இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மனிதச் சங்கிலி போராட்டம்.
இதுவரை மனித சங்கிலிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நடத்திய இயக்கங்கள் கட்சிகள் - மத்தியில் ஆளுகிற காங்கிரஸ் அரசையும், மாநிலத்தில் அந்த அரசை தாங்கிபிக்கும் தூண்களில் ஒன்றான தி.மு.க அரசையும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, போரை நிறுத்த வேண்டும் என்று வலியுரிதின!
அவ்வளவு ஏன், இதே தி.மு.க தான் முதலில் நடத்திய மனித சங்கிலியின்போது மத்திய அரசை போரை நிறுத்த வலியுறுத்தியது?! ஆனால் இப்போது அது அந்த கோசத்தையே கைவிட்டுவிட்டது... மாறாக இலங்கை அரசை வலியுருதுகிரார்கலாம்.. ஏன் இந்த குட்டிகர்னம்?? இந்திய அரசு அழுத்தம் கொடுக்காமல் இந்த போர் நிற்க்கிறது என்று தெரிந்தும், இந்திய அரசு இதுவரை போரை நிறுத்து என்று ஒப்புக்கு கூட சொல்லாத நிலையில் இவர்கள் இந்திய அரசை கண்டிக்காமல், வற்புறுத்தாமல், இலங்கை அரசை வலயுருத்துவது ஏன்??
தி.மு.க வினால் இந்திய அரசை பணியவைக்க முடியும். இலங்கை அரசை ஒருபோதும் பணிய வைக்க முடியாது... போரை நிறுத்த முடியும், அப்பாவித்தமிழர்க்ளை அழிவிலிருந்து காக்க முடியும் ஆனால் அதற்க்கு பதவியையும் ஆட்சியும் துச்சமாக மதிக்க வேண்டும்.. இதை தி.மு.க அரசு செய்தது 'அன்று' ஆனால் 'இன்று'??
மக்கள் சிந்திப்பார்களா??? தி.மு.க வினர் சிந்திப்பார்களா??
"ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு கோரி தி.மு.க. தொண்டர் இன்று தீக்குளிப்பு"
இந்த மாதரி போராட்டங்களை நடத்தும் உங்கள் கட்சியின் நோக்கமும் கலந்து கொள்பவன் நோக்கமும் ஒன்றல்ல. அதுதான் வேதனைக்கு உரியது... கலந்து கொள்பவன் தன் உயிரை கூட துச்சமாக மதித்து தன் குடும்ப நலனை புறம்தள்ளி இன்னொரு உயிரை காக்க தன் உயிர் உதவாதா என்று நினைக்கும், உயிர் துறக்கும் தியாகி எங்கே? போரை நிறுத்தும், பல உயிரை காக்கும் வல்லமை இருந்தும் அவர்களை சாக விட்டு, தன் ஆட்சியை காப்பாற்றி கொண்டும், தன் சுய நலன், குடும்ப நலன், கொழுந்தியா நலன், இன்னும் பிற நலன் பேணும் கட்சி தலைவர்கள் எங்கே??
இனியும் ஏமாளியாக வேண்டுமா?? உறக்கத்தில் இருப்பவன் எவனுக்கும் விடுதலை வாங்கிதரவோ, எவன் உயிரும் காக்கவோ முடியாது..
விழித்துக்கொள் தமிழ் இனமே... உன்னை மன்றாடி கேட்கிறேன்..
4 comments:
தீக்குளிப்பு தேவையா? உண்மையில் தீக்குளிப்பு தன் சுய உணர்வால் ஏற்படுகின்றதா? இல்லை திரைப்படத்தில் கதைக்காக காட்டப்படுவதுபோல் மற்றவர்களின் தூண்டுதலினால் வருகின்றதா? புரியவில்லை....
நண்பரே, தயவு செய்து திரைப்படம், தூண்டுதல் என்று சொல்லி ஒரு அப்பாவியின் தியாகத்தை கேள்விக்குறியாக்க வேண்டாமே!! தீக்குளிப்பதை நான் ஊக்குவிப்பவன் அல்ல. ஆதரிப்பவனும் அல்ல.. இங்கு எனது பதிவுன் மூலம் அழக்கபடுவது யார் எதை செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதே.. தலைவன் என்று தன்னை சொல்லிக்கொள்பவன் ஒரு துரும்பைக்கூட இலக்க தயாராக இல்லை, ஆனால் உண்மைத்தொண்டன் லட்சியத்துக்காக தன் உயிரையும் துறக்க தயாராகிறான்.. அவன் தியாகம் போற்றுதலுக்கு உரியது.. இது போன்ற தொண்டர்கள் முதலில் தன் தலைவர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதே என் பதிவின் நோக்கம்..
கருத்துக்கு நன்றி..
".. கலந்து கொள்பவன் தன் உயிரை கூட துச்சமாக மதித்து தன் குடும்ப நலனை புறம்தள்ளி இன்னொரு உயிரை காக்க தன் உயிர் உதவாதா என்று நினைக்கும், உயிர் துறக்கும் தியாகி எங்கே? போரை நிறுத்தும், பல உயிரை காக்கும் வல்லமை இருந்தும் அவர்களை சாக விட்டு, தன் ஆட்சியை காப்பாற்றி கொண்டும், தன் சுய நலன், குடும்ப நலன், கொழுந்தியா நலன், இன்னும் பிற நலன் பேணும் கட்சி தலைவர்கள் எங்கே??"
neththiyadi ithuthan
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Post a Comment