொங்கு நாட்டில் போட்டி இட்டார், ஆனால் அவருக்கு - வெற்றிபெற்றவர் பெற்ற ஓட்டு எண்ணிக்கையில் பாதி கூட விழவில்லை. ஏன்??!)//

ஆமாம் , இங்கேயும் கூட தவறு வாக்காளர்களிடம் தான் இருக்கிறது.

மன்னிக்கவும் , மிகத் தாமதமான பின்னூட்டத்திற்கு.!

Unknown said...

Yaru aatchikku vandaalum electionla selavu pannatha ethana madanga kollai adikalaamnu thaan nenaikeeraanga....Arasiyal padhavi oru Government job maathiri aayidhuchu... Ithula enga naama nalla thalaivara ethir paakka mudiyum....

Post a Comment