Sunday, February 22, 2009

வக்கீல்கள் - போலீஸார் மோதல்; பின்னனியில் நடந்தது என்ன?? ஆதாயம் யாருக்கு??!



செய்திகளை படித்தவர் அனைவருக்கும் எழும் கேள்விகளுக்கு இந்த பதிவு ஓரளவுக்கு விடையளிக்கும் என நம்புகிறேன்...

அடிப்படையாகவே, சுப்ரமணிய சாமி என்பவர் ஈழ போராட்டத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் எதிரானவர். மறுபுறம், வக்கீல்கள், அரசின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் ஈழ தமிழர்களுக்கு தொன்று தொட்டு ஆதரவு தருபவர்கள்.

கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், உங்களுக்கு இரு அணி உருவானது புலப்படும். ஒன்று, தமிழர்களுக்கு ஆதரவான, விடுதலை புலிகளை அங்கீகரிக்கிற அணி. இந்த அணியில் தான் வைகோ, திருமாவளவன் என (இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்), சீமான், வக்கீல்கள் உள்ளனர்...
இனொரு பக்கம் காங்கிரஸ், சுப்ரமணிய சாமி, ஸோ, போன்ற தமிழர் எதிரிகளும் உள்ளனர். சமீப காலமாக வக்கீல்கள் தொடர்ந்து தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்காக பல ஊர்களிலும் போராட்டங்கள், விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை தடுக்க கோரியும், அடக்க கோரியும், காங்கிரஸ் பல முறை ஆளும் தி.மு.க வை சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தனர்! அரசு ( தி.மு.க ) தன்னுடைய விஸ்வாசத்தை காட்டியாக வேண்டிய சூழ்நிலையில், வக்கீல்களை தண்டிக்க காத்திருந்தது.
தி.மு.க வுக்கு சுப்ரமணிய சாமி மீது ராஜிவ் காந்தி காலத்தில் இருந்தே முரண்பாடு இருந்து வந்தது நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்...
மறு புறம் காவல் துறையும், இதற்க்கு முன்னர் சட்ட கல்லூரி விவகாரம் தொடர்பான அவதூறுகளை துடைத்து கொள்ள சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தது...
இந்த சூழ்நிலையில் கருப்பு பூனை படை பாதுக்காப்பில் இருக்கும் சுப்ரமணிய சாமி, தன்னை வெறுப்பவர்கள் இருக்கும் இடத்திற்கே வருவது பஞ்சும் நெருப்பும் அருகருகே வருவதை போன்ற ஒரு நிகழ்வு... இது தன்னிச்சையாக நடப்பது காத்திருபவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமா இல்லையா?? (போலீஸ் அரசாங்கத்தின் (தி.மு.க + காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருப்பதை கவனத்தில் வைக்கவும்!)
இதற்க்கு மேல் என்ன நடந்திருக்கு, என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை...

காரியம் ஆகா வேண்டியவர்களுக்கு காரியம் முடிந்தது. அதாவது,
1. காங்கிரசை திருப்தி படுத்தியாச்சு.
2. தமிழ் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பியாச்சு.
3. தமிழர்களுக்காக போராடும் தலைவர்களின் வேகத்தை சற்று இந்த பிரட்சனையில்
திருப்பி விட்டாச்சு..
4. வக்கீல்கள் இனி சில நாட்களுக்கு போலீசை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள்! (அது உள் விவகாரம் தானே எல்லாம் சரி செய்து விடலாமல்லவா??! ; காவல் துறை அதிகாரியை இடம் மாற்றம் செய்யலாம்...)
5. அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த வக்கீல்கள் இப்போது ஆத்திரத்தின் காரணமாக அங்கங்கே ஓரிரு அது மீறல்கள் செய்து பேரை கெடுத்துக்கொல்வார்கள் (இல்லையேல் இவர்கள் கெடுத்துவிடுவார்கள்)
6. இன்னும் பிற உள் ஆதாயங்களும் உண்டு(!)..



இறுதியில் முட்டிக்கொண்டு மண்டை உடைத்துக்கொண்டு நிற்பவர்கள் போலீசும், வக்கீல்களும் தான். இது ஏற்க்கனவே 'ஆட்சியை தக்க வைக்க', பலர் காலில் விழுந்து ஆட்சியை பாதுகாத்து கொள்வதை விட, போதிய பலம் நிறைந்த காங்கிரஸ் காலை பிடித்தால் பல விதத்தில் லாபம் என்று கணக்கு போட்டு விட்ட தி.மு.க தமிழர் பிரச்சனையில் மெத்தனத்தை கடைபிடித்து பெரும் துரோகத்தை செய்வதை தாங்க முடியாத, எதிரணியில் (தமிழர்கள் பாதுகாப்புக்கு இயக்கம்) இருக்கும் அனைவருக்கும் இப்போது கோபத்தை ஊட்டி இருக்கிறது... அவர்களும் இப்போது வக்கீல்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்..

இவ்வாறாக, அவர் (பெரும் தலைவர்(!)) நினைத்தது நடக்க ஆரம்பித்து விட்டது...

அட தலைவர் சொன்னது உண்மைதான்!! //காக்கியில் இருப்பவரும் கருப்பு சட்டையில் இருப்பவரும் நம்மவரே(!)//

என்ன ஆச்சரியம், அரசியலில் பழம் தின்று பல கொட்டைகள் போட்டவரல்லவா??


பிழையிருந்தால் எடுத்து காட்டவும், சரியாக இருந்தால் ஏற்று கொள்வேன்...

நன்றி...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

12 comments:

Gokul said...

உற்று நோக்கி அலசி ஆராய்ந்து எழுதிய அற்புதமான முக்கியமான பதிவு...
நிறைய பேர் சிந்தனையை இது எட்டவேண்டும் எட்டும் என்றும் நம்புகிறேன்

தொடர்ந்து மிக நல்ல பதிவுகள் சிவா.. வாழ்த்துக்கள்

தமிழர் நேசன் said...

உங்கள் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள் நிறையா விவாதிக்கலாம்..

Anonymous said...

mukkiyamana pathivu. mika arumai. 80000 kodi serthum aasai vidavillai. today he created a great scene in his life time. today he said he will fast if the lawyers and police did not unite. noone report how ruthlessly the great tamilnadu police show it force in the vehicles.

Anonymous said...

அவரை உண்ணா விரதம் இருக்கச் சொல்லுங்கப்பா?

Anonymous said...

Nalla oru katturai vaahzthukal Siva.

Anonymous said...

very funny !

nevertheless, equivalent to the JV / Kumudam Reporters who sit inside their room and write about what was discussed in sonia , jayalalitha, karunanidhi's houses.. !

and dont try to show case our tamilnadu LAWERS as Mr Perfect.. ! ..


//அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த வக்கீல்கள் இப்போது ஆத்திரத்தின் காரணமாக அங்கங்கே ஓரிரு அது மீறல்கள் செய்து பேரை கெடுத்துக்கொல்வார்கள் //

very very funny to hear that அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த வக்கீல்கள் .... !! :) :)

you mean the lawyers?? think about it once again!

its okay to post your views against karunanidhi but never ever try to say that our lawyers are punidha pasu.. ! you need examples?

நாகை சிவா said...

தமிழர் நேசன்! சிறிது நேரம் கழித்து வந்து உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கிறேன்.

நீங்கள் கூறுவதை அனைத்ததையும் ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய வாதமே வேறு.

நாகை சிவா said...

@ தமிழர் நேசன்!

//சிவா, நான் உங்கள் பதிவுகளை சில நாட்களாக ரசித்து படித்து வருகிறேன். உங்கள் அரசியல் ஆர்வமும், பகுப்பாய்வும் பாரட்டதக்கது.//

மிக்க நன்றி. தொடர்ந்து இது போல வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

//நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் இதன் வெளிப்பாடுகளே..

பிழையிருந்தால் எடுத்து காட்டவும், சரியாக இருந்தால் ஏற்று கொள்வேன்...//

நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இதில் வக்கீல்கள் நேர்மையாக நடந்து இருந்தால் இன்னும் அவர்கள் மீது மதிப்பு ஏற்பட்டு இருக்குமா இல்லையா நீங்களே சொல்லுங்க. நீங்க சொன்ன மாதிரி பஞ்சும் நெருப்பும் பத்திக்குச்சு. முட்டையால் அடிச்சாச்சு, கன்னத்திலும் அறைச்சாச்சு. அதை தைரியமாக ஒத்துக் கொள்ள வேண்டியது தானே. தமிழனுக்கு ஏதிராக நடந்தால் இது தான் பரிசாக கிடைக்கும் என்று கர்ஜிக்க வேண்டியது தானே. ஆனால் அதை செய்யவில்லையே அவர்கள். ஒடி ஒளிந்தார்கள். பின்வாசல் வழியை தேடி கடைசியில் இதில் ஜாதியை கொண்டு வந்தார்கள். இது தான் தவறு என்கிறேன்.

நான் கூறியதில் ஏதும் தவறு என்றால் கூறுங்கள் திருத்தி கொள்ளகிறேன்.

நாகை சிவா said...

என்னுடைய வாதம் வேறு என்று கூறியதை தொடர்ந்து இடப்பட்ட பதிவு

http://tsivaram.blogspot.com/2009/02/blog-post_23.html

இதும் தவறு இருந்தால் தயங்காமல் கூறவும். உங்க பதிலுக்காக காத்து இருக்கிறேன்.

தமிழர் நேசன் said...

சிவா! அலுவலக பணி காரணமாக சட்ற்று தாமதமாக பதிலளிக்கிறேன், உங்கள் பதிவை உடனே பார்த்தேன். உங்கள் நேர்மையான, நடுநிலையான கருத்துக்களை நான் முதலில் வரவேற்கிறேன்.
உங்கள் புரிதலுக்காக மேலும் ஒரு படத்தை நான் எனது பதிவில் சேர்த்திருக்கிறேன்..

உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது
//இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது உண்மையாக இருக்கலாம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் படித்த அதுவும் சட்டத்தை படித்த வக்கீலகள் ஏன் இதற்கு பலியாகி இப்படி நடந்துக் கொள்ள வேண்டும்.//

சிவா, நீங்கள் மாணவனாக இருந்தபோது போராட்டங்களில் கலந்துகொள்ளவோ நடத்தவோ தேவை இருந்ததா என்று எனக்கு தெரியாது... ஆனால் எனது அனுபவத்தில் நான் உணர்ந்தது "ஒரு குழுவாக நின்று கோசம் எழுப்பும்போது / திரளும்போது அதிலிருந்து எதிரி மீது கல் எரியும் ஒருசிலர் 'விசமிகள்' இருக்கவே செய்வர்.." இது போன்ற பதட்டமான சூழலை சந்தர்ப்ப வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்தும்போது, பிரச்சினை மேலும் வெடிக்கும்... மோதல் உருவாகும் பொது ஆத்திரம், கோபம் எல்லாம் ஆக்கிரமித்த பிறகு M.A.BL என்ன I.P.S என்ன எல்லா
அறிவும் அமைதியாகி வன்முறை பிறக்கும்..
நான் இப்போது எந்த சாராரையும் குற்றஞ் சொல்ல வில்லை என்பதை கவனியுங்கள்..

//இந்த சம்பவத்தில் இரு தரப்பின் மீது தவறு உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. ஆனால் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டது வக்கீலகள் என்பதை மறுந்து விட கூடாது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.//
பிரட்ச்சனை யாரால் முளைத்தது என்பதை என்னை கேட்டால் யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது என்பதே உண்மை... பல குழுக்களும் உட்பகைகளும் எல்லா தரப்பினரிடமும் உள்ளது என்பது கசப்பான உண்மை.. அதனால் வக்கீல்கள் என்றாலே காடையர்கள் என்றோ போலீஸ்காரர்கள் எல்லாம் காக்கி தரித்த கயவர்கள் என்றோ சொல்ல்வது சரியில்லை...

நாம் இப்போது யார் செய்தது தவறு என்று ஆராய தொடங்குவதே, இந்த கலவரத்தை ஏறப்படுத்தியவர்களுக்கு நாமாக தரும் வெற்றி... ஏனென்றால், 'நியாயம்' என்று பேச ஆரம்பிக்கும் நாம் 'நோக்கத்தை' விடுவோம்... அதாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கும், ஏன் ஒரு துரும்பை எதுத்துப்போடும் யாரையும் பகைத்துக்கொள்ளும் சூழலில் நாம் இல்லை. ஈழ தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் குறிப்பாக வக்கீல்கள், அங்கும் இங்கும் சில வன்முறைகளில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் அதை கோடிட்டு காட்டி தண்டனை வழ்ங்கவேண்டும் என்று கூறி, ஒரு அணியாய் ஒன்று திரண்ட நாம் இப்போது, இவன் இப்படி செய்துவிட்டான் அவனை தண்டியுங்கள் என்று ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி பிரிவது நமது பலத்தை அழிக்கும் குள்ளநரிகளின் தந்திரம் பளிக்கும்..
சற்றே யோசித்துப்பார்த்தால், வக்கீல்களுக்கும் சரி போலீஸ் காரர்களுக்கும் சரி தத்தமது குடும்பம் என்று ஒன்று இருக்கிறது, அவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதின் மூலம் எந்த லாபமும் அடையபோவதில்லை... பாவம், கோர்ட்டை புறக்கணித்து பணிக்கு செல்லாமல், வருமானம் இழந்தும், நம் இனத்திற்க்காக குரல் கொடுக்க முன் வருகின்றனர்.. போலீசில் இருந்தாலும் கலவரம் என்றால் அடிவாங்கிக்கொண்டு அவச்த்தைப்படுகிரார்களே! தனிப்பட்ட முறையில் பார்த்தால் அனைவரும் நல்லவர்கள், இவர்களுக்கு இதன் மூலம் பதவியோ செல்வாக்கோ முளைக்க போவது இல்லை...
கொடுமை என்னவென்றால் இதற்க்கெல்லாம் எதிர்மறையாய் விளங்கும் அரசியல் முதலைகள் ஓட்டு பொறுக்க பலரை பலிகடா ஆக்குவது தான்...

நம் நோக்கமான போர் நிறுத்தத்தை பெற ஒன்றாய் இணைந்து பாடுபடுவோம், நமக்குள் ஒருசிலர் தவறு செய்தால் சுட்டி காட்டி நல்வழிப்படுத்துவோம்... அங்கு சொல்லொனாத் துயர் தாங்கும் நம் இனத்தவரை மீட்டபின்னர், எல்லாவற்றையும் சரி செய்துகொள்வோம்..

இந்த சந்தர்ப்பத்தில் மூளையை தீண்டிவிட்டு யோசிப்பதை விட இதயத்தை முன்னிலைப்படுத்தி, ஒன்றிணைந்து நிற்ப்போம்...

நமக்குள் கருத்து பேதங்கள் இருப்பினும் உணர்வு ஒன்றே...

நன்றி.

நாகை சிவா said...

//சிவா, நீங்கள் மாணவனாக இருந்தபோது போராட்டங்களில் கலந்துகொள்ளவோ நடத்தவோ தேவை இருந்ததா என்று எனக்கு தெரியாது...//

இருந்தது.

// ஆனால் எனது அனுபவத்தில் நான் உணர்ந்தது "ஒரு குழுவாக நின்று கோசம் எழுப்பும்போது / திரளும்போது அதிலிருந்து எதிரி மீது கல் எரியும் ஒருசிலர் 'விசமிகள்' இருக்கவே செய்வர்.." இது போன்ற பதட்டமான சூழலை சந்தர்ப்ப வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்தும்போது, பிரச்சினை மேலும் வெடிக்கும்...//

அந்த புல்லுருவிகளை கண்டு பிடித்து களைய வேண்டும் என்பது என் ஆசை. எங்கள் அனுபவத்தில் அப்படி நடந்து கொண்டோம்.

//அதனால் வக்கீல்கள் என்றாலே காடையர்கள் என்றோ போலீஸ்காரர்கள் எல்லாம் காக்கி தரித்த கயவர்கள் என்றோ சொல்ல்வது சரியில்லை...//

என்னுடைய வார்த்தை அது போல் அமைந்து இருந்தால் தவறுக்கு வருந்துகிறேன். குற்றச்செயலில் ஈடுபட்ட வக்கீல் மற்றும் போலீசாரை மற்றுமே சொல்கிறேன்.

//நாம் இப்போது யார் செய்தது தவறு என்று ஆராய தொடங்குவதே, இந்த கலவரத்தை ஏறப்படுத்தியவர்களுக்கு நாமாக தரும் வெற்றி... ஏனென்றால், 'நியாயம்' என்று பேச ஆரம்பிக்கும் நாம் 'நோக்கத்தை' விடுவோம்... //

அதை தான் நானும் சொல்கிறேன்.

//அதாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கும், ஏன் ஒரு துரும்பை எதுத்துப்போடும் யாரையும் பகைத்துக்கொள்ளும் சூழலில் நாம் இல்லை. ஈழ தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் குறிப்பாக வக்கீல்கள், அங்கும் இங்கும் சில வன்முறைகளில் ஈடுபட்டிருக்கஆனால் அதை கோடிட்டு காட்டி தண்டனை வழ்ங்கவேண்டும் என்று கூறி, ஒரு அணியாய் ஒன்று திரண்ட நாம் இப்போது, இவன் இப்படி செய்துவிட்டான் அவனை தண்டியுங்கள் என்று ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி பிரிவது நமது பலத்தை அழிக்கும் குள்ளநரிகளின் தந்திரம் பளிக்கும்..//

தமிழர்நேசன், என்னுடைய இறுதியாக இப்படி வைக்கிறேன்

மக்கள் ஆதரவு இல்லாத் எந்த புரட்சியும் வெற்றி பெறாது, இது வரை வெற்றி பெற்றதும் இல்லை. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதின் மூலம் மக்களின் ஆதரவு நீர்த்து போகும் வாய்ப்புகள் அதிகம். பெருகி வந்த மக்கள் ஆதரவு சிறிது கலகலத்து வைக்கும் விதமாக தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இதை இப்போதே சரி செய்யாவிட்டால் பின் எல்லாமே வீண் தான்.

Anonymous said...

காவல் துறைக்கு யார் உத்தர விட முடியும். யார் சொன்னால் ஜெயின் ஐயா கேப்பார். அவருக்கு யார் மாநிலத்தில் உத்தரவிட முடியும். யார் உத்தரவிட்டார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அடிக்கிற கை தான் அணைக்கும். எப்படியோ கலைஞர் அணைக்கிறார்...

அடி வாங்கியது தான் வழக்கரினார்களுக்கு மிச்சம்

Post a Comment