Sunday, May 10, 2009

வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது : கருணாநிதி
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை (சோ)சூனியா காந்தியுடன் சேர்த்து உரையாற்றிய கருணா நதி, உதிர்த்த வார்த்தைகளில் சில வருமாறு..

கருணா : வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது அந்தக்காலம்; வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது என்பது இந்தக்காலம்.
- ஒரு அடிமை தன் எஜமானரை பற்றி பெருமையாக பேசுவதைப் போலத்தான் இருக்கிறது.

கருணா : சொக்கத்தங்கம் சோனியா.
- தங்கத்தை, சொக்கத்தங்கம் என்று அறிய எப்படி சோதனை செய்வார்கள்?

கருணா : தியாகத் திருவிளக்கு என்ற அடைமொழியை சோனியாவுக்குக் கொடுத்துள்ளோம்.
- ஆம் முக்கிய அமைச்சர் பதவிகளை இவர் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் வழங்கும் தியாகிதான்!!

இதையெல்லாம் விடக் கொடுமை சோனியா பேசியதுதான்.

சோனியா : இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவதே காங்கிரஸின் லட்சியம். எங்கள் அரசின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாகத்தான் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறது.

- 20, 30 மைல் தொலைவில் அவர் பேசிக்கொண்டு இருக்கும் தருணத்தில் இரண்டு நாட்காளாக தொடர்து பீரங்கி தாக்குதல், பல்குழல் எறிகணை, முக்கியமாக வான் வழித்தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் அதில் உயிரிழந்திருப்பதாகவும் - புதிய பாதுகாப்பு வலயத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவர் சண்முக ராஜ கூறுகிறார்!!

அன்னை - தங்களால்தான் போர் நிறுத்தப்பட்டது என்று பொய்பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார் அதே வேளை அங்கு கொத்துகுண்டுகள் நம் தமிழர்கள் தலையில் விழுந்து கொண்டிருக்கிறது. இந்த பொய் பிரச்சார நாடகத்தை நம் மக்கள் ஆட்டு மந்தைகளைப் போல நின்று ரசித்துக்கொண்டு இருகிறார்கள். இவர் பேசி முடிக்கும்போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் உயிரிழந்தும், சில ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும் இருப்பார்கள்!

சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நம் நாட்டில் யாராலும் தோற்கடிக்க முடியாது... இதை அவர்கள் நன்கு உணர்திருக்கிறார்கள்...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

9 comments:

Senthilkumar said...

அன்னை வெண்ணை சோனியா சனியனே .....நாங்க ஆப்பு வைக்கிறோம்

தமிழர் நேசன் said...

இலங்கை அமைச்சர் கோட்டபாய திமிராக நேற்று அளித்த பேட்டியை இங்கே கேளுங்கள்.
http://www.bbc.co.uk/tamil/meta/tx/nb/tamil_1545_au_nb.asx

அதை வழி மொழிந்திருக்கிறார்கள் நம் சோனியாவும் கருணா நிதியும்!! இவர்களா தமிழர்களை காக்க போகிறார்கள்??

Anonymous said...

karunanidhi is a cheat-shame to tamil community

தமிழ்மகன் said...

நன்பரே சோ(சூ)னியா தமிழம் வந்த போதுதான் 3200 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படு கொலை செய்யபட்டுள்ளார்கள்.. காட்டிக்கொடுபபன் கருனாநிதி. அரசியல் பிழைப்புக்காக தமிழனைக்காட்டிக்கொடுக்கிரான். ஏன் தமிழா இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறாய்? 6000 இந்திய இராணுவத்தினர் இலங்கயில் போரிடுவது உனக்கு தெரியவில்லையா? கடந்த 5 மாதத்தில் 1000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்..

Suresh Kumar said...

கருணாநிதி என்றுமே தமிழர்களுக்கு உண்மையாக இருந்ததில்லை எல்லாமே ஏமாற்று நாடகம் அண்ணா துவங்கிய கட்சியை தவறான பாதையில் நடத்துகிறார் . கருணாநிதி தமிழினத்திற்கு கிடைத்த சாப கேடு

vall paiyen said...

சரியாக தான் கூறியிருக்கிறார் இந்த சுய நல சூரியன். வடக்கு என்றால் சோனியா மற்றும் குடும்பத்தினர், தெற்கு என்றால் கருணாநிதி மற்றும் மகன்கள்,மகள், மாறன் குடும்பத்தினர் மற்றும் கழக அம்மைச்சர்கள் மட்டுமே என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். அப்படியே வடக்கு எவ்வளவு கொடுத்தது, தெற்கு எவ்வளவு வாங்கியது என்றும் விளக்கமாக கூறினால் உருப்படாத உடன்பிறப்புகள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்

தமிழர் நேசன் said...

//தமிழ்மகன் said...

நன்பரே சோ(சூ)னியா தமிழம் வந்த போதுதான் 3200 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படு கொலை செய்யபட்டுள்ளார்கள்.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தமிழ்மகன்.

தமிழர் நேசன் said...

//vall paiyen said...

சரியாக தான் கூறியிருக்கிறார் இந்த சுய நல சூரியன். வடக்கு என்றால் சோனியா மற்றும் குடும்பத்தினர், தெற்கு என்றால் கருணாநிதி மற்றும் மகன்கள்,மகள், மாறன் குடும்பத்தினர் மற்றும் கழக அம்மைச்சர்கள் மட்டுமே என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். //

சரியான புரிதல்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

தமிழர் நேசன் said...

சுரேஷ் குமார் வருகைக்கு நன்றி... தங்கள் இருகைகளை பார்த்தேன் வாழ்த்துக்கள்..

Post a Comment