Tuesday, May 12, 2009

மென்பொருள் இளைஞர்களும் இந்திய தேர்தல்களும் : பங்களிப்பு என்ன?



இன்று காலை எழுந்ததும் ஒரு போர் வீரனை போல நடந்து சென்று தமிழின துரோகிகளை எதிர்க்க என்னிடம் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு ஜனநாயக ஆயுதத்தை சரியாக பயன்படுத்திவிட்டு வந்த கையோடு இந்த பதிவை இடுகிறேன்!

நான் தென் சென்னையில் அடையாறு அவையா தொடக்கப்பள்ளிக்கு சென்று என்னுடைய வாக்கை செலுத்தினேன். அப்போது இந்திய நேரம் காலை 7 மணி. வழக்கம் போல வாக்குப்பதிவு தொடங்கியவுடன் இருக்கும் சொற்ப கூட்டமே இருந்தது, குறிப்பாக கழக கண்மணிகள் முதல் வேலையாக தத்தமது வாக்குகளை செலுத்த நின்றுகொண்டிருந்தனர்.

நான் அந்த பகுதிக்கு அரசியல் ரீதியில் புதியவன், எனது சொந்த ஊர் திருப்பூர், ஆனால் சில மாதங்களுக்கு முன்பே முயற்சிகளின் எடுத்து எனது பெயரை புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறச்செய்து விட்டேன். எனது அடையாளத்தை சந்தேகித்த உள்ளூர் முகவர்களிடம், என்னை சரியான வாகாளர்தான் என அடையாளம் காட்டியவர், எனக்கு பெயர்பட்டியலில் இணைக்க உதவிய எங்கள் பகுதி கௌன்சிளர். அதனால் எதிர்ப்புகள் அடங்க தேர்தல் அதிகாரி எனக்கு கருப்பு மையிட அனுமதித்தார்.

இது நான் வாக்களிக்கும் 4 வது தேர்தல் என்றாலும், வாக்கு இயந்திரத்தை கண்டவுடன் எனது நெஞ்சில் பரபரப்பு, ஒரு ராட்சத அலையில் பயணிப்பதை போல உணர்ந்தேன், ஒரு கணப்பொழுதில், அங்கு இருந்த சலசலப்புக்கள் நிசப்தமாகி மனம் இத்தனை நாளாக, நான் கடுமையாக எதிர்த்த; விமர்சித்த காங்கிரஸ் தலைவர்களையும், மழைபோல நம்பி ஏமாற்றிய சுயநல கலைஞர் ஆகியோர் செய்த ஏமாற்று வித்தைகளையும், அங்கு என் இன மக்கள் தெருக்களில் எழுப்பிய அவல குரல்களையும் காலத்தில் பயணித்து காட்டியது.

இந்த இடைவெளியில், எனது கண்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு நேர் எதிர் சின்னத்தை கண்டுபிடித்திருந்தது. சற்றும் தாமதிக்காமல், எனது படுகொலை செய்யப்படும்; ஒடுக்கப்பட்ட இனத்தின் எதிர்ப்பை பதிவு செய்து விட்டு வெளியேறினேன்.

அங்கு வந்திருந்தவர்களில் பலர் முதியவர்கள், பெண்கள், அவர்கள் யாருக்கு வாகளிபார்கள்? என்ற எண்ணத்தைவிட எனக்கு மேலோங்கிய கேள்வி எங்கே என் இனத்து இளைஞர்கள்?? வாரம்தோறும் வெளியிடப்படும் புதிய தமிழ் சினிமாக்களை பார்ப்பதற்கு அலைமோதும் இளைஞர் பட்டாளம் எங்கே? இரவு பகலாக கணினியில் மாயாது எழுதும் அறிவார்ந்த மக்கள் எங்கே? தேர்தலை ஒட்டி மாதக்கணக்கில் பல மணி நேரங்களை செலவழித்து விமர்சனங்கள்; கேலிகள் செய்த மாந்தர்கள் எங்கே?

முதியவர்களும், பெண்களும் தமிழ்நாட்டில் அனேகமாக தங்கள் வீட்டின் ஆண் மகன் பரிந்துரைக்கும் கட்சிகளுக்கே வாக்களிபார்கள். இவ்வாறு பரிந்துரை செய்பவர்கள் பெரும்பாலும் உடன் பிரப்புக்கலாகவோ ரத்தத்தின் தத்தங்கலாகவோ இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் தத்தமது தலைவர்கள், கருணாநிதியாக இருக்கட்டும், ஜெயலலிதாவாக இருக்கட்டும், அவர்கள் என்னதான் அநியாயங்கள் செய்தாலும் அந்த கட்சிகளுக்கே தங்கள் வாக்குகளையும் தங்கள் குடும்பத்து வாக்குகளையும் அளிப்பவர்கள்.

குறிப்பிட தகுந்த அளவு தங்கள் முதல் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தவிருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள். இவர்களிடம் பரவியிருக்கும் கேள்வி ஏன் விஜய் தேர்தலில் போட்டியிடவில்லை?, நயன்தாரா நமீதாவுக்கு இவர்களிடம் உள்ள அபிமானத்தை காட்ட வாய்ப்பில்லாமல் போனது ஒரு வருத்தமாக தெரிகிறது.

இவற்றை சிந்தித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன், சில உண்மைகள் தெளிவாக புரிந்தது...
- இன்றைய காலகட்டத்தில், படித்த இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊர்களில் இல்லை.
- சொந்த மாநிலத்திலேயும், நாட்டின் பல பகுதிகலேயும், வெளிநாடுகளிலும் வேலை வைப்பு காரணமாக இடம் பெயந்து வாழும் நம் இளைஞர்களில் எண்ணிக்கை மிக அதிகம்.
- இவர்கள் தேர்தலுக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணிப்பது முடியாத காரியம்தான்.
- சொந்த ஊர்களிலேயே இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள்; இருந்தும் வாக்களிக்க மனமில்லாதவர்கள்.

ஆகையால், நான் அவர்களுக்கு வைக்கும் வேண்டுகோள், நீங்கள் ஓட்டு போட முடியவில்லை என்றாலும், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொந்த ஊரில் உள்ள சொந்தங்களிடம் அவர்களை தவறாமல் வாக்களிக்க வேண்டுங்கள், இப்போதைய அரசியல் உண்மைகளை; நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள் நிச்சயம் கேட்ப்பார்கள், என்னிடம் நேற்று முதல் 10 நண்பர்கள்; உறவினர்கள் யாருக்கு ஓட்டு போடுவது? என்று கேட்டார்கள். அது போன்றவர்களை ஊக்கப்படுத்துங்கள்; உதவுங்கள். அப்போது தேர்தல் முடிவுகளை பார்க்க சுவாரச்யமாகவாவது இருக்கும்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

15 comments:

தமிழ் said...

வாழ்த்துகள்
வாக்களிப்பிற்கும்
தங்களின் எண்ண அலைகளுக்கும்

அன்புடன்
திகழ்

தமிழர் நேசன் said...

வணக்கம் திகழ் அவர்களே!

தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்த்துக்களுக்கு நன்றி பல.

ச.பிரேம்குமார் said...

தேர்தல் சமயத்திலும் எதுக்கு மென்பொருள் துறையினரை வம்புக்கு இழுக்கனும் என்று முதலில் யோசித்துக்கொண்டிருந்தேன். காரணங்களை நீங்கள் கடைசியில் சொல்லி விட்டீர்கள். ரொம்ப தூரமில்லாத ஊர்களில் உள்ள நண்பர்கள் வாக்களிப்பதற்காக ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். ஒரு வாரயிறுதிக்கு அருகில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

தேர்தல் நல்லபடியாக நடந்தேறி நல்லாட்சி அமைய வேண்டுக்கொள்கிறேன்

எட்வின் said...

பகிர்வுக்கு நன்றி

நிச்சயமாக... என்னைப் போன்றவர்கள் வாக்களிக்க இயலாமல் தான் இருக்கிறார்கள். ஆனாலும் பலரிடம் தொலை பேசியிலும், மின்னஞ்சல் மூலமும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி இருக்கிறேன். சொல்ல வேண்டியது சொல்லி ஆகி விட்டது. வற்புறுத்தவும் முடியாதே :)

தமிழர் நேசன் said...

//ச.பிரேம்குமார் said...

தேர்தல் சமயத்திலும் எதுக்கு மென்பொருள் துறையினரை வம்புக்கு இழுக்கனும் என்று முதலில் யோசித்துக்கொண்டிருந்தேன். காரணங்களை நீங்கள் கடைசியில் சொல்லி விட்டீர்கள். ரொம்ப தூரமில்லாத ஊர்களில் உள்ள நண்பர்கள் வாக்களிப்பதற்காக ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். ஒரு வாரயிறுதிக்கு அருகில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

தேர்தல் நல்லபடியாக நடந்தேறி நல்லாட்சி அமைய வேண்டுக்கொள்கிறேன் //

வார இறுதியில் வந்திருந்தாள் கண்டிப்பாக இன்னும் நிறைய படித்தவர்கள் வாக்களிக்க உதவியாக இருந்திருக்கும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

தமிழர் நேசன் said...

எட்வின் said...

பகிர்வுக்கு நன்றி

நிச்சயமாக... என்னைப் போன்றவர்கள் வாக்களிக்க இயலாமல் தான் இருக்கிறார்கள். ஆனாலும் பலரிடம் தொலை பேசியிலும், மின்னஞ்சல் மூலமும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி இருக்கிறேன். சொல்ல வேண்டியது சொல்லி ஆகி விட்டது. வற்புறுத்தவும் முடியாதே :)

Saravanaa said...

இந்த பாரத சமுதாயத்தில் ஒருவருக்கு இந்திய குடிமகனுக்கும் அரசால் வழங்க பட்ட தனிப்பட்ட உரிமை வாக்காளர் என்ற ஓட்டுரிமை மட்டுமே அறியாமையால் இருந்து மக்கள் தனிப்பட்ட விதமாக முடிவுகள் எடுக்க ஆரம்பிக்கின்ற இந்த நேரத்தில் தனியார் நிறுவனத்தின் வேலை பார்க்கின்ற அலுவலர்களின் ஓட்டுரிமை மறைமுகமாக பரிக்கபடுகின்றத்தை நினைத்தால் மனம் வேதனைகுள்ளகிறது தேர்தல் நேரத்தில் வாகளர்களுக்கு பணம் கொடுப்பதை சட்டபூர்வமான குற்றம் என்ற அறிவித்த ஆட்சி தனியார் நிறுவனத்திற்கு மட்டும் எப்படி இந்த சலுகைகளை வழங்கலாம் என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது எப்படி என்றல் தேர்தல் நடைபெறும் அன்று வேலைக்கு வருபவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் அதிகமாக கொடுக்கப்படும் என்று அர்விதிருக்கிறது இது எப்படி சாத்தியமாகும் இப்படிதான் ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமைகள் வேரோடு அழிக்கபடுகின்றது தேர்தல் நாளன்று வேலை நடத்தும் தனியார் நிறுவனத்தின் மீது இந்த அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மிக தாழ்மையுடன் விண்ணப்பிகிறோம்.

Suresh said...

மிக அழகான உண்மையான பதிவு ....

//சொந்த ஊரில் உள்ள சொந்தங்களிடம் அவர்களை தவறாமல் வாக்களிக்க வேண்டுங்கள், இப்போதைய அரசியல் உண்மைகளை; நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள் நிச்சயம் கேட்ப்பார்கள், என்னிடம் நேற்று முதல் 10 நண்பர்கள்; உறவினர்கள் யாருக்கு ஓட்டு போடுவது? என்று கேட்டார்கள். அது போன்றவர்களை ஊக்கப்படுத்துங்கள்;//

நானும் எனது அனைத்து நண்பர்களுக்கும் போன் போட்டு வைக்க சொல்லிட்டேன் ஆப்பு ...

தமிழர் நேசன் said...

//Saravanaa said...
இப்படிதான் ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமைகள் வேரோடு அழிக்கபடுகின்றது தேர்தல் நாளன்று வேலை நடத்தும் தனியார் நிறுவனத்தின் மீது இந்த அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மிக தாழ்மையுடன் விண்ணப்பிகிறோம்.//

வணக்கம் சரவணா அவர்களே!

இது போன்ற படித்த அரசியல் நாடகங்களை உணரக்கூடிய (பணத்தேவையை தவிர்க்க முடியாத) இளைஞர்களை வாக்களிக்க விட்டால் தங்கள் அரசியல் வியாபாரத்திற்கு பாதிப்பு என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். அதனால் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற தனியார் நிறுவனங்களை ஊகுவிப்பார்களே அன்றி எந்த நடவடிக்கையும் இருக்காது!!

வருகைக்கும் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள்!

தமிழர் நேசன் said...

//Suresh said...
மிக அழகான உண்மையான பதிவு ....//

நன்றி சுரேஷ் அவர்களே..

//நானும் எனது அனைத்து நண்பர்களுக்கும் போன் போட்டு வைக்க சொல்லிட்டேன் ஆப்பு ...//
கசிகின்ற செய்திகளை பார்த்தால் ஆப்பு பலமாகத்தான் இருக்கும் போல இருக்கிறது.. நன்லதே தாக்கும் பொறுத்திருப்போம்..

Anonymous said...

//இவற்றை சிந்தித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன், சில உண்மைகள் தெளிவாக புரிந்தது...
- இன்றைய காலகட்டத்தில், படித்த இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊர்களில் இல்லை.
- சொந்த மாநிலத்திலேயும், நாட்டின் பல பகுதிகலேயும், வெளிநாடுகளிலும் வேலை வைப்பு காரணமாக இடம் பெயந்து வாழும் நம் இளைஞர்களில் எண்ணிக்கை மிக அதிகம்.
- இவர்கள் தேர்தலுக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணிப்பது முடியாத காரியம்தான்.
//

Though I'm keenly watching the TN politics, I'm sitting in Bangalore and regret not voting in this election.

The law allows one to register as a voter locally if you stay for atleast one year. This perfectly works in a country like US where issues are common throughout the nation.

I've have been in Bangalore for the past 2.5 years but never felt like registering to vote in Bangalore. Being a Tamilian, I'm not interested in deciding whether the Reddy or a Lingayat or a Vokkaliga being selected. The issues in Bangalore are totally out of context for me. My heart lies in voting that on issues close to my heart, for eg the Lankan issue. This hardly matters in Karnataka and how can I vote to Congress or BJP based on this issue?

This is the curse for the so-called software people relocated temporarily due to their profession.

Having highlighted the issue/dilemma faced by educated people and their disinterest or inability to vote, what is the way out?

I think we need to overcome this handicap by inventing a method to vote remotely and securedly.

What I mean is, when I have a voter-card registered in Tamilnadu, I should be able to vote whether I'm in Bangalore or in USA. When we have such a mechanism, there will be much higher voter turnout from eductated people.

I've been thinking of ways like voting through internet by sitting in your home. This is what I mean.

Capture and store the voter's fingerprint in a server while issuing voter id-card.

One the polling day, open a voting session in Election commision's website. Validate one's identity by comparing fingerprint through a fingerprint scanner(Nowadays laptops have fingerprint scanners to login to Vista OS just by swiping your thumb over the scanner). Send this fingerprint to election commision server and on successful validation let the voter cast the vote.

I know this is a rudimentary way of looking at a solution. But we need to come up ideas to over come a problem rather than keeping harping of voter apathy.

தமிழர் நேசன் said...

Thanks for your comments, I wish to have your name atleast. EvenI have thought about such ideas of online voting...

//I've been thinking of ways like voting through internet by sitting in your home. This is what I mean.//

That is possible but in 'India' you may be in soup!! on the election day people come to your place and block you until you cast your valid votes for the party they insist!! this is a small imagination of what could happen, you can expand it!!!
pity.. isn't it?!

That's why these means are not established even in great countries...

Anyway, thanks for sharing your views...

Indian said...

//That is possible but in 'India' you may be in soup!! on the election day people come to your place and block you until you cast your valid votes for the party they insist!! this is a small imagination of what could happen, you can expand it!!!
pity.. isn't it?!
//

True. But still we need to find a solution for our problem.

//That's why these means are not established even in great countries... //

Well, just recall how the mighty US of A fumbled with voting machines (remember, pregnant-chads, different machines and mechanisms in different counties, confusions in declaring result in 2000 presidential election ) whereas India came up with a simple, elegant EVM admired and applauded by the world.

Let this be forum for others also to think of a solution.

I'm of firm opinion that a solution can be invented provided we have a will.

//I wish to have your name atleast. //

Here you go...

-Indian

தமிழர் நேசன் said...

I appreciate that Indian!

Lets invite more viewers to put their ideas to make the online or similar uncoupled voting possible!!

ராஜ நடராஜன் said...

இடுகைக்கு நன்றி.வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையையும் வாக்கெடுப்பில் சேர்க்க வேண்டும்.சேர்த்தால் மாற்றங்கள் இந்திய அரசியலில் வரும் என நம்புகிறேன்.ஆனால் நாட்டுக்குள் இருக்கும் ஆட்களே ஓட்டுப் போட விரும்பாத நிலை அல்லது விரும்பினாலும் ஓட்டுப் போட முடியாத நிலையை நினைக்கும் போது நாம் ஓடும் தூரம் இன்னும் அதிகம்.

Post a Comment