நான் நேற்று "ஒபாமாவின் புதிய அயல் கொள்முதல் கொள்கை, இந்திய மென்பொருள் துறை இளைஞர்களை பாதிக்கும்; மாற்று வழி என்ன??!" என்ற பதிவை செய்திருந்தேன்.
ஒபாமா அவர்களின் புதிய பொருளாதார மற்றும், வரி விதிப்பு கொள்கைகளினால், மென்பொருள் மற்றும் அயல் கொள்முதல் முறையை சார்ந்து விளங்கும் பிற துறைகளும் எவ்வாறு பாதிக்கபடுகின்றன என்பதை மேற்கோள்களுடனும், புள்ளிவிபரங்கள் மூலமும் எடுத்துக்காட்டி இருந்தேன்.
அது தொடர்பாக நான் எழுப்பிய சில கேள்விகளுக்கு இன்று என்னுடைய சில உளக்கருத்துக்களை('idea') இங்கு பதிவு செய்துள்ளேன்.
நாம் உணர்வது என்ன?
* உலகச்சந்தை சரிவில் இருக்கிறது.
* தினமும் வேலை இழப்பை பற்றி செய்திகளை படிக்கின்றோம்.
* சில நண்பர்களுக்கு வேலை இழப்பு ஏற்ப்படதையும் அறிகிறோம்.
* இன்னும் 24 மாதத்திற்கு இந்த நிலை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
* ஆங்காங்கே, சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
* நிறுவனங்களின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நமது தேவை என்ன?
> தற்ப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை தக்கவைக்க வேண்டும்.
> மாதாமாதம் 'வாங்கிய' கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
> நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தை பேண வேண்டும்.
> இவற்றை தடையின்றி செய்யலாம் என்ற பாதுக்கப்பு உணர்வு வேண்டும்!.
செய்யக்கூடியான சில
# தேவையற்ற விடுப்பு எடுப்பதை தவிர்கவும்.
# பயணம் மேற்கொள்ளவும், இடம் மாறுதல் செய்யவும் தயாராக இருக்கவும்.
# சம்பள உயர்வை எதிர்நோக்க வேண்டாம்.
# சிரமம் பாராமல் கொடுத்த பணியை முடித்து கொடுக்கவும்.
# புதிய நிறுவனங்களுக்கு செல்ல, அவசியம் இன்றி முயல வேண்டாம்.
# புதிய தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவேண்டும்.
# முடிந்த வரை உறப்பத்தியை பெருக்கி வேலைகளை துரிதாமாக செய்து
நிறுவனம் லாபம் ஈட்ட உதவ வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இது, பல நெருக்கடிகளில் இருந்து காக்கும்.
$ குறிப்பாக கடன் அட்டைகள் மூலம் வாங்கிய கடனை அடைக்கவும்.
$ அது போல் மாத சந்தாக்கள் ('E.M.I') அனைத்தையும் அடைக்க முயலவும்.
$ நீங்கள் இருக்கும் வீடு வாடகை அதிகமானதாகவும் தேவைக்குமேல்
பெரிதாகவும் இருந்தால் வேறு குறைந்த வாடகை வீடு பார்க்கவும்.
$ உங்கள் மாத செலவுகளை பட்டியலிடவும்.
$ தேவையானது, அனாவசியமானது என்று பட்டியலை பிரித்துக் கொள்ளவும்.
$ அனாவசியமானதை பட்டியலிலிருந்து நீக்கிவிடவும்.
$ அடிக்கடி வெளியில்('Restaurants') உண்பதை தவிர்க்கவும்.
$ மேலும் என்னென்ன வழிகளில் பணம் விரயமாகுமோ அனைத்தையும் தவிர்க்கவும்.
தயாராக இருங்கள்
இனி ஒரு வேளை பணி இழப்பு ஏற்ப்பட்டால் சந்திக்க, செய்யவேண்டியன...
@ இயன்ற வரை - வேறு துறைகளில் செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
@ தந்தை, சுய தொழில் செய்பவராக இருந்தால், அந்த தொழிலில் ஈடுபடும் மனநிலையை வளர்த்துகொள்வது நல்லது.
@ நண்பர்கள் வேறு தொழில் செய்பவர்களாக இருந்தால், அவர்களுடன் கலந்து அந்த தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை ஓரளவு தடையில்லாமல் பார்த்துக்கொள்ளலாம்..
@ இந்த சந்தர்ப்பத்தை ஒரு தொய்வாக எடுத்துகொள்ளாமல், நமக்கு பிடித்த துறைகளில் ஈடு பட கிடைத்த வாய்ப்பாக எண்ணி, முயற்சி செய்யலாம்.
(என்னை கேட்டால் விவசாயத்துறையில் ஈடு பட விருப்பம்!
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." நினைவிற்கு வருகிறது... )
புதியவர்களுக்கு சில யோசனை
தற்போது வேலைக்காக விண்ணப்பித்து கொண்டிருப்பவர்களுக்கு
^ ஏதாவது பயிற்சி வகுப்புக்களில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
^ ஏதாவது நிறுவனங்களில் வேலை பழகும் வாய்ப்பு கிடைத்தால் உடனே சேரவும். பின்பு உங்கள் திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பை பெறலாம்...
^ இந்த நிறுவனம், இந்த ஊர், வேலை நேரங்கள், என்பதை போல் எந்த கட்டுப்பாடுகளையும் வகுத்துக்கொள்ள வேண்டாம்.
^ ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர் சிபாரிசுடன் முயல்வது நல்லது.
^ உங்கள் கருத்துக்கள் பரிமாறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களே! நீங்களும் உங்கள் உளக்கருத்துக்களை இங்கு பகிர்ந்தால், இந்த பதிவை இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்...
நன்றி.
10 comments:
அருமை. இதே மாதிரி ஆங்கிலத்தில் ஒரு மெயில் வலையில் உலவி கொண்டுள்ளது.
தமிழில் அளித்தமைக்கு நன்றிகள் பல..
ஐயா, வாகளிக்கும் பெருமக்களே! வாக்கை மட்டும் அழித்துவிட்டு அப்படியே போனால் எப்படி?? உங்கள் பிநூட்டத்தையும் அளித்தால் தானே கொஞ்சம் ஊட்டச்சத்து கிடைக்கும்!!
அதை விட, உங்கள் வலைக்கு நானும் வந்து என்னதான் எழுதி இருக்கீங்கன்னு பாக்க முடியும்?!!
டிஸ்கு: அப்படியே, தமிழ்மணத்துளையும் ஒரு குத்து குத்தறது??
useful info....
Vasan
very useful tips-thanks
நண்பரே.. இந்த பதிவு விகடன்.காம் பகுதியில் குட் பிளாக் என பட்டியலிடப்பட்டுள்ளது.
வாழ்த்துகள்.
சுட்டி: http://youthful.vikatan.com/youth/index.asp
அட, ஆமாம்! உங்கள் தகவலுக்கு நன்றி...
எனது பதிவிற்கு வருகை தரும் அனைவருடனும்
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்..
தொடர்ந்து மக்களுக்கு பயன் தரும் செய்திகளை
வெளியிட முயற்சிக்கிறேன்..
விகடனுக்கு நன்றி..
வணக்கம் தமிழர்நேசன்... (நீங்க திருப்பூரா??)
என் வலைத்தளத்திற்கு வந்திருந்தீர்கள்... நன்றி!!!
இக்கட்டுரையை முன்பே படித்திருந்தாலும் பதில் ஏதும் கொடுக்கவில்லை... (வேலையில்லாதவனுக்கு இங்கென்ன வேலைங்கறீங்களா.... ஹி ஹி)
சில யோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது!! ஆனால் நீங்கள் சொன்னது போல, யோசனையெல்லாம் செய்யவராது... ஏதோ உலாத்துவோம்.. அம்புட்டுத்தான்..
ஓட்டு!!!/////
விகடன்லயே வந்தாச்சாம்... நான் கூட ஓட்டு போடாட்டி நல்லா இருக்காது!!!! குத்திடறேன்...
உங்களது பதிவிடும் முறை... ரொம்ப லோட் ஆகுது!!! மாற்றுங்கோ!!! போனமுறை வந்தப்பவே அதனாலதான் ரிப்ளை பண்ணலை!!!
ஆம் ஆதவரே! நான் திருப்பூரைச் சேர்த்தவன் தான்... பொறியியல் படித்ததனால் மென் பொருள் எழுத விதிக்கப்பட்டு(!), சென்னையில் குப்பை கொட்டி வருகிறேன்..
//உங்களது பதிவிடும் முறை... ரொம்ப லோட் ஆகுது!!! //
புரீலீங்களே தம்பி!!
உங்கள் வருகைக்கும் பின்னோடதுக்கும் மிக்க நன்றி !
முடிஞ்ச தமிளிஷ்ல ஒரு வோட்டு போடுங்க :-)
மிக்க நன்று நண்பா!
Post a Comment