அன்பிற்குரிய மாணவ நெஞ்சங்களே,
நான் உங்களைப்போல ஒரு மாணவனாக இருந்த பொழுது, எனக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு லட்சியங்கள் தோன்றுவதும் பின் மாறுவதுமாக இருந்தது. அதில் ஒன்று அரசியலில் இணைந்து மக்களுக்கு நன்மை செய்வது, சொல்லப்போனால் பெரும்பாலும் தேர்தல் வரும் காலங்களில் பல விதமான பதவிகளுக்கு தலைவர்கள் என்பவர்கள்(!) வாக்கு கேட்டு வருவார்கள், உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர்(M.P), சட்டசபை உறுப்பினர்(M.L.A), தொடக்கம் கவுன்சிலர் வரை எத்தனையோ தேர்தல், இடை தேர்தல் வந்தபோதெல்லாம் அவர்களை பார்த்திருக்கிறேன். மக்கள் கூட்டம் கூடமாக சென்று அவர்கள் திருமுகத்தை பார்ப்பதற்காகவும் சிலர் ஆரத்தி எடுப்பதற்காகவும் இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் கூட வைத்துக்கொள்வார்கள் (அத்துடன் அன்பளிப்புகளும் உண்டு!!) .
ஆனால், தேர்தல் காலங்களில் பல பரபரப்புக்களை ஏற்படுத்தும் இவர்கள், தேர்தல் முடிந்தபின் மொத்தமாய் தொலைந்து போவது எனக்கு ஒவ்வொரு முறையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் பெரியவர்கள் அதை பற்றி கண்டுகொல்லாதவர்கலாய் தெரிந்தனர். எனது பெற்றோர் மற்றும் எங்கள் பகுதியில் இருந்த மக்கள் தங்கள் பகுதிக்கு ஒரு சாக்கடை வசதி வேண்டும் என்று தேர்தல் காலங்களில் காட்சியளிக்கும் அனைத்து தலைவர்களிடமும் மனு கொடுப்பார்கள். பின் வழக்கம் போல் அவ்வப்போது சிறிய குழுவாக சென்று பஞ்சாயத்து போர்டு முன் அதிகாரிகளை பார்த்து மனு கொடுப்பார்கள் ஒரு சில சமயம் சாலை மறியல் கூட செய்திருக்கிறார்கள், எந்த பயனும் இல்லை. (இதுவரை சாக்கடை வரவில்லை என்பது வேறு விஷயம்?!). இது போன்ற நேரங்களில் நாம் ஏன் வளர்ந்து ஒரு நல்ல தலைவனாக கூடாது என்று தோன்றும். பள்ளி கல்லூரி படிக்கும் பொழுது மாணவ தலைவனாக இருந்து செயல்பட்டு ஆறுதலைந்து இருக்கிறேன். ஆனால் கால மாற்றங்களினாலும் இன்னும் இனம்காண முடியாத பல காரணங்களால் இப்போது நானும் ஒரு சராசரி பொது சனமாக மாறி விட்டேன்.
இப்போது மக்களும் விழித்து கொண்டார்கள் என்று நினைக்க தோன்றுகிறது. ஆம் இபோதெல்லாம், மக்கள் வாக்களித்த பின் இவர்களை பிடிக்க முடியாது அதனால் முன்கூட்டியே (Pre-Paid) வருவதை பெற்றுகொள்வது நல்லது என்று நினைத்து விட்டனர் போலும்! ஆனால் மாணவர்களே, இதுதான் ஜனநாயகமா? நமது மக்கள், தங்களது உரிமையான மக்களாட்சியை மறந்து இன்று தங்களுக்கு தாங்களே விளம்பரபடுதிகொண்டு திரியும் போலி அரசியல் வாதிகளிடம் அடிமைகளாகும் நிலை தான் உள்ளது.
இதை யாரும் மறுக்க முடியாது, தாங்கள் மொத்தமாக சுருட்டுவதிலிருந்து தங்களுக்கு கீழே வாழ் பிடிப்பவர்களுக்கு உதிரிகளை திணித்து விளம்பரங்கள் செய்ய தூண்டுகிறார்கள். தொண்டர்களும் தங்கள் கற்பனா சக்திக்கு இயன்ற வரை புது புது பட்டங்களை ('தேச பிதாவே' தொடங்கி 'பாராளுமன்றமே', 'பிடல் காஸ்ட்ரோவே', என 'வாரணம் ஆயிரமே' வரை) சூட்டி மகிழ்கின்றனர்; மகிழ்விக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதை தங்கள் லட்சிமாக கொண்டு அரசியலுக்கு வந்த மாபெரும் தலைவர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு அவர்களின் பெயரில் இயக்கங்களுக்கு பெயர் வைத்துக்கொண்டு தலைவர்கலானவர்கள், இப்போது தங்களுக்கு ஒட்டு போடுவதுதான் மக்கள் கடமை என்று எதிர்பார்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நிலைமை மாறி ஆகா வேண்டும், மாற்றி ஆகா வேண்டும், அது மாணவர்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நினைவில் வைத்து கொள்ளுங்கள், இதை நீங்கள் அறிவீர்களோ இல்லையோ, அவர்கள் அறிவார்கள். இந்த மண்ணை (தமிழ் மண்ணை) ஆழ இனி புதியவர்கள் தேவையில்லை தங்கள் பிள்ளைகளும் வாரிசுகளும் போதும் என்று முடிவு கட்டிவிட்டார்கள் போல தெரிகிறது. தாங்களே T.V சேனல்கள் ஆரம்பிப்பது பின் குழந்தைகள் தொடங்கி, மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் வரை ஆக்கிரமிக்கும் நிகழ்ச்சிகளை ஓயாது திணித்து உங்கள் நேரத்தை பறிக்கின்றனர்! அதில் விளம்பரங்கள் மூலம் பெறும் கொள்ளை லாபத்தையும் தங்களுக்குள் பங்குபோட்டு கொள்கின்றனர்! அதுமட்டுமில்லாமல் தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே ஒலிபரப்பு செய்கின்றனர். இதன் மூலம் மக்களை தங்கள் மாய பிடிக்குள் (Virtual Prison) வைத்திருக்கின்றனர். தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கின்ற 'மன்புமிகுக்கள்' தமிழை சினிமா நட்சத்திர மேடைகளில் நடிகைகளை கௌரவிபதன் மூலம் வளர்க்கிறார்களாம்! (அந்த நடிகைக்கு தமிழே தெரியாது என்பதும் மேடையில் அரைநிர்வாணமாக வந்து அமரும் கலாச்சாரத்தை கடைபிடிப்பவர் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும்?!) இப்படி ஓடி ஓடி தாங்களே திரைப்படங்களையும் தரமின்றி தயாரித்து என் சமுதாயத்தை சீரழிகின்றனர்; மாசுபடுதுகின்றனர்... இது மட்டுமா? இன்னும் தகவல் தொடர்பது சம்பந்தமான மீடியாக்கள் என அனைத்து வழிகளிலும் சொந்த பிரச்சாரத்தை திணித்து திணித்து நம்மை ஆட்டு மந்தைகளாக வளர்த்து வருகின்றனர்.. எல்லாவற்றையும் எழுதமுடியாது நண்பர்களே! விழித்துக்கொள்ளுங்கள்...
நான் உங்களிடம் விடுக்கும் கோரிக்கை எல்லாம், நீங்கள் சுயமாக சிந்தியுங்கள், நமது வரலாற்றில் தங்களை தன்னலமற்ற தலைவர்கள் என நிருபித்த மாபெரும் தலைவர்கள் சொன்ன கருத்துக்களை தேடி தேடி படியுங்கள். ஆம், பேரறிஞர் அண்ணா, கல்வி கண் திறந்த காமராஜர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், போன்றோர் நூல்களை படியுங்கள். நம் தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை!! விவேகானந்தரின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, "விழித்திரு, தனித்திரு, பசித்திரு"...
6 comments:
//ஆனால் கால மாற்றங்களினாலும் இன்னும் இனம்காண முடியாத பல காரணங்களால் இப்போது நானும் ஒரு சராசரி பொது சனமாக மாறி விட்டேன்//
இந்த பதிவு மீண்டும் பழைய ஆசை துளிர் விடுவதின் அச்சாரமாக தெரிகிறது, வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்லுகிற இன்றைய அரசியல் வாதிகள் ஒன்றை மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன், இந்த ஊடக சித்து விளையாட்டு சாதாரண மக்களின் கண்களை மட்டுமே கட்டும்.
ஆனால் உண்மையான தலைமை பண்பு உடையவன், நாளைய சமுதாயத்தை வழிநடத்த போகிறவன், கட்டுண்ட கண்களில் காட்சியை மீட்க போகிறவன் இந்த மாயையில் மயங்குகிறவனாய் இருக்க மாட்டான்.
ஆகவே நீங்களோ நாமோ ரொம்பவும் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் சுட்டி காட்டும் தலைவர்களின் எண்ணம் என்றும் ஈடேறப் போவதில்லை
தங்கள் கருத்துக்கு நன்றி.
அடுத்த நொடியின் நிகழ்வை இரகசிய படுத்தியிருக்கும் காலம் உங்கள் முதல் ஐய்யத்தை தீர்க்கலாம்!! நான் விரும்புவது, அந்த 'சாதாரண' 'கண்கள் கட்டப்பட்ட' மக்களை எழுப்பவும், தலைமை பண்புகள் நிறைந்தவர்களாய் நம் மாணவர்கள் வளரவும் தான் நண்பரே!!
மாணவர்களுக்கு மட்டுமே இந்த அரசியல் சீர்திருத்த வேலை என்று நாம் அமைதியாய் போய் விட முடியாது ..
மாற்றவே முடியாத சில விசயங்களையும் ,சில அரசியல் தலைவர்களையும் பற்றி மட்டுமே நாம் பேசி பயனில்லை.மாற்று கூறாக சிந்தித்து
செயலை முடுக்கி விட வேண்டும்..... அதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்..(ஏனெனில் ,மாணவர்களுக்கு என்று நிறைய வேலைகள் உள்ளன, ஆனால் அவர்கள் அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. சரியான தருணங்களில் அவர்களின் பங்களிப்பு இருக்கும், உதாரணமாக தங்களைப்போல் ,படிப்பை முடித்த பிறகு...)
பதிவு நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள்
உங்கள் கருத்து புரிகிறது! அரசியலை பற்றி நான் ஆழமாக ஆர்வம் செலுத்தவும் அனுமானிக்கவும் தொடங்கி சில காலமே ஆகிறது.. இதை நான் எனது மாணவ பருவத்திலேயே தொடங்கியிருந்தால் ஒரு வேளை இன்று ஒரு நல்ல தலைவர் ஆவதற்கான சரியான பாதையில் இருந்திருக்கலாம். அதனால் நான் இதற்கான வயதிலும் வாய்ப்பிலும் இருக்கும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த இந்த பதிவை செய்தேன்! எனினும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
இப்பொழுது ஒன்றும் கெட்டுவிடவில்லை தோழரே ....உங்களை நோக்கி "ஒரு தலைவன் உதயமாகிறான்" என்று பாடத்தயார் !
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Post a Comment