வன்னியில் மக்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது பீரங்கிகளை ஏற்றி இலங்கை இராணுவம் பெற்றுவரும் வெற்றியை கொண்டாடிவரும் சிங்கள காடையர்கள், கொழும்புவில் இருக்கும் தமிழர்களை இராணுவத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தி அவர்கள் அடையாள அட்டையை பரிசோதித்து தமிழன் என்று உறுதிப்படுத்திக்கொண்டு பின் அவர்களை தனிமைப்படுத்தி அவமானப்படுத்துவதாகவும், தமிழர்கள், வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வீடுகளுக்குள் பட்டசுகளை வெடித்து அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன..
இன்று அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தன் மாலை செய்தியில் கொழும்புவில் இருந்து பேசிய ஒரு தமிழரின் செவ்வியை ஒளிபரப்பியது. அதில் அவர் இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
மேலும், சிங்களக்காடையர்கள், இங்கிலாந்து தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து, சாளரங்களின் கண்ணாடிகளை உடைத்ததாகவும், டேவிட் மில்லிபாந்து (இங்கிலாந்து வெளிவிவகார) அமைச்சர் உருவ பொம்மையை எரித்ததாகவும் கூறுகிறார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தும் வாழ்விழந்தும் இருக்கும் நிலையில், தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இத்தகைய கொண்டாட்டங்கள் ஆபத்தின் அறிகுறிகளாகவே பார்க்கப்படுகிறது..
இறந்தவன் பிணத்தின் மீது கொண்டாட்டங்கள் நடத்தும் இவர்களின் மத்தியில் தமிழர்கள் எப்படி தலை நிமிர்ந்து வாழ முடியும் என்ற கேள்வி நம் மனதில் அழுத்தமாக எழுகிறது??!
5 comments:
வேறு என்ன செய்ய வேண்டும?
திரும்பவும் தொடங்கி விட்டார்களா? உக்காந்து பேசச் சொன்ன பரதேசிகள் எங்கு போனார்கள். இது தானே காலம் காலமாய் நடப்பது?
//Anonymous said...
வேறு என்ன செய்ய வேண்டும?//
நீர் யாரென்று தெரியாது.. அனால் இது போன்ற செயல்பாடுகள், சிங்கள இனத்தவர்களுக்கு ஒருபோதும் நற்பெயரைத் தேடித்தராது..
மாறாக, சொந்தா நாட்டு மக்களிடம் அநாகரீகமாக நடந்து கொல்ல்பவர்களில் முதலிடம் கிடைக்கும்..
//பாலா... said...
திரும்பவும் தொடங்கி விட்டார்களா? உக்காந்து பேசச் சொன்ன பரதேசிகள் எங்கு போனார்கள். இது தானே காலம் காலமாய் நடப்பது?//
இது போன்ற செயல்களுக்காக சிங்களவர்கள் வெட்கித்தலை குணிய வேண்டும்.. உலக மக்களிடம் அவர்களுக்கு எள் அளவும் மரியாதை இருக்காது..
இந்த செயலுக்கு சிங்களர்கள் வெட்கப்பட வேய்ந்டியதில்லை, பத்து கோடி தமிழர்கள் இங்கு இருக்க அங்குள்ள தமிழர்களை காக்க இயலவில்லை என்பதை கண்டு நாம் தான் வெட்கப்பட வேண்டும்... இனியாவது அங்கு தமிழர்க்கு சம ஓரிமை கிடைக்க போராடுவோம்....
Post a Comment