Tuesday, February 10, 2009

கலாச்சார சிக்கல் ஏற்படுத்தும் 'பப்' கள் நமக்கு அளிக்கும் பயன்கள் என்ன?!

இன்று நமது நகரங்களில் படமெடுத்து ஆடுகின்ற ஒரு நாகரீகம் பப்புக்கு போதல். இது தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். முதலில் ஆண்கள் வேலை பழு காரணமாக மன அழுத்தத்திற்க்கு ஆளாகிரார்கள் அதனால் பப்புக்கு போனால் தவறில்லை, பெண்கள் சென்றால் தவறு போலத்தான் தெரிகிறது என்றார்கள் ஒரு சாறார். பின் ஆண்கள் மட்டுமா வேலைக்கு செல்கிறார்கள் பெண்களும் தான் அதே வேலைகளை செய்கிறார்கள் அதனால் அவர்களுக்கும் சம உரிமை இருக்கின்ற காரணத்தினால் பெண்களும் பப்புக்கு செல்வது சரியே என்றனர் இன்னொரு சாறார். தற்போது மத்திய பெண் அமைச்சர் ஒருவர் அனைத்து பெண்களும் பப் நிரப்பும் போராட்டதில் ஈடுபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்!

இது இப்படி இருக்க ஒரு விவாதத்தின் போது எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார், நாம் (தமிழர்கள்) கலாச்சாரம் பண்பாடு இவற்றையெல்லாம் கடைபிடித்து எதனை சாதித்தோமெநவும், இது போன்ற தனிமயான இடங்களில் ஆபாச நடனங்களை பணம் உள்ளவர்கள் பார்பதில் ஒன்றும் தவரில்லை. மேலும் ஒரு படி சென்று அவர் சொன்னார் இன்னும் சில இடங்களில் தங்கள் கார் சாவிகளை குலுக்கி ஒன்றை தேர்வு செய்து ஒரு நாள் இரவு மட்டும் தங்களுக்கு கிடைத்த காரையும் அந்த காருக்கு சொந்தக்காறரின் மானைவியையும் (wife swapping) ஓட்டிச் செல்கிறார்கலாம், அது போல இன்னும் பல இடங்களில் நடந்தால், தாம் அதனை வரவேற்பதாகவும் சொன்னார்!!

என் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.

வேலைக்கு செல்பவர்கலுக்கு மன அழுத்தம் இருந்தால் அதற்க்கு மாற்று மருந்து இரவில் குடித்துவிட்டு உறங்காமல் ஆடுவதுதானா?! அப்படியென்றால், பப்புகள் இல்லாத ஊர்களிலும் கிராமங்களிலும் வாழ்பவர்கள் மன அழுத்தத்துடனேயே வாழ்கின்றனரா?

ஆண்களாகட்டும் பெண்களாகட்டும், மன அழுத்தத்தை குறைக்கிறேன் என்ற காரணத்திற்காக ஒரு இடதில் ஒன்று கூடி குடித்து பலருடன் ஆடுவதும் தன்னிலை மறப்பதும் கட்டுப்பாடுகளை மறந்து நடந்து கொள்வதும் - நாளடைவில் மன நிம்மதியை குழைக்குமே ஒழிய குறைக்காது என்பது என் எண்ணம்!

மேலும் பப்புகளில் கிடைக்கும் பல வகையான மது பாணங்களை குடிப்பதும் ஆரோக்கிய கேடான உணவுகளை உண்பதும் நமது ஆரோக்கியத்தை கெடுத்து உடல் நல குறைபாடுகளையும் ஏற்படுதுமே?? குறிப்பாக கர்பினி பெண்கள் சென்றாள் அங்கு உள்ள புகை முதலியன சிசுவுக்கும் பங்கம் விளைவிக்குமே??

இது போன்ற கலாச்சாரம் (சீர்கேடுகள்) நிறைந்த பல மேலை நாடுகளில் இன்று நாம் விவாகரத்துக்களை அதிகமாக காணாக்கூடியதாக இருக்கிறதே?? அதிலும் ஒருவர் ஒருமுறை அல்ல பல முறை விவாகரத்து செய்துகொள்கின்றனர். இதனால் பரவலாக குடும்பம் குழந்தைகளை பேணி வளர்ப்பது வயோதிகர்களுக்கான பராமரிப்பு இவைகளை செய்வது அன்னாட்டு அரசாங்கங்களுக்கு பெரும் சவாலாகவே மாறி வருகிறது. தற்போது குறிப்பாக அமெரிக்கர்கள், தங்கள் அரசாங்கம் தமது பெற்றோர்களை பரமரிக்க வேண்டும் என என்னுவதை அன்னாட்டு ஜனாதிபதி தேர்தல் பிரட்சாரதின்போது உணரமுடிந்தது!! இது எதை நமக்கு உணர்த்துகிறது?!

ஆக நமது நாடும், நமது மன நிலையும், நமது சமுதாயமும் - பல விவாகரத்துக்களையும், அதனால் குழந்தைகளும் வயதானவர்களும் அனாதைகளாக விடப்படும் சூழ் நிலைக்கு தள்ளப்படுவதயும் ஏற்றுக்கொள்ளும் மன இருக்கத்திற்க்கு தம்மை தயார் செய்து கொண்டணரா??

இதை படிபவர்க்கள் தங்கள் கருதுக்களை எழுதினால் சில உண்மைகளை உணர முடியும்!

நன்றி.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

6 comments:

Srinivasan said...

Pub Culture.
How it is became popular? Who's fault it is?

The above question are bothering me. We can do one thing pub is not the only place the culture we are drifting to western. The thing is that, people doesn't know the value of their lives, culture and tradition.

All may say that we are wearing European style clothing. Yet the exposure matters. My teacher said that "When Technology goes up, Man goes down". True statement. People don't have time to realize their values and think in a constructive manner and we help the society. Truth is everybody got time, but we are wasting in knowing Celebrities, i mean cinema, tv , in general the Marketing guys. Our eyes are blinded by the Marketing people (Hero, Heroine, Actors, News, Politics). We need to understand why we born to help ourselves to survive and others to live, after all we are social animal. I dont want to bore anymore. see you in the next post.

Siva said...

Thank you for the comment. Your points really add value to the post.

எட்வின் said...

பப்பிற்கு போறதும் வறதும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பமென்பது எனது கருத்து.ஆனால் அதற்கென பப் நிரப்பும் போராட்டம் எல்லாம் வேல வெட்டி இல்லாத சில காலி பசங்களும், பொண்ணுங்களும் அவர்களாகவே எடுத்துக் கொண்ட முடிவு.

அந்த பெண் அமைச்சர் பப் நிரப்புவோம் என சொன்னதாகத் தெரியவில்லை.பெண்கள் பப்பிற்கு போவதில் எனக்கு பிரச்சினை எல்லை என்று தான் கூறியதாக ஞாபகம்.பப்பினால் மட்டுமே நமது கலாச்சாரம் சீரழிகிறது என்றால் இல்லை.

முன்பு பின்னூட்டமிட்ட நண்பர் ஸ்ரீனிவாசன் சொன்னது போல பிரபலங்களால் இளைஞர்கள் கண்கள் உலகில் இருக்கும் நல்ல பிற விஷயங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ராம்சேனாவும் சில இளைஞர் பட்டாளங்களும் அவர்களுக்கென்றே ஏற்படுத்திக் கொண்ட விளம்பரங்கள் தான் மேங்களூர் நாடகம்.

பெற்றோர்கள் சரி இல்லனா பிள்ளங்க இப்படி தேன் இருப்பாக.

நண்பரே... ஒரு பணிவான வேண்டுகோள். முடிந்த வரை எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க பாருங்கள்.இணையத்தில் இடும் முன் இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழர் நேசன் said...

எட்வின், கருத்துக்கு நன்றி. எழுத்து பிழைகளை மன்னிக்கவும்.

RAMASUBRAMANIA SHARMA said...

இந்த "பப்" கலாச்சாரம் எல்லாம் மேலைநாடுகளின் பாதிப்பு என்றால் அது மிகையாகாது.....ஆனால் இவற்றை கட்டுப்படுத்துவது அவசியமில்லை....எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்...நல்ல பதிவு..

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

Post a Comment